இபிஎஃப்ஓ 3.0-ல் கவணிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்.. கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!
Important Facts About EPFO 3.0 | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தை முற்றிலும் டிஜிட்டல் மயமாக மாற்றுவதற்கான வேலைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில், விரைவில் இபிஎஃப்ஓ 3.0 சேவையை அறிமுகம் செய்ய உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்தியா டிஜிட்டல் இந்தியா என்ற இலக்கை நோக்கி பயணம் செய்துக்கொண்டு இருக்கிறது. இதன் காரணமாக மத்திய அரசு அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கி வருகிறது. இதன் காரணமாக சேவைகளும் இணையதளங்கள், செயலிகள் மூலம் மிக சுலபமாக கிடைக்க வழிவகை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஊழியர் வருங்காலை வைப்பு நிதி அமைச்சகத்தை (EPFO – Employee Provident Fund Organization) முழுமையாக டிஜிட்டல் மயமாக்க வேண்டும் என்பதற்காகவும், ஊழியர்கள் மிக எளிதாக சேவைகளை பெற வேண்டும் என்பதற்காகவும் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் தான், இபிஎஃப்ஓ 3.0 (EPFO 3.0) அம்சத்தை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்ய உள்ளது. அதன் சிறப்பு அம்சங்கள் என்ன என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
விரைவில் அறிமுகமாகும் இபிஎஃப்ஓ 3.0 – சிறப்பு அம்சங்கள் என்ன என்ன?
இந்த இபிஎஃப்ஓ 3.0 மூலம் ஊழியர்கள் ஏராளமான சேவைகளை மிக சுலபமாக பெற உள்ளனர். ஆனால், இந்த சேவைகளை பெற ஊழியர்கள் தங்களது பிஎஃப் கணக்கில் யுஏஎன் எண்ணை ஆக்டிவேட் செய்ய வேண்டும். அதுமட்டுமன்றி, அவர்கள் ஆதார் இணைப்பு மற்றும் கேஒய்சி விவரங்களை முழுவதுமாக சரிப்பார்க்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. மிக முக்கியமாக ஊழியர்கள் தங்களது யுபிஐ ஐடியை போர்டலில் பதிவு செய்ய வேண்டும்.
இதையும் படிங்க : இனி mAadhaar செயலி செயல்படாது.. இந்திய தனித்துவ அடையாள ஆணையம் சொன்ன முக்கிய செய்தி!




தினசரி பண பரிவர்த்தனை வரம்பு அமலில் இருக்கும்
- பிற வங்கிகளின் மொபைல் செயலிகளில் உள்ளதை போலவே, இதிலும் தினசரி பண பரிவர்த்தனை வரம்பு இருக்கும்.
- பிஎஃப் விதிகளை பொறுத்தவரை வரி நடைமுறையில் தற்போதைக்கு எந்தவித மாற்றமும் இல்லை.
- ஊழியர் பணிசெய்ய தொடங்கி 5 ஆண்டுகள் நிறைவடைவதற்கு முன்பாகவே பெரிய தொகையை எடுக்க முயன்றால் அவருக்கு டிடிஎஸ் பிடிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
இதையும் படிங்க : பிஎஃப் கணக்கு லாக் ஆகிவிட்டதா?.. கவலை வேண்டாம்.. இதை செய்தால் மட்டும் போதும்!
தற்போதைய நிலவரப்படி பிஎஃப் பணத்தை எடுக்க இணையதளத்தில் விண்ணப்பித்து 3 நாட்களுக்குள்ளாக வங்கி கணக்கில் பெற்றுக்கொள்ளலாம். ஆனால், யுபிஐ மூலம் எந்தவித காத்திருப்பும் இல்லாமல் ஒருசில நிமிடங்களில் யுபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம். இந்த யுபிஐ சோதனை வெற்றி பெற்றுள்ள நிலையில், இது விரைவில் அமலுக்கு வர உள்ளது குறிப்பிடத்தக்கது.