AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கத்தை விட 200 மடங்கு விலைமதிப்பு மிக்க உலோகம்.. கலிஃபோர்னியம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

Costliest Material In The World | தங்கம் அதிக விலைமதிப்பு உள்ளதாக மட்டுமன்றி, தொடர் விலை உயர்வை சந்தித்து வரும் உலோகமாக இருப்பதன் காரணமாக பலரும் தங்கத்தில் முதலீடு செய்கின்றனர். இதன் காரணமாக தங்கம் தான் விலைமதிப்பு மிக்கது என்ற கருத்து உள்ளது.

Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Jun 2026 14:43 PM IST
இந்தியா மட்டுமன்றி, பல்வேறு உலக நாடுகளை சேர்ந்த பொதுமக்கள் தங்கத்தில் முதலீடு செய்து வருகின்றனர். விரைவான வளர்ச்சியை கொடுக்கும் உலோகமாக தங்கம் உள்ளதன் காரணமாக பலரும் இதனை செய்கின்றனர். இதன் காரணமாக தங்கம் தான் மிகவும் விலை உயர்ந்த உலோகம் என பலரும் நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் தங்கத்தை விட அதிக மதிப்புள்ள உலோகம் ஒன்று உள்ளது. 

1 / 5
தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட உலோகம் ஒன்று உள்ளது, அதுதான் கலிஃபோர்னியம். இதன் மதிப்பை எளிமையாக சொல்ல வேண்டும் என்றால், ஒரு கிராம் கலிஃபோர்னியத்தை விற்பனை செய்வதன் மூலம் உங்களால் சுமார் 200 கிராம் தங்கத்தை வாங்க முடியும். அத்தகைய அதிக மதிப்பு கொண்டதாக தான் இந்த கலிஃபோர்னியம் உள்ளது. 

2 / 5
தங்கத்தை விட அதிக மதிப்பு கொண்ட இந்த கலிஃபோர்னியம் இயற்கையாக பூமியில் உருவானது அல்ல. இது மனிதர்களால் ஆய்வகத்தில் உருவாக்கப்பட்ட ஒரு செயற்கையான கதிரியக்க வேதியல் தனிமம் ஆகும். 1950 ஆம் ஆண்டு, அமெரிக்காவின் பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதன் முதலில் இது கண்டுபிடிக்கப்பட்டது. 

3 / 5
இந்த மிகவும் விலைமதிப்பு மிக்க கலிஃபோர்னியம் சர்வதேச சந்தையில் ஒரு கிராம் பல மில்லியன்களுக்கு மேல் விற்பனை செய்யப்படுகிறது. பூமியில் மிகவும் அரிதான உலோகங்களில் ஒன்றாக இருப்பதும், இதனை உருவாக்க தேவைப்படும் அதிநவீன தொழில்நுட்பமும் தான் இதன் விலைக்கு காரணமாக உள்ளது. 

4 / 5
இந்த கலிஃபோரினியத்தை அணு உலைகளில் மட்டுமே உருவாக்க முடியும். அவ்வாறு அணு உலைகள் மூலம் இதனை உற்பத்தி செய்யும் முறை மிகவும் சிக்கலானது. உலகில் உள்ள மிக குறைவான நாடுகளில் உள்ள அணு ஆராய்ச்சி மையங்களில் மட்டுமே இந்த கலிஃபோர்மியத்தை தயாரிக்கும் வசதி உள்ளது. இந்த விலைமதிப்பு மிக்க கலிஃபோர்னியம் மருத்துவம் மற்றும் அறிவியலில் பயன்படுத்தப்படுகிறது குறிப்பிடத்தக்கது. 

5 / 5
Follow Us