AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பணத்தை பல மடங்கு உயர்த்த இந்த சில ஃபார்முலாக்களை பயன்படுத்துங்கள்!

Use These Formulas To Grow Your Money | பணத்தை சம்பாதித்து அப்படியே வைத்திருப்பது பொருளாதாரத்தை வலுவாக்க உதவாது. முதலீடு செய்வதன் மூலம் தான் பணம் பல மடங்கு உயரும். அதற்கு உதவும் சில முக்கிய ஃபார்முலாக்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பணத்தை பல மடங்கு உயர்த்த இந்த சில ஃபார்முலாக்களை பயன்படுத்துங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 Jun 2026 17:14 PM IST

பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதாரம் என்பது அனைவருக்கும் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. நிலையான மற்றும் பாதுகாப்பான பொருளாதாரம் வேண்டும் என்றால் பணத்தை பல மடங்கு அதிகரிப்பது மட்டுமே ஒரே வழியாக உள்ளது. அதாவது, பணத்தை முதலீடு செய்து அதன் மூலம் வரும் லாபத்தில் பொருளாதார கட்டமைப்பை உருவாக்க வேண்டும். இந்த நிலையில், பணத்தை மூன்று மடங்காக உயர்த்த உதவும் சில முக்கிய டிப்ஸ்கள் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பணத்தை மூன்று மடங்காக உயர்த்தும் முக்கிய டிப்ஸ்கள்

பணத்தை பல மடங்கு அதிகரிக்க சில முக்கிய டிப்ஸ்கள் உள்ளன. அவற்றை பின்பற்றுவதன் மூலம் பணத்தை பல மடங்கு உயர்த்தி, பொருளாதார பாதுகாப்பை உருவாக்க முடியும்.

ரூல் ஆஃப் 72

பலரும் தாங்கள் முதலீடு செய்த பணம் உடனடியாகவே பலனை தர வேண்டும், இரண்டு மடங்கு உயர வேண்டும் என நினைக்கின்றனர். இந்த நிலையில், முதலீடு செய்யும் பணம் எப்போது இரண்டு மடங்காக உயரும் என்பதை தெரிந்துக்கொள்ள உதவும் விதி தான் இந்த ரூல் ஆஃப் 72. அதாவது, நீங்கள் ஒரு திட்டத்தில் முதலீடு செய்கிறீர்கள், அதற்கு ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது என வைத்துக்கொள்வோம். இந்த நிலையில், 72-ஐ 12 ஆல் வகுக்க வேண்டும். அப்போது விடையாக 6 கிடைக்கும். அதாவது, 6 ஆண்டுகளில், உங்கள் பணம் இரண்டு மடங்கு லாபத்தை எட்டும் என நீங்கள் தெரிந்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : புதிய ஆதார் செயலி அறிமுகம்.. பதிவிறக்கம் செய்து லாக் இன் செய்வது எப்படி?

ரூல் ஆஃப் 114

முதலீடு செய்யும் பணம் எப்போது மூன்று மடங்கு உயர்வை சந்திக்கும் என்பதை தெரிந்துக்கொள்ள இந்த ரூல் ஆஃப் 114 உதவி செய்கிறது. உதாரணமாக ஆண்டுக்கு 12 சதவீதம் வட்டி தரக்கூடிய திட்டத்தில் நீங்கள் முதலீடு செய்கிறீர்கள் என்றால், 114-ஐ 12 ஆல் வகுக்க வேண்டும். அவ்வாறு செய்யும்போது 9.5 என்ற விடை கிடைக்கும். அதாவது, முதலீடு செய்த பணம் மூன்று மடங்கு உயர்வை சந்திக்க 9 ஆண்டுகள், 6 மாதங்கள் ஆகும் என்பது அதற்கு அர்த்தம் ஆகும்.

இதையும் படிங்க : தொடர் சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. காரணம் என்ன?.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

சரியான திட்டமிடலுடன் முதலீடு செய்வதன் மூலம் பொருளாதாரத்தை மிகவும் வலுவானதாக மாற்றலாம். எனவே இத்தகைய விதிகளை பின்பற்றி முதலீடு செய்வது சிறந்த பலன்களை தரும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us