AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தொடர் சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. காரணம் என்ன?.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?

Gold Price Reducing Continuously | மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. தற்போது அமெரிக்கா மற்றும் ஈரான் இடையே போர் நிறுத்த பேச்சுவார்த்தை எழுந்துள்ள நிலையில், தங்கம் சரிவை சந்தித்து வருகிறது.

தொடர் சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. காரணம் என்ன?.. இனி வரும் நாட்களில் எப்படி இருக்கும்?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Jun 2026 15:13 PM IST

மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இது பொதுமக்கள் மத்தியில் சற்று குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், மே மாதத்தில் தங்கம் மற்றும் வெள்ளி விலை ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த நிலையில், ஜூன் மாதத்தில் விலை சரிவை சந்திக்குமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது. இந்த நிலையில், இனி வரும் காலங்களில் தங்கம் விலை என்னவாக இருக்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஈரான் போரால் கடும் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வரும் தங்கம் விலை

ஈரான் போர் காரணமாக நிலவி வரும் புவிசார் பதற்றங்கள் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற இறக்கங்களை சந்தித்து வந்தது. இந்த நிலையில் தான் கடந்த சில நாட்களாக தங்கம் மற்றும் வெள்ளி தொடர் சரிவை சந்தித்து வருகிறது. இரண்டு மாதங்களாக நீடித்து வரும் ஈரான் போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், ஈரான் போர் நிறுத்த ஒப்பந்தத்தின் மீது உலக முதலீட்டாளர்கள் மிகுந்த ஆர்வத்துடன் உள்ளனர்.

இதையும் படிங்க : இன்று முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.. பான் கார்டு தளர்வு முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவு வரை.. முழு விவரம்

தொடர் உயர்வை சந்திக்கும் கச்சா எண்ணெய்

ஈரான் போர் நிறுத்தத்தை முதலீட்டாளர்கள் உற்று நோக்கும் நிலையில், தங்கம் மற்றும் வெள்ளி தொடர் சரிவை சந்தித்து வருகிறது. ஆனால், எந்த விதமான சுமூக நடவடிக்கையும் மேற்கொள்ளப்படாததன் காரணமாக சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்வை சந்தித்துள்ளது. அதாவது, கச்சா எண்ணெய் சர்வதேச சந்தையில் 2 முதல் 3 சதவீதம் வரை உயர்வை சந்தித்துள்ளது.

இதையும் படிங்க : போர் பதற்றம் எதிரொலி… வணிக சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்வு!

ஈரான் தனது அணுசக்தி திட்டத்தை கைவிட வேண்டும் என்றும், ஹோர்முஸ் நீரிணையை முழுமையாக திறக்க வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் வலியுறுத்தியுள்ளார். இந்த விவகாரத்தில் சுமூகமான தீர்வு எட்டப்படும் பட்சத்தில் அது தங்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us