புதிய ஆதார் செயலி அறிமுகம்.. பதிவிறக்கம் செய்து லாக் இன் செய்வது எப்படி?
How To Download and Log In New Aadhaar App | இந்தியாவில் ஏற்கனவே பயன்பாட்டில் இருந்த எம் ஆதார் செயலிக்கு பதிலாக புதிய ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில், இந்த புதிய ஆதார் செயலியை எவ்வாறு பதிவிறக்கம் செய்து லாக் இன் செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் வாழும் இந்திய குடிமக்களுக்கான முக்கியமான ஆவணமாக ஆதார் கார்டு (Aadhaar Card) உள்ளது. ஆதார் கார்டில் திருத்தங்கள் அல்லது மாற்றங்கள் மேற்கொள்ள வேண்டு என்றால் இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் (UIDAI – Unique Identification Authority of India) இணையதளத்திற்கோ அல்லது ஆதார் செயலியையோ பயன்படுத்தலாம். இதற்காக முன்னதாக எம் ஆதார் செயலி (mAadhaar) பயன்பாட்டில் இருந்த நிலையில், அது விரைவில் பொதுமக்கள் பயன்பாட்டில் இருந்து நீக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கு பதிலாக புதியா ஆதார் செயலி அறிமுகம் செய்யப்பட உள்ளது. இந்த நிலையில், இந்த புதிய ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து, லாக் இன் செய்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
புதிய ஆதார் செயலியை அறிமுகம் செய்த அரசு
தேவையற்ற இடங்களில் ஆதார் விவரங்களை பகிர்வதை தடுக்கும் விதமாக இந்த நடவடிக்கையை இந்திய தனித்துவ அடையாள ஆணையம் மேற்கொண்டுள்ளது. ஒரு உணவகத்தில் தங்குவதற்கோ, வயது சரிப்பார்ப்புக்கோ, ஓடிபி பெறுவது உள்ளிட்டவற்றுக்கோ தேவையான விவரங்களை தவிர மற்ற விவரங்கள் பகிரப்படுவதை தடுக்க தான் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற அசத்தல் திட்டங்கள்.. முழு விவரம் இதோ!
புதிய ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்வது எப்படி?
இந்த புதிய ஆதார் செயலி, பயனர்கள் தங்களது விவரங்களை பாதுகாப்பாக வைத்துக்கொள்ள ஏதுவாக வழிவகை செய்யப்பட்டுள்ளது. ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் பயனர்களுக்கு இந்த செயலி கிடைக்கிறது. பயனர்கள் நேரடியாக இந்த செயலிகளை பதிவிறக்கம் செய்து பயன்படுத்த தொடங்கலாம்.
ஸ்டெப் பை ஸ்டெப் கைடு இதோ
- கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோருக்கு செல்ல வேண்டும்.
- செயலியை பதிவிறக்கம் செய்து நீங்கள் எந்த மொழியில் பயன்படுத்த உள்ளீர்கள் என்பதை தேர்வு செய்ய வேண்டும்.
- பிறகு ஆதார் உடன் இணைக்கப்பட்ட உங்களது மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும்.
- பிறகு உங்கள் மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபியை பயன்படுத்து வெரிஃபை செய்ய வேண்டும்.
- பிறகு அந்த செயலி உங்களை Face Authentication செய்ய கூறும். அதனை செய்து முடிக்க வேண்டும்.
- பிறகு செயலிக்கு 6 இலக்க பின் எண்ணை செட் செய்ய வேண்டும். கூடுதல் பாதுகாப்புக்காக பயோமெட்ரிக் லாக் செட் செய்துக்கொள்ளலாம்.
- தேவையான ஆதார் விவரங்களை உள்ளிட்டு மீண்டும் ஓடிபி வைத்து வெரிஃபை செய்ய வேண்டும்.
- வெரிஃபிகேஷம் முடிந்ததும் உங்களது கணக்கு செயல்பாட்டு வந்துவிடும். அந்த செயலி மூலம் நீங்கள் சேவைகளை பெற தொடங்கலாம்.
இதையும் படிங்க : இன்று முதல் அமலுக்கு வரும் புதிய கட்டுப்பாடுகள்.. பான் கார்டு தளர்வு முதல் பயோமெட்ரிக் வருகைப் பதிவு வரை.. முழு விவரம்
மேற்குறிப்பிட்ட முறையை பின்பற்றி மிக சுலபமாக உங்கள் ஆதார் செயலியை பதிவிறக்கம் செய்து லாக் இன் செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.



