போர் பதற்றம் எதிரொலி… வணிக சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்வு!
Commercial Cylinder Price Increased: மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டு வரும் போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு கிடைப்பதில் சிக்கல் எழுந்துள்ளது. இதன் எதிரொலியாக இந்தியாவில் வணிக சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்ட போர் பதற்றம் காரணமாக கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் கிடைப்பதில் சிக்கல் நீடித்து வருகிறது. இதன் காரணமாக வளைகுடா நாடுகளில் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் சமையல் எரிவாயு ஆகியவற்றை ஏற்றி வரும் கப்பல்கள் ஹார்முஸ் பகுதியை கடக்க முடியாத அளவுக்கு ஈரான் அந்த பகுதியை மூடி வைத்துள்ளது. இதன் காரணமாக பல்வேறு நாடுகளில் சமையல் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதில், இந்தியாவும் பிரச்சனைகளை சந்தித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த தட்டுப்பாட்டை சமாளிப்பதற்காக வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் முதலில் குறைக்கப்பட்டது. வீட்டு உபயோக சிலிண்டர்கள் தடையில்லாமல் விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தற்போது வணிக சிலிண்டர்கள் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளது. அதன்படி, வணிக சிலிண்டர் விலை ரூ.46 உயர்ந்து ரூ.3,283-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
கடந்த மாதம் வணிக சிலிண்டர்கள் விலை உயர்வு
இந்த தட்டுப்பாட்டை சரி செய்யும் வகையில் வணிக சிலிண்டர்கள் விநியோகத்தை எண்ணெய் நிறுவனங்கள் அதிகரித்து இருந்தாலும் சிறிதளவு தட்டுப்பாடு ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. அப்போது, சிலிண்டர்களுக்கான விலையும் உயர்த்தப்பட்டு வருகிறது. இதன் காரணமாக வணிக சிலிண்டர்கள் பயன்படுத்தும் உணவகங்கள் மற்றும் சிற்றுண்டி கடைக்காரர்கள் உணவு பொருட்களின் விலைகளை உயர்த்தி உள்ளனர். இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்த நிலையில், கடந்த மாதம் வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர்களை ரூ990.50 காசுகளை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தின.
மேலும் படிக்க: சிலிண்டர் விலை உயர்வு.. மக்களின் துயரை எண்ணி தீர்வை காண வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்




வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதா
அதன்படி ஒரு சிலிண்டர் ரூ.3,237- க்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. ஒவ்வொரு மாத முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்வது வழக்கமாகும். அந்த வகையில், தற்போது மீண்டும் வணிக சிலிண்டர் விலை அதிரடியாக உயர்த்தி எண்ணெய் நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. ஆனால், வீட்டு உபயோக சிலிண்டர்கள் விலையில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிலிண்டர் விலை உயர்வு எதிரொலி
சிலிண்டர்கள் விலை உயர்த்தப்பட்டுள்ளதால் சாதாரண டீ கடைகள் முதல் பெரிய அளவிலான ஹோட்டல்கள் வரை அனைத்திலும் உணவுப் பொருட்களின் விலை தாறுமாறாக உயர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக அனைத்து கடைகளிலும் விலை பட்டியல்கள் புதிதாக வெளியிடப்பட்டுள்ளது. இதனால், வெளியூர்களில் தங்கி இருந்து வேலை மற்றும் கல்வி பயின்று வரும் பலர் உணவகங்களில் சாப்பிட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதில், சில ஹோட்டல்கள் மற்றும் டீ கடைகள் மூடப்பட்டுள்ளதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சென்னையில் PG விடுதி கட்டணங்கள் உயர்வு.. அதிர்ச்சியில் பேச்சுலர்ஸ்..