AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிஎஃப் கணக்கில் பெயர், பிறந்த தேதி தவறாக உள்ளதா?.. உங்களால் பணத்தை எடுக்க முடியாது!

Is Your Name and Other Details Are Wrong In PF Account | பிஎஃப் கணக்கில் இருந்து தேவையான நேரங்களில் பணத்தை எடுத்து ஊழியர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த நிலையில், இந்த சில தவறுகள் காரணமாக பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல் போக வாய்ப்புள்ளது.

பிஎஃப் கணக்கில் பெயர், பிறந்த தேதி தவறாக உள்ளதா?.. உங்களால் பணத்தை எடுக்க முடியாது!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 29 May 2026 18:20 PM IST

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் (EPFO – Employee Provident Fund Organization) இந்தியாவில் பணியாற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கான பாதுகாப்பு அரணாக உள்ளது. காரணம், இபிஎஃப்ஓவில் ஊழியர்கள் பெயரில் கணக்கு தொடங்கப்பட்டு, அந்த கணக்கில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படும். இந்த பணத்தை தங்களது தேவைகளுக்காக எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. தற்போதைய நிலவரப்படி, பிஎஃப் (PF – Provident Fund) பணத்தை எடுக்க இணையதளத்தில் விண்ணப்பித்து 3 முதல் 5 நாட்களுக்குள்ளாக வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ள முடியும். ஆனால், இவ்வாறு பணத்தை எடுப்பதற்கு சில விவரங்கள் முக்கியமாக உள்ளன. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தகவல்கள் துல்லியமானதாக இருக்க வேண்டும்

பிஎஃப் கணக்கில் ஊழியர்களின் பெயர், பிறந்த தேதி, தந்தை பெயர் என அனைத்தும் சரியாக இருக்க வேண்டும். இதில் ஏதேனும் ஒரு தகவல் தவறாக இருக்கும் பட்சத்தில், ஊழியர்களால் தங்களது அவசர தேவைகளுக்கு பிஎஃப் கணக்கில் இருந்து பணம் எடுக்க முடியாமல் போய்விடும். அவசர தேவைகளின்போது இந்த தகவல்களை திருத்திக்கொண்டு இருப்பது பணத்தை எடுப்பதில் சிரமத்தை ஏற்படுத்தும். இதனை தடுக்க ஆன்லைன் மூலமாகவே மிக விரைவில் இந்த தகவல்களை சுலபமாக திருத்திவிடலாம்.

இதையும் படிங்க : உங்களுக்கே தெரியாமல் உங்கள் கிரெடிட் ஸ்கோர் குறையுதா?.. இவையெல்லாம் காரணமாக இருக்கலாம்!

பிஎஃப் கணக்கில் விவரங்களை திருத்துவது எப்படி?

இபிஎஃப்ஓ அமைப்பு தனது சேவைகளை விரிவுப்படுத்தும் நோக்கில், உழியர்கள் திருத்தங்களை சுலபமாக மேற்கொள்ள United Member Portal என்பதை அறிமுகம் செய்துள்ளது. இந்த அம்சத்தின் மூலம் ஊழியர்கள் தங்களது விவரங்களை ஆன்லைனிலேயே திருத்தம் செய்துக்கொள்ளலாம். அதாவது ஊழியர்கள் தங்களது பெயர், பாலினம், பிறந்த தேதி, பெற்றோர் பெயர், கணவர் பெயர், மனைவி பெயர் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் மிக சுலபமாக மாற்ற முடியும்.

இதையும் படிங்க : எம் ஆதார் செயலிக்கு பதிலாக புதிய ஆதார் செயலி அறிமுகம்.. புதிய அம்சங்கள் என்ன என்ன?

பிஎஃப் கணக்கில் இருக்கும் விவரங்களும், ஆதார் கார்டில் இருக்கும் விவரங்களும் ஒரே மாதிரியாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் உள்ளது. இதன் காரணமாக பிஎஃப் கணக்கில் தவறான தகவல்கள் இடம்பெற்றிருக்கும் பட்சத்தில் இருப்பு தெரிந்துக்கொள்வது உள்ளிட்ட முக்கிய பிஎஃப் சேவைகளை பெற முடியாமல் போய்விடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us