நகை கடன் வாங்கியுள்ளீர்களா?.. மோசடி நடந்தால் இந்த விஷயங்களை தவறாமல் செய்யுங்கள்.. முழு விவரம்!
Scam Happened To Your Gold Jewellery | இந்தியாவில் பெரும்பாலான மக்கள் தங்க நகை கடன் வாங்குகின்றனர். இந்த நிலையில், தங்க நகைகளை வைத்து கடன் வாங்கும்போது அந்த தங்க நகைகளை வைத்து ஏதேனும் மோசடிகள் நடைபெற்றால் என்ன செய்வது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்.
இந்தியாவில் சில வகை கடன்கள் மிகவும் பிரபலமாக உள்ளன. அதாவது தனிநபர் கடன் (Personal Loan), வீட்டு கடன் (Home Loan), நகை கடன்களை (Gold Loan) பெரும்பாலான நபர்கள் தேர்வு செய்கின்றனர். அதிலும் குறிப்பாக நகை கடனை தான் பலரும் தேர்வு செய்கின்றனர். இதற்கு காரணம், மற்ற கடன்களை விடவும் நகை கடனுக்கு குறைவாக வட்டி வழங்கப்படுகிறது. இதன் காரணமாக தாங்கள் வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்தில் வாங்கிய தங்க நகைகளை அடகு வைத்து பலரும் நகை கடன் வாங்குகின்றனர். இந்த நிலையில், வங்கிகளில் மோசடி நடைபெற்றால் பாதிக்கப்பட்டவர்கள் என்ன வழிமுறைகளை பின்பற்றி நகைகளை மீண்டும் பெறலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சட்ட ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்
வாடிக்கையாளர்கள் வங்கியில் அடமானம் வைத்த நகைகள் தொடர்பாக மோசடிகள், நகை மாற்றம், நகை காணாமல் போவது அல்லது போலி நகைகள் திருப்பி கொடுக்கப்படுவது உள்ளிட்ட பிரச்னைகளை எதிர்க்கொண்டால் அவற்றை குறித்து சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்ளும் உரிமை உள்ளது.
இதையும் படிங்க : போர் பதற்றம் எதிரொலி… வணிக சிலிண்டர்களின் விலை மீண்டும் உயர்வு!
என்ன என்ன நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்?
வங்கிகளில் நகை கடன் பெற்றவர்கள் ஏதேனும் மோசடியில் தங்களது நகையை இழந்துவிட்டால் இந்த சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம்.
எழுத்துப்பூர்வமாக புகார் அளித்தல்
வங்கியின் கிளை மேலாளரிடம் எழுத்துப்பூர்வமாக புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்கும்போது புகாரின் நகல் பெறப்பட்டதற்கான ஒப்புகை சீட்டை வாங்கி வைத்துக்கொள்வது மிகவும் அவசியமாகிறது. புகார் அளிக்கும்போது நகை அடகு வைத்த ரசீது, நகை விவரங்கள், புகைப்படங்கள் இருந்தால் புகாருடன் இணைப்பது சிறப்பானது.
இதையும் படிங்க : பைக் vs ஸ்கூட்டி: மைலேஜில் இரண்டுக்கும் ஏன் இவ்வளவு வித்தியாசம்? உண்மை என்ன?
உயர் அதிகாரிகளிடம் முறையிடல்
புகார் அளித்து கிளை அளவில் தீர்வு கிடைக்காவிட்டால் வங்கியின் பிராந்திய அலுவலகம் அல்லது குறை தீர்க்கும் செல்லுக்கு புகார் அனுப்பலாம். இதற்காக பெரும்பாலான வங்கிகளில் ஆன்லைன் புகார் வசதியும் உள்ளது.
காவல்துறையிடம் புகார் அளித்தல்
காவல் நிலையத்திற்கு சென்று மோசடி, நம்பிக்கை மோசடி, போலி ஆவணம், திருட்டு போன்ற குற்றங்கள் இருந்தால் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய கோரி கேட்கலாம். ஒருவேளை முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய மறுத்தால் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அல்லது நீதிமன்றத்தை அணுகலாம்.