AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

85% வரை எத்தனால்… இந்தியாவின் முதல் E85 கார் – WagonR காரில் என்ன ஸ்பெஷல்?

இந்தியாவின் முதல் E85 கார் என அறிமுகப்படுத்தப்பட்டுள்ள மாருதி சுசூகியின் இந்த புதிய வேகன் ஆர் கார், E85 வகை எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டது. அதாவது, 85 சதவிகிதம் எத்தனால் மற்றும் 15 சதவிகிதம் பெட்ரோல் கலவையுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

85% வரை எத்தனால்… இந்தியாவின் முதல் E85 கார்  – WagonR காரில் என்ன ஸ்பெஷல்?
இந்தியாவின் முதல் E85 கார்
Karthikeyan S
Karthikeyan S | Published: 04 Jun 2026 18:03 PM IST

உலக சுற்றுச்சூழல் தினத்தை முன்னிட்டு, இந்தியாவின் முதல் ஃபிளெக்ஸ் ஃபியூல் ( Flex Fuel) எனப்படும் மாற்று எரிபொருள் மூலம் இயங்கும் கார் என்ற பெருமையை பெற்றுள்ள மாருதி சுசூகி வேகன் ஆர் ஃபிளெக்ஸ் ஃபியூல் ( Maruti Suzuki WagonR ஃபிளெக்ஸ் ஃபியூல்) காரை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி மற்றும் மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரிஆகிய இருவரும் இணைந்து அறிமுகப்படுத்தினர். இந்த காரில் உள்ள சிறப்பம்சங்கள் குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

மாருதி சுசூகியின் இந்த புதிய வேகன் ஆர் கார், E85 வகை எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டது. அதாவது, 85 சதவிகிதம் எத்தனால் மற்றும் 15 சதவிகிதம் பெட்ரோல் கலவையுடன் இயங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்தியா வழக்கமான எரிபொருள் பயன்பாட்டிலிருந்து சுற்றுச்சூழலுக்கு ஏற்ற மாற்று எரிபொருள் பயன்பாட்டை நோக்கி முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது.

இதையும் படிக்க : பணத்தை பல மடங்கு உயர்த்த இந்த சில ஃபார்முலாக்களை பயன்படுத்துங்கள்!

ஃபிளெக்ஸ் ஃபியூல் கார்

ஃபிளெக்ஸ் ஃபியூல் வாகனங்கள் என்பது பெட்ரோலுடன் எத்தனால் கலந்து பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட காராகும். இது E20 முதல் E85 வரை எத்தனால் கலந்த எரிபொருளில் இயங்கும் திறன் கொண்டவை. அதாவது 25 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை பல்வேறு அளவுகளில் எத்தனால் கலந்த எரிபொருள் கொண்டு இந்த கார் இயங்கும். இதனால் பெட்ரோல் பயன்பாடு வெகுவாக குறைவதுடன், கச்சா எண்ணெய் இறக்குமதியில் மீதான இந்தியா மீதான அழுத்தம் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வழக்கமாக நாம் பயன்படுத்தும் பெட்ரோல் கார்களுடன் ஒப்பிடும்போது, ஃபிளெக்ஸ் ஃபியூல் காரில் பல்வேறு தொழில்நுட்ப அம்சங்களுடன் வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக எத்தனால் எரிபொருளில் இயங்கக் கூடிய அளவுக்கு வடிமைக்கப்பட்டுள்ளது. மேற்சொன்னபடி 25 சதவிகிதம் முதல் 85 சதவிகிதம் வரை எத்தனால் அளவில் மாறுபட்டாலும் காரின் என்ஜின் பாதிக்காத அளவுக்கு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : தங்கத்தை விட 200 மடங்கு விலைமதிப்பு மிக்க உலோகம்.. கலிஃபோர்னியம் குறித்து உங்களுக்கு தெரியுமா?

இதுகுறித்து பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இந்தியா ஆண்டுதோறும் மிக்பெரிய அளவில் கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்து வருகிறது. எத்தனால் போன்ற இயற்கை எரிபொருட்கள் கச்சா எண்ணெய் பயன்பாட்டை குறைக்கும். ஃபிளெக்ஸ் ஃபியூல் வாகனங்கள் விவசாயிகளுக்கு புதிய வருமான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், நாட்டின் எரிசக்தி பாதுகாப்பையும் வலுப்படுத்தும்” என்றார்.

Follow Us