AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படுமா? 100% உறுதியாக சொல்லும் ஏஐ

நம் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படுமா ? அல்லது இல்லையா? என்ற குழப்பத்திலேயே கடைசி வரை இருக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் அந்த பிரச்னைகளை சரி செய்யும் வகையில் இந்திய ரயில்வே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாக அதற்கு தீர்வு காணவுள்ளது.

வெயிட்டிங் லிஸ்ட் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படுமா? 100% உறுதியாக சொல்லும் ஏஐ
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 23 May 2026 17:43 PM IST

இந்திய ரயில்வே ஒரு முக்கிய மாற்றத்துக்கு தயாராகி வருகிறது. அதன்படி விரைவில் ஒரு புதிய முன்பதிவு அமைப்பை அறிமுகப்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் முன்பதிவு செய்யும் முறையில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இதன் விளைவாக, காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகளை வைத்திருக்கும் பயணிகள், தங்கள் முன்பதிவு நிலை குறித்த துல்லியமான மற்றும் மிகச்சரியான தகவல்களைப் பெற முடியும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

நீங்கள் ரயில் பயணத்திற்காக டிக்கெட் முன்பதிவு செய்துள்ளீர்களா? உங்கள் டிக்கெட் காத்திருப்போர் பட்டியலில் உள்ளதா? நம் ரயில் டிக்கெட் உறுதி செய்யப்படுமா ? அல்லது இல்லையா? என்ற குழப்பத்திலேயே கடைசி வரை இருக்க வேண்டியிருக்கும். இந்த நிலையில் அந்த பிரச்னைகளை சரி செய்யும் வகையில் இந்திய ரயில்வே செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வழியாக அதற்கு தீர்வு காணவுள்ளது இதன் மூலம், பயணிகள் துல்லியமான தகவல்களைப் பெறுவதுடன், விரைவான முன்பதிவு சேவைகளையும் அணுக முடியும். குறிப்பாகக் காத்திருப்போர் பட்டியல் டிக்கெட்டுகளைப் பொறுத்தவரை, பயணிகள் 94 சதவிகிதம் அளவுக்கு துல்லியமன தகவல்களைப் பெற முடியும்.

இதையும் படிக்க : கடன் இல்லாமல் வாழ வேண்டுமா?.. இந்த முக்கியமான டிப்ஸ்களை ஃபாலோ பண்ணுங்க!

முன்கூட்டியே அறிந்துகொள்ளும் வாய்ப்பு

இந்திய ரயில்வே தற்போது தனது பழைய முன்பதிவு அமைப்பை மேம்படுத்தி வருகிறது. கடந்த 1986 ஆம் ஆண்டிலிருந்து பயன்பாட்டில் இருந்து வரும் அமைப்பிற்கு மாற்றாக, ஒரு புதிய அமைப்பை அது உருவாக்கி வருகிறது. இந்த ஆண்டின் ஆகஸ்ட் மாதம் தொடங்கி, கட்டம் கட்டமாக இந்தப் புதிய திட்டத்தை செயல்படுத்த இந்திய ரயில்வே தயாராகி வருகிறது. டிக்கெட் முன்பதிவு செய்யும்போது பயணிகளுக்கு எவ்விதத் தொழில்நுட்பச் சிக்கல்களும் ஏற்படாது என்பதால், விரைவான மற்றும் தடையற்ற முன்பதிவு அனுபவத்தைப் பெற முடியும். நவீன காலத்தின் தேவைகளையும் எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும் வகையில் இந்தப் புதிய திட்டம் உருவாக்கப்பட்டு வடிவமைக்கப்பட்டு வருகிறது. இந்த முன்னேற்றத்தில் ஏஐ தொழில்நுட்பத்தின் பங்களிப்பும் ஒரு முக்கிய காரணம்.

இதன் மூலம், காத்திருப்போர் பட்டியலில் இருப்பவர்கள் தங்கள் டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படுமா என்பதை முன்கூட்டியே தெரிந்து கொள்ளமுடியும். முன்னதாக, சில இணையதளங்கள், கடந்தகாலத் தரவுகள் மற்றும் ஊகங்களின் அடிப்படையில் மட்டுமே தகவல்களை வெளியிட்டன. இதன் உறுதித் தன்மை வெறும் 53 சதவீதமாகவே இருந்தது.

அந்த வகையில் இந்திய ரயில்வே விரைவில் அறிமுகப்படுத்தவுள்ள ஏஐ தொழில்நுட்பத்தின் உதவியால், காத்திருப்போர் பட்டியலில் உள்ள டிக்கெட்டுகள் உறுதி செய்யப்படும் நிலையை 94 சதவீதத் துல்லியத்துடன் பயணிகளால் கணிக்க முடியும். கடந்தகால முன்பதிவு டேட்டா, குறிப்பிட்ட வழித்தடங்களுக்கான தேவை மற்றும் டிக்கெட் ரத்து செய்தல் தொடர்பான கடந்தகாலப சம்பவங்கள் ஆகியவற்றின் அடிப்படையில் இந்தத் தகவலை ஏஐ தொழில்நுட்பம் வழங்கும். தற்போது, ​​மொத்த டிக்கெட்டுகளில் சுமார் 88 சதவீதம் இணையம் வாயிலாகவே முன்பதிவு செய்யப்படுகின்றன. இந்தச் செயல்பாட்டில் செயற்கை நுண்ணறிவை ஒருங்கிணைப்பதன் மூலம், பயணிகள் தங்கள் பயணச்சீட்டின் நிலை குறித்த முன்கூட்டிய தகவல்களைப் பெற முடியும். இது, அவர்கள் மாற்றுப் பயணத் திட்டங்களை முன்கூட்டியே வகுக்க உதவுகிறது.

இதையும் படிக்க : சம்பளம் வந்ததும் பணம் காலியாகிவிடுகிறதா?.. இனி உங்கள் நிதி மேலாண்மையை சாட்ஜிபிடி பார்த்துக்கொள்ளும்!

தற்போது, ​​காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளின் பயணச்சீட்டுகள் கடைசி நிமிடத்தில் உறுதி செய்யப்படாதபோது, ​​அவர்கள் குறிப்பிடத்தக்க சிரமங்களை எதிர்கொள்கின்றனர். இதனால், அவர்கள் அந்த இடத்திலேயே மாற்றுப் பயண ஏற்பாடுகளைச் செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு உள்ளாகின்றனர். தற்போது அறிமுகப்படுத்தப்படவுள்ள ஏஐ தொழில்நுட்பம் அந்த பிரச்னையை சரி செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Follow Us