இந்த ஆண்டு பிஎஃப் வட்டி தாமதமாக வரவு வைக்கப்படுமா?.. வெளியான முக்கிய தகவல்!
PF Interest For 2025 - 2026 Financial Year | ஒவ்வொரு நிதியாண்டுக்கும் ஜூன் அல்லது செப்டம்பர் மாதத்தில் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கும். அந்த வகையில், இந்த நிதியாண்டும் அதே காலக்கட்டத்துக்குள்ளாக வரவு வைக்க உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான அட்டகாசமான திட்டமாக ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) உள்ளது. இந்த அமைப்பின் கீழ் ஊழியர்களின் மாத ஊதியத்தில் இருந்து குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்பட்டு அது மாதம் மாதம் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். இந்த பணத்தை ஊழியர்கள் எப்போது வேண்டுமானாலும் எடுத்து பயன்படுத்திக்கொள்ளலாம். ஒருவேளை ஊழியர் தனது பிஎஃப் பணத்தை எடுக்கவில்லை என்றால் அந்த பணத்துக்கான வட்டியும் வரவு வைக்கப்படும். இந்த நிலையில் தான், பிஎஃப் வட்டி வரவு வைக்கப்படுவது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.
8.25 சதவீதமாகவே நீடிக்கும் பிஎஃப் வட்டி
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் 2025 – 2026 ஆம் நிதியாண்டுக்கான பிஎஃப் வட்டி விகிதத்தை 8.25 சதவீதமாக தொடரும் என நிர்ணயம் செய்துள்ளது. அதாவது, ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் இருக்கும் பணத்திற்கு இந்த நிதியாண்டும் 8.25 சதவீதம் வட்டி வழங்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் பிஎஃப் வட்டி நேரடியாக ஊழியர்களின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் நிலையில், இந்த ஆண்டு இன்னும் வரவு வைக்கப்படாமல் உள்ளது. அது குறித்த முக்கிய தகவல் தான் தற்போது வெளியாகியுள்ளது.
இதையும் படிங்க : 85% வரை எத்தனால்… இந்தியாவின் முதல் E85 கார் – WagonR காரில் என்ன ஸ்பெஷல்?




லட்சக்கணக்கான கணக்குகளை சரிப்பார்க்கும் நடைமுறை
2026 மார்ச் மாதம் ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் மத்திய அறங்காவலர் குழு, 8.25 சதவீத வட்டிக்கு ஒப்புதல் வழங்கியது. இதனை தொடர்ந்து லட்சக்கணக்கான கணக்குகளை சரிப்பார்த்து, புதுப்பிக்கும் செயல்முறையை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மேற்கொண்டு வருகிறது. இந்த செயல்முறைக்கு சிறிது காலம் தேவைப்படுவதன் காரணமாக தான், இன்னும் சில உறுப்பினர்களுக்கு பிஎஃப் வட்டி வரவு வைக்கப்படாமல் உள்ளது.
இதையும் படிங்க : பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7% வரை வட்டி தரும் எஸ்பிஐ.. சிறப்பு திட்டமும் உள்ளது!
வழக்கமாக பிஎஃப் வட்டி தொகை ஜூன் மற்றும் செப்டம்பர் மாதங்களில் ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வரவு வைக்கப்படும். எனவே, இந்த ஆண்டும் அதேபோல ஊழியர்களின் பிஎஃப் கணக்கில் வட்டி வரவு வைக்கப்படும் என்றும் ஊழியர்கள் அது குறித்து கவலையடைய தேவை இல்லை என்றும் கூறப்படுவது குறிப்பிடத்தக்கது.