AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

யுபிஐயில் பேமெண்ட் ஃபெயில் என வந்தும் பணம் எடுக்கப்பட்டதா? எப்படி திரும்ப பெறுவது?

யுபிஐ செயலிகளில் நாம் பணம் அனுப்பும்போது Transaction Failed என காட்டும், ஆனால் நம் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கும். இதுதான் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று. அதனை எப்படி திரும்ப பெறுவது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

யுபிஐயில் பேமெண்ட் ஃபெயில் என வந்தும் பணம் எடுக்கப்பட்டதா? எப்படி திரும்ப பெறுவது?
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 05 Jun 2026 19:10 PM IST

இந்தியாவில் பணப்பர்த்தனை போன்ற சேவைகளை பெற வங்கிகளுக்கு மக்கள் நடையாக நடக்க வேண்டியிருந்தது. இந்த நிலையில் யுபிஐ வங்கி பரிவர்த்தனைகளுக்கான வேலையை மிகவும் எளிதாக மாற்றியிருக்கிறது. இதனையடுத்தும் தினமும் கோடிக்கணக்கான மக்கள் யுபிஐ சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக இந்தியாவில் போன்பே, கூகுள் பே, பீம் போன்ற செயலிகள் மூலம் மக்கள் நொடிகளில் பணம் அனுப்பவும் பெறவும் முடியும்.

ஆனால் யுபிஐ செயலிகளில் நாம் அடிக்கடி சந்திக்கும் பிரச்னைகளில் ஒன்று நாம் பணம் அனுப்பும்போது Transaction Failed என காட்டும், ஆனால் நம் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கும். இந்த நேரத்தில் நாம் உடனடியாக என்ன செய்ய வேண்டும்? எப்படி பணத்தை திரும்ப பெற வேண்டும் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கும். அதனை எப்படி தெரிந்து கொள்வது என இந்தக் கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க : லோன் வாங்கியவர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ரிசர்வ் வங்கியின் லேட்டஸ்ட் ரெப்போ விவரம்!

பேமெண் ஃபெயில்ட் என வந்தாலும் பணம் ஏன் எடுக்கப்படுகிறது?

யுபிஐ பரிவர்த்தனைகள் பல்வேறு தொழில்நுட்ப அமைப்புகள் மூலம் செயல்படுகின்றன.

  • சில நேரங்களில் வங்கியின் சர்வர்கள் முடங்குவது,
  • இண்டர்நெட் வசதி சரியில்லாமல் இருப்பது,
  • யுபிஐ செயலியில் தொழில்நுட்ப கோளாறு,
  • வங்கி பராமரிப்பு காரணமாக இருக்கலாம்.

இதுபோன்ற காரணங்களால் பரிவர்த்தனை முழுமையாக முடிவடையாமல் இருக்கலாம். சில நேரங்களில் Transaction Failed என காட்டினாலும், நம் வங்கிக் கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கலாம். இது போன்ற நேரங்களில் பணம் அனுப்பப்படவில்லை எனக் கருதி பலர் மீண்டும் பணம் அனுப்ப முயற்சிக்கிறார்கள். ஆனால் தொழில்நுட்ப காரணங்களால் பேமெண்ட் ஃபெயில் என வந்தாலும் சில நேரங்களில் பணம் அனுப்பப்பட்டிருக்கும். இதுபோன்ற நேரங்களில் நாம் 2வது முறை அனுப்ப முயற்சி செய்தால் 2 முறை பணம் அனுப்பப்பட்டிருக்கும்.

பேமெண்ட் ஃபெயில்ட் என வந்தால் என்ன செய்ய வேண்டும்?

  • சில நிமிடங்கள் வரை காத்திருக்க வேண்டும்.
  • Transaction History-ஐ ஒருமுறை சரிபார்க்கவும்.
  • வங்கியில் இருந்து எஸ்எம்எஸ் வந்திருக்கிறா என பார்க்கவும்.
  • வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டிருக்கிறதா என ஒருமுறை சரி பார்க்க வேண்டும்.
  • மேற்சொன்ன பரிசோதனைகளுக்கு பிறகு பணம் அனுப்பவில்லை என்பதை உறுதி செய்த பிறகே நாம் மீண்டும் பணம் அனுப்ப முயற்சிக்கவும்.

இதையும் படிக்க : இனி நொடி பொழுதில் பிஎஃப் பணத்தை எடுக்கலாம்.. விரைவில் வரப்போகும் இபிஎஃப்ஓ 3.0!

பரிவர்த்தனை தோல்வியடைந்தால் பணம் மீண்டும் எப்போது கிடைக்கும்?

ஒருவேளை பரிவர்த்தனை தோல்வியடைந்தால் சில நிமிடங்களில் நம் பணம் கிடைக்கும். சில நேரங்களில் அதிகபட்சம் 24 மணி நேரத்திற்குள் பணம் கிடைக்கும். அரிதான சில நேரங்களில் பணம் திரும்ப கிடைக்க 72 மணி நேரங்கள் ஆகலாம். நம் பணம் மீண்டும் வங்கிக் கணக்கிலேயே வரவு வைக்கப்படும்.

பணம் திரும்ப கிடைக்கவில்லை என்றால் என்ன செய்ய வேண்டும்?

3 நாட்களுக்கும் மேலாக பணம் வரவில்லை என்றால் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். முதலில் நாம் பயன்படுத்திய யுபிஐ செயலியில் புகார் அளிக்க வேண்டும். செயலியில் Help அல்லது Customer Support பகுதியில் புகார் அளிக்கலாம்.

புகார அளிக்கும் போது

  • பரிவர்த்தனை ஐடி
  • பரிவர்த்தனை நடைபெற்ற தேதி மற்றும் நேரம்
  • பரிவர்த்தனை தொகை
  • பணம் அனுப்பியதற்கான ஸ்கிரீன்ஷாட்

ஆகியவற்றை தயாராக வைத்திருக்க வேண்டும்

ஒருவேளை யுபிஐ செயலிகள் மூலம் தீர்வு கிடைக்கவில்லை என்றால், வாடிக்கையாளர் சேவை எண்ணுக்கு கால் செய்யவும் அல்லது நேரடியாக வங்கிக்கு செல்லவும். வங்கி அதிகாரிகள் நம் பரிவர்த்தனை ஐடியை வைத்து நமக்கு தீர்வு வழங்குவார்கள். அல்லது வங்கி தரப்பில் இருந்தும் நமக்கு போதுமான பதில் கிடைக்கவில்லை என்றால் என்பிசிஐ எனப்படும் தேசிய கொடுப்பனவு கழகம் தொடர்ந்து கொண்டு முறையிடலாம்.

FAQ

1.யுபிஐயில் Transaction Failed என்று காட்டினாலும் பணம் ஏன் எடுக்கப்படுகிறது?

வங்கி சர்வர் பிரச்னை, நெட்வொர்க் பிரச்னை, செயலி முடக்கம் போன்ற காரணங்களால் நம் வங்கி கணக்கில் இருந்து பணம் எடுக்கப்பட்டும் பேமெண்ட் ஃபெயில்ட் என காட்டப்படலாம்.

2.பணம் திரும்ப கிடைக்குமா?

பெரும்பாலான சந்தர்ப்பங்களில் பணம் தானாகவே வங்கிக் கணக்கிற்கு திரும்ப வரவு வைக்கப்படும்.

3.பணம் திரும்ப கிடைக்க எவ்வளவு நேரம் ஆகும்?

பொதுவாக சில நிமிடங்கள் முதல் 24 மணி நேரத்திற்குள் Refund கிடைக்கும். சில அரிதான சூழல்களில் 72 மணி நேரம் வரை ஆகலாம்.

 

Follow Us