AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வருமான வரி செலுத்துவதில் இவ்வளவு பலன்கள் உள்ளதா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

Benefits of Paying Income Tax | இந்தியாவில் வருமான வரி செலுத்த வேண்டிய முறை உள்ளது. வரி செலுத்தும் பலரும் தங்களது பணத்தை அரசுக்கு கொடுப்பதாக நினைக்கின்றனர். ஆனால், உண்மையில் வருமான வரி செலுத்துவதின் மூலம் சில பலன்களை பெற முடியும்.

வருமான வரி செலுத்துவதில் இவ்வளவு பலன்கள் உள்ளதா?.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 Jun 2026 22:26 PM IST

இந்தியாவில் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஆண்டு வருமானம் ஈட்டும் நபர்கள் வருமான வரி (Income Tax) செலுத்த வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. தற்போது இந்தியாவில் வருமான வரி செலுத்துவதற்கான காலம் தொடங்கியுள்ள நிலையில், பலரும் வருமான வரி செலுத்துவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். மக்கள் பலரும் வரி செலுத்துவது தங்களது பணத்தை அரசாங்கத்திற்கு வழங்குவது என நினைக்கின்றனர். ஆனால், வருமான வரி செலுத்துவதன் மூலம் பல நன்மைகள் கிடைக்கும். அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

வருமான வரி செலுத்துவதால் கிடைக்கும் நன்மைகள்

வருமான வரி தாக்கல் செய்யும் நபர்களுக்கு கிடைக்கும் முக்கியமான நன்மைகள் என்ன என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

கடன் வாங்குவது எளிதாகும்

வங்கியில் வீட்டு கடன், தனிநபர் கடன், வாகன கடன் உள்ளிட்டவற்றுக்கு விண்ணப்பிக்கும்போது அவர்கள் உங்களிடம் கடந்த சில வருடங்களில் நீங்கள் தாக்கல் செய்த ஐடிஆர் படிவங்களை கேட்பார்கள். ஒருவருக்கு நிலையான வருமானம் வருகிறதா, வாங்கும் கடனை திருப்பி செலுத்தும் ஆற்றல் ஒருவருக்கு உள்ளதா என்பதை உறுதி செய்யும் அம்சமாக ஐடிஆர் தாக்கல் உள்ளது. ஒருவேளை நீங்கள் வருமான வரி தாக்கல் செய்யவில்லை என்றால் நீங்கள் கேட்ட கடன்  தொகை கிடைக்காமல் போவதற்கு வாய்ப்பு உள்ளது.

இதையும் படிங்க : ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபருக்கு எவ்வளவு வங்கி கடன் கிடைக்கும்?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

டிடிஎஸ் வரி

பொதுமக்களின் சம்பளத்தில் இருந்து அல்லது அவர்கள் செய்த முதலீடுகளில் டிடிஎஸ் என்ற பெயரில் சற்று அதிகமான பணத்தை வரியாக பிடிப்பார்கள். இந்த நிலையில், இவ்வாறு பிடித்தம் செய்யப்படும் டிடிஎஸ் வரியில் நீங்கள் டேக்ஸ் ரீஃபண்ட் பெற வேண்டும் என்றால் வருமான வரி தாக்கல் செய்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அப்போது தான் உங்கள் வங்கி கணக்கிற்கு ரீஃபண்ட் பணம் வரும்.

இதையும் படிங்க : பிள்ளைகளின் எதிர்காலத்தை பாதுகாப்பானதாக மாற்ற அசத்தல் திட்டங்கள்.. முழு விவரம் இதோ!

விசா விண்ணப்பம்

சுற்றுலா செல்ல, வேலைக்கு அல்லது படிப்புக்காக நீங்கள் வெளிநாடுகளுக்கு செல்ல விரும்பினால், நீங்கள் செல்ல விரும்பும் நாடு உங்களது நிதி நிலமை என்ன, நீங்கள் அந்த நாட்டில் வசிப்பதற்கான பொருளாதாரத்தை கொண்டுள்ளீர்களா என்று சோதனை செய்யும். இந்த நிலையில் தான், நீங்கள் பொருளாதார ரீதியாக உறுதியான நபர் என்பதை உணர்த்தும் முக்கிய அம்சமாக வருமான வரி தாக்கம் அமையும்.

Follow Us