AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பரோட்டா ரூ.25 ஆக உயர்வு, பிரியாணி விலை? கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்கள் அறிவிப்பு

Commercial LPG Price Hike : வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் ஒரு சில ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி விலையில் ரூ.10 உயர்வு, பரோட்டா ரூ.5 அதிகரிப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பரோட்டா ரூ.25 ஆக உயர்வு, பிரியாணி விலை? கேஸ் சிலிண்டர் விலை உயர்வால் உணவகங்கள் அறிவிப்பு
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 01 May 2026 19:06 PM IST

சென்னை, மே 1 : வணிகப் பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை உயர்வு காரணமாக சென்னையில் ஒரு சில ஹோட்டல்களில் உணவுப் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.  சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி விலையில் ரூ.10 உயர்வு, பரோட்டா ரூ.5 அதிகரிப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது வாடிக்கையாளர்கள் குறிப்பாக சென்னை போன்ற பெருநகரங்களில் தங்கி படிக்கும் மற்றும் பணிபுரியும் இளைஞர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையிலான போர் பதற்றம் காரணமாக இந்தியாவில் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து வணிக பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலையை ரூ.993 உயர்த்தி மத்திய அரசு மே 1, 2026 அன்று அறிவித்துள்ளது. ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு உள்ள நிலையில் தற்போது இந்த விலையேற்றம் உணவகங்களை கடுமையாக பாதித்துள்ளது.

இதையும் படிக்க : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. ரூ.3,237-க்கு விற்பனை!

சிலிண்டர் விலை உயர்வால் உணவுகளின் விலை உயர்வு

குறிப்பாக சென்னையில் 19 கிலோ எடை கொண்ட சமையல் எரிவாயு சிலிண்டர் ரூ.2, 246க்கு விற்கப்பட்ட நிலையில், மே 1, 2026 அன்று ரூ.933 அதிகரித்து ரூ. 3,237க்கு விற்கப்படுகிறது. ஏற்கனவே பெரும்பாலான உணவகங்கள் சிலிண்டர் தட்டுப்பாட்டால் 2 மடங்கு கூடுதல் விலை கொடுத்து சிலிண்டர் வாங்கி பயன்படுத்தும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இதனையடுத்து தற்போது இந்த விலை உயர்வு மேலும் அவர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.

இதனால் உணவுகளின் விலை கடுமையாக உயர வாய்ப்பு இருப்பதாக பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக சென்னையில் சில உணவகங்களில் விலை உயர்வு அறிவிப்பை வெளியிட்டுள்ளன. சென்னையில் சில உணவகங்களில் பிரியாணி விலை ரூ. 10 உயர்த்தப்பட்டுள்ளது. அதே போல பரோட்டாவின் விலை கூடுதலாக ரூ. 5 உயர்த்தப்பட்டுள்ளது. இந்த விலை உயர்வு காரணமாக சென்னையில் சில உணவகங்களில் பரோட்டாவின் விலை ரூ.25 ஆக விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலையேற்றம் சாதாரண மக்களை கடுமையாக பாதிக்கும் என கூறப்படுகிறது.

இதையும் படிக்க : சென்னை மெட்ரோ ரயிலில் முக்கிய மாற்றம்.. நாளை முதல் சிங்கார சென்னை அட்டை மட்டுமே செல்லுபடியாகும்..

ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், உணவு பொருட்களின் விலை 10 சதவிகிதம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக வாடிக்கையாளர்களின் வருகை குறைந்துள்ளதாகவும் தற்போது சிலிண்டர் விலை உயர்வு அவர்களுக்கு மேலும் பாதிப்பை ஏற்படுத்தும் என்றும் உணவக உரிமையாளர்கள் கவலை தெரிவித்து வருகின்றனர். இதனால் மத்திய அரசு இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். பிற நகரங்களில் இந்த சிலிண்டர் விலை உயர்வு எதிரொலிக்கும் என கூறப்படுகிறது.

Follow Us