AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சிலிண்டர் விலை உயர்வு.. மக்களின் துயரை எண்ணி தீர்வை காண வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என அச்சம் நிலவுகிறது. சில உணவகங்களில் ஏற்கனவே தங்களது மெனுவில் சில உணவுகள் கிடைக்காது என அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் சில உணவகங்களில் பிரியாணிக்கு ₹10 வரை மற்றும் பரோட்டா ஒன்றுக்கு ₹5 வரை விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிலிண்டர் விலை உயர்வு.. மக்களின் துயரை எண்ணி தீர்வை காண வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Updated On: 01 May 2026 18:58 PM IST

சென்னை, மே 1, 2026: மக்களின் துயரை எண்ணிப் பார்த்து தீர்வு காண வேண்டும் என தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்துள்ளார். ஒவ்வொரு மாதமும் முதல் தேதியில் எரிவாயு விலை எண்ணெய் நிறுவனங்களால் அறிவிக்கப்படுகிறது. அந்த வகையில், இன்று மாதத்தின் முதல் நாளாக இருப்பதால், எண்ணெய் நிறுவனங்கள் எரிவாயு விலையை உயர்த்தி அறிவித்துள்ளன.

குறிப்பாக, சென்னையில் பயன்படுத்தப்படும் 19 கிலோ எடை கொண்ட வர்த்தக (கமர்ஷியல்) சிலிண்டர் விலை ₹993 இலிருந்து ₹3,237 ஆக உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு வணிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உணவகங்களில் கிடைக்கும் உணவுகள் விலை உயரும் அபாயம்:

வணிக பயன்பாட்டு சிலிண்டர் விலை கடுமையாக உயர்ந்துள்ளதால், உணவகங்களில் உணவுப் பொருட்களின் விலையும் உயரக்கூடும் என அச்சம் நிலவுகிறது. சில உணவகங்களில் ஏற்கனவே தங்களது மெனுவில் சில உணவுகள் கிடைக்காது என அறிவிப்புகள் வைக்கப்பட்டுள்ளன. மேலும், சென்னையில் சில உணவகங்களில் பிரியாணிக்கு ₹10 வரை மற்றும் பரோட்டா ஒன்றுக்கு ₹5 வரை விலை உயர்வு அமல்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தல்:

இந்த நிலையில், தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது பதிவில், “தேர்தலுக்கு முன்பே கணித்தது போல, தேர்தல் முடிந்தவுடன் எரிவாயு விலையை உயர்த்தியுள்ளது மத்திய பாஜக அரசு. உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது அதன் பலனை மக்களுக்கு வழங்கவில்லை. தற்போது போர் போன்ற நெருக்கடியை காரணமாக காட்டி, மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல் விலையை உயர்த்துவது ஏற்க முடியாதது.

மேலும் படிக்க: பரோட்டா ரூ.25 ஆக உயர்வு, பிரியாணி விலை? கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்கள் அறிவிப்பு

இந்த எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு மக்களின் வாழ்வாதாரத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகளை உணர்ந்து, இந்த உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மக்களின் வாழ்வாதாரத்தை காக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார்.

Follow Us