AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ வட்டியில் மாற்றமில்லை.. ஆர்பிஐ அறிவிப்பு!

Reserve Bank Of India Keeps Repo Rate Unchanged | இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவித்துள்ளது. அதாவது, ரெப்போ வட்டியை 5.25 சதவீதமாகவே கடைபிடிக்க உள்ளதாக கூறியுள்ளது. இதனால் வங்கியில் கடன் வாங்கியுள்ளவர்கள் நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

வங்கியில் கடன் வாங்கியவர்களுக்கு குட் நியூஸ்.. ரெப்போ வட்டியில் மாற்றமில்லை.. ஆர்பிஐ அறிவிப்பு!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 05 Jun 2026 14:48 PM IST

இந்திய ரிசர்வ் வங்கி (RBI – Reserve Bank Of India) ரெப்போ வட்டி (Repo Rate) விகிதத்தை 5.25 சதவீதமாகவே கடைபிடிக்கப்போவதாக அறிவித்துள்ளது. ஆர்பிஐ-ன் நாணய கொள்கை குழு கூட்டம் ஜூன் 03, 2026 அன்று தொடங்கிய நிலையில், இன்று (ஜூன் 05, 2026) நிறைவடைந்தது. இந்த நிலையில், வழக்கமாக கூட்டத்தின் இறுதி நாளில் ரெப்போ வட்டி விகிதம் அறிவிக்கப்படும் நிலையில், ஆர்பிஐ என்ன முடிவை அறிவிக்கும், அது கடன் வட்டி விகிதங்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என பல்வேறு தரப்பினர் மத்தியிலும் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில் தான், ஆர்பிஐ ரெப்போ வட்டி விகிதத்தை முன்பு இருந்ததை போலவே கடைபிடிக்க உள்ளதாக அறிவித்துள்ளது. இது கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே தொடரும் – ஆர்பிஐ

சர்வதேச அளவில் நிலவும் புவிசார் பதற்றம், மேற்கு ஆசியா போர், வானிலை உள்ளிட்டவற்றை கணக்கில் கொண்டு ரெப்போ வட்டி விகிதத்தை 5.25 சதவீதமாகவே தொடர ஆர்பிஐ ஆளுநர் சஞ்சய் மல்ஹோத்ரா முடிவு செய்துள்ளார். அதன்படி, ஆர்பிஐ-ன் நாணய கொள்கை குழு கூட்டத்தின் கடைசி நாளான இன்று அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அடுத்த இரண்டு மாதங்களுக்கு ரெப்போ வட்டி விகிதம் 5.25 சதவீதமாகவே தொடரும்.

இதையும் படிங்க : பிக்சட் டெபாசிட் திட்டங்களுக்கு 7% வரை வட்டி தரும் எஸ்பிஐ.. சிறப்பு திட்டமும் உள்ளது!

கடன்களுக்கான வட்டி விகிதங்களில் எத்தகைய தாக்கம் ஏற்படும்?

இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு ஆர்பிஐ வழங்கும் கடன்களுக்கான வட்டி விகிதம் தான் இந்த ரெப்போ வட்டி. இந்த சூழலில், ரெப்போ வட்டி விகிதம் குறைக்கப்படும்போது வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை குறைக்கும். ஒருவேளை ரெப்போ வட்டி உயர்த்தப்பட்டால் வங்கிகள் கடன்களுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தும். இதன் காரணமாக தான், சாமானியர்களின் வாழ்வில் ரெப்போ வட்டி மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளது.

இதையும் படிங்க : தொடர் சரிவில் தங்கம் விலை.. தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா?

ரெப்போ வட்டி குறைந்தால் யாருக்கு சிக்கல்?

நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் உள்ளதை போல, ரெப்போ வட்டி குறைவது முதலீடு செய்யும் நபர்களுக்கு சிக்கலை ஏற்படுத்தும். காரணம், நிலையான வைப்பு நிதி போன்ற திட்டங்களுக்கு ரெப்போ வட்டி அடிப்படையில் வட்டி நிர்ணயம் செய்யப்படும். அதாவது ரெப்போ வட்டி உயர்ந்தால் எஃப்டி திட்டத்திற்கான வட்டி உயரவும், ரெப்போ வட்டி விகிதம் குறைந்தால் எஃப்டி திட்டத்திற்கான வட்டி விகிதம் குறையும்.

தற்போது ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளதால் கடன் வாங்கியவர்கள் மற்றும் முதலீட்டாளர்கள் இருவருக்குமே இது சாதகமான அறிவிப்பாக அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us