AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓய்வு காலம் குறித்த கவலையே வேண்டாம்.. மாதம் ரூ.20,500 வருமானம் பெறலாம்.. இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

Get 20,500 As A Monthly Income In Your Retirement | மனிதர்கள் தங்களது வாழ்நாள் முழுவதும் நிதி பாதுகாப்பை பெற்றிருக்க வேண்டும் என்பது அத்தியாவசியமாக உள்ளது. இந்த நிலையில், ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20,500 பெற உதவும் அசத்தல் திட்டம் குறித்து பார்க்கலாம்.

ஓய்வு காலம் குறித்த கவலையே வேண்டாம்.. மாதம் ரூ.20,500 வருமானம் பெறலாம்.. இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Jun 2026 22:06 PM IST

ஒவ்வொரு தனி மனிதரும் தங்களுக்கான நிதி பாதுகாப்பை உருவாக்கி வைத்துக்கொள்ள வேண்டியது மிகவும் அவசியமாகிறது. இளம் வயதில் இருக்கும் நபர்கள், பணியில் இருக்கும் நபர்கள் ஆகியோருக்கே இது கட்டாயமாக உள்ள நிலையில், பணி ஓய்வு பெற்று வருமானம் இல்லாமல் இருக்கும் நபர்களுக்கு இது மிகவும் அவசியமான ஒன்றாகும். காரணம், முதுமை காலத்தில் வருமானம் இருக்காது என்பதால் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை கூட பூர்த்தி செய்ய முடியாத சூழல் உருவாகும். இந்த நிலையில் தான், பணி ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு பல்வேறு திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளன. அத்தகைய ஒரு திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் முதியவர்கள் தங்களது பணி ஓய்வு காலத்தில் மாதம் ரூ.20,500 வரை வருமானம் பெற முடியும். அது என்ன திட்டம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அரசு வழங்கும் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்

பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்காக அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் மூத்த குடிமக்களுக்கான பிரத்யேக திட்டமாக உள்ளது தான் மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் (SCSS – Senior Citizen Saving Scheme). இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் மூத்த குடிமக்கள் தங்களது பணி ஓய்வின் போது யாருடைய உதவியும் இன்றி மாதம் மாதம் குறிப்பிட்ட தொகையை பெற முடியும். இந்த நிலையில், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டத்தில் மாதம் ரூ.20,500 வருமானம் பெறுவது எப்படி என பார்க்கலாம்.

இதையும் படிங்க : பிளாஸ்டிக் ரூபாய் நோட்டுகளை அறிமுகம் செய்யும் ஆர்பிஐ?.. காரணம் என்ன?

மாதம் ரூ.20,500 வருமானம் பெறுவது எப்படி?

அஞ்சலங்கள் மூலம் வழங்கப்படும் இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 8.2 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தின் முதிர்வு காலம் மொத்தம் 5 ஆண்டுகள் ஆகும். இந்த திட்டத்தில் குறைந்தபட்சம் ரூ.1,000 முதல் அதிகபட்சம் ரூ.30 லட்சம் வரை முதலீடு செய்யலாம். இந்த திட்டத்தில் ஒருவர் ரூ.30 லட்சம் முதலீடு செய்கிறார் என வைத்துக்கொள்வோம். இந்த திட்டத்தில் ஒவ்வொரு காலாண்டு ஒருமுறை வட்டி வரவு வைக்கப்படும். அந்த வகையில் ரூ.30 லட்ச முதலீட்டுக்கு மூன்று மாதங்களுக்கு ஒருமுறை வட்டியாக மட்டுமே ரூ.61,500 கிடைக்கும். அதனை ஒவ்வொரு மாதத்திற்கும் பிரித்தால் சராசரியா ரூ.20,500 கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us