ஜூன் 5-ல் ரெப்போ வட்டி விகிதத்தை அறிவிக்கும் ஆர்பிஐ.. எகிரும் எதிர்பார்ப்பு!
RBI To Announce Repo Rate | இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் தொடர்பான அறிவிப்பை ஜூன் 04, 2026 அன்று வெளியிட உள்ளது. தற்போது 6.5 சதவீதமாக உள்ள ரெப்போ வட்டி விகிதம், உயர்த்தப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியாவில் கடன்கள் மற்றும் திட்டங்களுக்கான வட்டி விகிதத்தை நிர்ணயிக்கும் முக்கிய அம்சமாக ரெப்போ வட்டி (Repo Rate) விகிதம் உள்ளது. ரெப்போ வட்டி விகிதத்தை இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank of India) தீர்மாணிக்கும். ஒவ்வொரு முறையும் நாணய கொள்கை குழுவை கூட்டி ரெப்போ வட்டி தொடர்பான நிலைப்பாட்டை அறிவிக்கும். அந்த வகையில், ஜூன் 05, 2026 அன்று இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை வெளியிட உள்ளது. இந்த நிலையில், ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தாமல் அதே அளவில் கடைபிடிக்க திட்டமிட்டுள்ளதாக பரவலாக கூறப்படுகிறது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜூன் 5 ஆம் தேதி ரெப்போ வட்டியை அறிவிக்கும் ஆர்பிஐ
இந்திய ரிசர்வ் வங்கியின் நாணய கொள்கை குழு கூட்டம் இன்று தொடங்கியுள்ளது. மூன்று நாட்கள் நடைபெறும் இந்த கூட்டம் ஜூன் 05, 2026 அன்றுடன் நிறைவடைய உள்ளது. இந்த கூட்டத்தின் நிறைவில், இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா ரெப்போ வட்டி விகிதம் குறித்து அரிவிப்பை வெளியிடுவார். தற்போதைய ரெப்போ வட்டி விகிதம் 6.5 சதவீதமாக உள்ளது. இந்த நிலையில், ரெப்போ வட்டி மேலும் உயர்த்தப்படுமா அல்லது குறைக்கப்படுமா என்பது குறித்து எதிர்ப்பார்ப்பு எழுந்துள்ளது.
இதையும் படிங்க : கை கடன் வாங்கியுள்ளீர்களா?.. மோசடி நடந்தால் இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்.. முழு விவரம்!




ரெப்போ வட்டியை மாற்ற திட்டமில்லை?
தற்போதைய சூழலில் ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் செய்யாமல் அப்படியே கடைபிடிக்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அவ்வாறு, ரெப்போ வட்டி விகிதத்தில் எந்த வித மாற்றமும் ஏற்படவில்லை என்றால் கடன் விகிதங்களில் எந்தவித தாக்கமும் இருக்காது. தற்போது வரை எவ்வளவு கடன் செலவுகளை மேற்கொள்கிறீர்களோ அதே நிலை தான் தொடரும்.
இதையும் படிங்க : வருமான வரி செலுத்துவதில் இவ்வளவு பலன்கள் உள்ளதா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
ஒருவேளை ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை உயர்த்தினால் கடன்களுக்கான வட்டி விகிதம் உயரும். இதன் மூலம் கடனை திருப்பி செலுத்துவதற்கான செலவுகள் அதிகரிக்கும். இந்த நிலையில், ரெப்போ வட்டி விகிதம் குறித்து இந்திய ரிசர்வ் வங்கியின் எதிர்ப்பார்ப்பை எதிர்ப்பார்த்து மொத்த நாடும் காத்திருப்பது குறிப்பிடத்தக்கது.