AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரயில் டிக்கெட் முன்பதிவு.. 40 ஆண்டுகளாக இருந்த முறையில் வரும் முக்கிய மாற்றம்!

Passenger Reservation System Change | இந்தியாவில் பொதுமக்களுக்கு மிகவும் பிரதானமாக உள்ளது தான் ரயில் போக்குவரத்து. இந்த நிலையில், பிஆர்எஸ் எனப்படும் ரயில் டிக்கெட் முன்பதிவு அம்சத்தில் முக்கிய மாற்றங்களை கொண்டு வர மத்திய அரசு நடவடிகை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

ரயில் டிக்கெட் முன்பதிவு.. 40 ஆண்டுகளாக இருந்த முறையில் வரும் முக்கிய மாற்றம்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 09 May 2026 18:33 PM IST

இந்தியாவில் ரயில் போக்குவரத்து என்பது மிக முக்கியமான அம்சமாக உள்ளது. குறிப்பக உலக அளவில் மிகப்பெரிய ரயில் போக்குவரத்தாக இந்திய ரயில் போக்குவரத்து உள்ளது. காரணம், நாள்தோறும் லட்சக்கணக்கான மக்கள் ரயில்கள் மூலம் பயணம் செய்கின்றனர். இவ்வாறு மிக முக்கிய சேவையாக ரயில் போக்குவரத்து உள்ள நிலையில், 40 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் முக்கிய மாற்றத்தை கொண்டுவர மத்திய அரசு முடிவு செய்துள்ளது. அது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ரயில் டிக்கெட் முன்பதிவு முறையில் வரும் முக்கிய மாற்றம்

இந்திய ரயில் போக்குவரத்தில் உள்ள ஒரு முக்கிய அம்சம் தான் PRS (Passenger Reservation System) எனப்படும் பயணிகள் முன்பதிவு அமைப்பு. சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலாக இந்த முறை அமலில் உள்ள நிலையில், இதனை மாற்றி அமைப்பதற்கான முயற்சியை தான் மத்திய அரசு தற்போது கையில் எடுத்துள்ளது. அதாவது, 1986 முதல் செயல்பட்டு வரும் இந்த அமைப்பு 2026 ஆகஸ்ட் மாதம் முதல் முக்கிய மாற்றத்தை சந்திக்க உள்ளது.

இதையும் படிங்க : கிரெடிட் கார்டு பயன்படுத்தாமலே இருப்பது சிக்கல்.. இந்த விஷயம் குறித்து தெரியுமா?

தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப மாற்றம் கொண்டுவர திட்டம்

இந்த அம்சம் நடைமுறைக்கு வந்து சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேல் ஆகிறது. இந்த 40 ஆண்டுகளில் இணையதள தொழில்நுட்பம் வளர்த்துவிட்டது, மொபைல் போன்கள், டிஜிட்டல் பரிவர்த்தனைகள் ஆகியவை தற்போது அமலில் உள்ளன. இந்த நிலையில், இந்த வளர்ச்சிகளுக்கு ஏற்ப பிஆர்எஸ் ரயில் டிக்கெட் முன்பதிவு முறையிலும் முக்கிய மாற்றம் அமலுக்கு வரும் என்று கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : தினமும் ரூ.7 முதலீடு போதும்.. மாதம் ரூ.5,000 வரை பென்ஷன் பெறலாம்.. அரசின் அட்டகாசமான திட்டம்!

இந்தியாவில் 2000-க்கு பிறகு ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு முறை அமலில் உள்ளது. குறிப்பாக 2002 ஆம் ஆண்டுக்கு பிறகு இணைய வழியில் டிக்கெட் முன்பதிவு செய்யும் அம்சம் தான் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில், சுமார் 88 சதவீதம் ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவு தான் நடைபெறுகிறது. இத்தகைய சூழலில் தான் பிஆர்எஸ் ரயில் டிக்கெட் முன்பதிவு அம்சத்தை தொழில்நுட்ப வசதிகளுக்கு ஏற்றவாறு மாற்றி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us