AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இந்தியாவில்15% ஆக உயர்ந்த தங்க இறக்குமதி வரி.. நகை வாங்க துபாய்க்கு படையெடுக்கும் இந்தியர்கள்!

Indians Travelling Dubai To Buy Gold | அன்னிய செலாவணியை குறைக்க இந்தியர்கள் ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி கூறியதை அடுத்து தங்கத்தின் இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக இந்தியர்கள் தங்கம் வாங்க துபாய் பயணம் செய்கின்றனர்.

இந்தியாவில்15% ஆக உயர்ந்த தங்க இறக்குமதி வரி.. நகை வாங்க துபாய்க்கு படையெடுக்கும் இந்தியர்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 23 May 2026 14:35 PM IST

மேற்கு ஆசியா போர் காரணமாக உலக நாடுகள் பல்வேறு சவால்களை எதிர்க்கொண்டு வருகின்றன. கச்சா எண்ணெய் விலை உயர்வு, கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு உள்ளிட்டவற்றை எதிர்க்கொண்டு வருகின்றன. போரின் காரணமாக அமெரிக்க டாலர் வலுவடைந்து வரும் நிலையில், இந்திய ரூபாய் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகிறது. மேலும் இந்தியா பல்வேறு பொருட்களை உலக நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யும் காரணமாக, அன்னிய செலாவணி அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக அரசு தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்தியுள்ள நிலையில், இந்தியர்கள் தங்கத்தை வாங்க புதிய முயற்சியை கையில் எடுத்துள்ளனர்.

தங்கத்தின் மீதான இறக்குமதி வரியை உயர்த்திய மத்திய அரசு

மேற்கு ஆசியா போர் காரணமாக அமெரிக்க டாலரின் மதிப்பு உயர்ந்து வருகிறது. அதே சமயம் இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்தியா பெரும்பாலான தேவைகளுக்கு இறக்குமதியையே நம்பியுள்ளது. இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்க டாலர்களின் கட்டணம் செலுத்த வேண்டிய நிலையில், இந்தியாவின் கையிருப்பில் உள்ள அன்னிய செலாவணி வேகமாக குறைந்து வருகிறது. அதனை கட்டுக்குள் வைக்கவும், இந்திய ரூபாயின் மதிப்பை உயர்த்தவும் அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இதையும் படிங்க : ஜூன் மாதத்தில் ஆர்பிஐ எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. வீடு, வாகன கடன் வட்டி உயரும்?

இந்தியர்கள் ஒரு ஆண்டுக்கு தங்கம் வாங்க வேண்டாம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு அறிவுரை வழங்கினார். இதனை தொடர்ந்து பொதுமக்கள் தங்கம் வாங்காமல் இருக்கும் வகையில், தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தி அறிவித்தது. வெறும் 6 சதவீதமாக இருந்த வரியை 16 சதவீதமாக உயர்த்தி உத்தரவிட்டது. இதன் காரணமாக தங்கம் கடுமையான விலை உயர்வை சந்தித்தது.

தங்கம் வாங்க துபாய்க்கு படையெடுக்கும் மக்கள்

தங்கத்திற்கான இறக்குமதி வரியை மத்திய அரசு உயர்த்தியுள்ளதன் காரணமாக இந்தியாவில் வழக்கத்தை விட தங்கம் விலை அதிகமாக உள்ளது. இதன் காரணமாக ஏராளமான இந்தியர்கள் துபாய்க்கு படையெடுத்து வருகின்றனர். துபாயின் கடை வீதிகளிலும், தங்க நகை கடைகளிலும் இந்தியர்களின் கூட்டம் அலைமோதுகிறது. அன்னிய செலாவணியை குறைக்க இந்தியர்கள் நகை வாங்க கூடாது என இந்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்ட நிலையில், இந்தியர்கள் தற்போது புதிய முறையை கையில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us