Bank Holiday : 2026 ஜூன் மாதத்தில் மொத்தம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!
7 Days Bank Holiday | ஒவ்வொரு மாதமும் வார விடுமுறை, அரசு விடுமுறை, பண்டிகைகள் உள்ளிட்டவற்றின் காரணமாக வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். அந்த வகையில், 2026 ஜூன் மாதத்தில் மொத்தம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஒவ்வொரு மாதமும் அரசு விடுமுறை, பண்டிகைகள், வார விடுமுறை என சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை (Bank Holiday) அளிக்கப்படும். 2026, மே மாதத்தில் இவ்வாறு சில நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. இன்னும் சில நாட்களில் மே மாதம் முடிவடைய உள்ள நிலையில், விரைவில் ஜூன் மாதம் தொடங்கப்பட உள்ளது. இந்த நிலையில், ஜுன் மாதத்தில் மொத்தம் எத்தனை நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
2026, ஜூன் மாதத்தில் மொத்தம் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை
- ஜூன் 07, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 13, 2026 – மாதத்தின் இரண்டாவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 14, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 21, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 25, 2026 – மொகரம் பண்டிகை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 27, 2026 – மாதத்தின் நான்காவது சனிக்கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- ஜூன் 28, 2026 – ஞாயிற்று கிழமை என்பதால் அன்றைய தினம் இந்தியாவில் உள்ள வங்கிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படுமா? 100% உறுதியாக சொல்லும் ஏஐ
வங்கி விடுமுறை நாட்களில் என்ன செய்யலாம்?
அரசு விடுமுறை, வார விடுமுறை காரணமாக 2026, ஜூன் மாதத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. எனவே பொதுமக்கள் தங்களது தேவைகளுக்கு ஏற்ப இந்த தினங்களில் வங்கிக்கு செல்லும் தேவை இருந்தால் முன்கூட்டியே முடித்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும். மற்றபடி இந்த நாட்களில் வழக்கம் போக ஏடிஎம் (ATM – Automated Teller Machine) மையங்கள், யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகள், நெட் பேங்கிங் வசதி ஆகியவை செயல்பாட்டில் இருக்கும்.




இதையும் படிங்க : இனி பிஎஃப் பணத்தை யுபிஐ-ல் எடுக்கலாம்.. இந்த அம்சம் எப்படி செயல்படும்?
விடுமுறைக்கு ஏற்ப பொதுமக்கள் தங்களது தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்வது சிறப்பானதாக இருக்கும்.