மாறாத ரெப்போ வட்டி விகிதம் – கடன் வாங்கியவர்களுக்கு பாதிப்பா? உண்மை என்ன?
RBI Repo Rate : இந்திய ரிசர்வ் வங்கியின் நாணயக் கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 5.25 என்ற விகிதமாக தொடரும் என அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் 3வது முறையாக ரெப்ப வட்டி விகிதம் மாற்றமில்லாமல் தொடரும் நிலையில் இதனால் கடன் வாங்கியவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்துமா என்ற பலருக்கும் கவலை இருக்கிறது.
இந்திய ரிசர்வ் வங்கியின் சார்பில் ஜூன் 5, 2026 அன்று நடைபெற்ற நாணயக் கொள்கை குழு கூட்டத்தில் ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவிகிதமாக தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மூன்றாவது முறையாக ரெப்போ வட்டி விதிகம் மாற்றமில்லாமல் தொடரும் நிலையில், ஹோம் லோன், கார் லோன என கடன் வாங்கியுள்ளவர்களுக்கு இது எந்த வித தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற கேள்வி எழுந்துள்ளது. இதனால் கடன் வாங்கியவர்களின் மாதத் தவணை அதிகரிக்குமா என்பது போன்ற பல கேள்விகள் எழுந்துள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
ரெப்போ ரேட் என்றால் என்ன?
வங்கிகள் குறுகிய காலத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியிடம் பெறும்போது அதற்காக செலுத்த வேண்டிய வட்டி விகிதமே ரெப்போ ரேட் எனப்படுகிறது. இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட் விகிதத்தை குறைத்தால் வங்கிகளின் கடன் செலவு குறையும். இதன் மூலம் வங்கிகள் தங்களிடம் வீட்டு கடன், கார் கடன், பெர்சனல் லோன் ஆகிய கடன்களுக்கான வட்டியை குறைக்க வாய்யப்பிருக்கிறது. இதனால் அவர்கள் செலுத்தும் மாதத் தவணை குறைய வாய்ப்பிருக்கிறது. இதே போல ரெப்போ ரேட் அதிகரிக்கப்பட்டால் வாடிக்கையாளர்கள் செலுத்தும் வட்டி விகிதமும் அதிகரிக்கும்.




இதையும் படிக்க : இந்தியப் பொருளாதாரத்திற்குப் புதிய உத்வேகம்: 2025-26ல் 7.7% ஜிடிபி வளர்ச்சி
3வது முறையாக மாறாத ரெப்போ வட்டி விகிதம்
தொடர்ந்து மூன்றாவது இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம் செய்யவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2025 பிப்ரவரியில் ரெப்போ வட்டி விகிதத்த மொத்த 125 அடிப்படை புள்ளிகள் குறைத்து 5.25 சதவிகிதமாக நிர்ணயித்தது. அதனைத் தொடர்ந்து டிசம்பர் 2025, மார்ச் 2026, ஜூன் 2026 ஆகிய மூன்று நாணயக் கொள்கை குழு கூட்டத்திலும் ரெப்போ வட்டி விகிதத்தை மாற்றவில்லை.
ரிசர்வ் வங்கியின் அறிவிப்பு
Points that sum up the Monetary Policy announcement on June 05, 2026:
•Policy Repo Rate remains unchanged at 5.25%
•Marginal Standing Facility (MSF) & Bank Rate remains at 5.50%
•Standing Deposit Facility (SDF) remains at 5.00%
•Real GDP growth for 2026-27 is projected at…— ReserveBankOfIndia (@RBI) June 5, 2026
கடன் வாங்கியவர்களை பாதிக்குமா?
ரெப்போ ரேட் மாறாததால் வீட்டுக் கடன் வாங்கியவர்கள், பெர்சனல் லோன், கார் லோன் வாங்கியவர்களுக்கு வட்டி விகிதம் மாறாமலேயே தொடரும். இதனால் மாதத் தவணை செலுத்துபவர்களுக்கு சுமை அதிகரிக்காது. அதே நேரம் வட்டி விகிதம் குறையாது என்பதால் நம் மாதத் தவணையும் குறைய வாய்ப்பில்லை.
உதாரணமாக 30 ஆண்டுகளுக்கு ரூ.50 லட்சம் வீட்டுக் கடன் வாங்கியிருக்கிறீர்கள் என வைத்துக்கொள்வோம். அதற்கான வட்டி 8.20 சதவிகிதமாக நிர்ணயிக்கப்பட்டிருந்தால், தற்போது மாதத் தவணை ரூ.37,46 செலுத்துகிறீர்கள் என்றால் அது அப்படியே தொடரும். உங்கள் மாத பட்ஜெட்டில் எந்த வித தாக்கத்தையும் ஏற்படுத்தாது. ரெப்போ வட்டி விகிதம் குறையும் என எதிர்பார்த்தவர்களுக்கு இது ஏமாற்றமாக இருக்கும் என்றாலும், உயர்த்தப்படாதது சற்று ஆறுதலாக இருக்கும்.
இதையும் படிக்க : பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7% வரை வட்டி தரும் எஸ்பிஐ.. சிறப்பு திட்டமும் உள்ளது!
ஃபிக்சட் டெபாசிட் வைத்திருப்பவர்களுக்கு நன்மை?
ரெப்போ ரேட் மாறாத காரணத்தால் ஃபிக்சட் டெபாசிட் வட்டி விகிதங்களில் பெரிய மாற்றம் இருக்காது. அதே போல வங்கிகளில் சேமிப்பு கணக்கு வைத்திருப்பவர்களுக்கான வட்டி விகிதமும் தற்போதைய நிலையிலேயே தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
FAQ
1. ரெப்போ ரேட் என்றால் என்ன?
வங்கிகள் இந்திய ரிசர்வ் வங்கியிடம் குறுகிய காலத்திற்கு கடன் பெறும்போது செலுத்தும் வட்டி விகிதமே ரெப்போ ரேட் ஆகும்.
2. தற்போதைய ரெப்போ ரேட் என்ன?
இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ ரேட்டை 5.25 சதவிகிதமாக தொடர முடிவு செய்துள்ளது.
3. பெர்சனல் லோன் EMI மாறுமா?
ரெப்போ வட்டி விகிதம் மாறாமல் தொடரும் நிலையில் கடனுக்காக நாம் செலுத்தும் மாதத் தவணையிலும் மாற்றமிருக்காது.