AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மினிமம் டியூ Vs டோட்டல் டியூ.. கிரெடிட் பில் கட்டணத்தை செலுத்த தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!

Total Due Vs Minimum Due | கிரெடிட் கார்டு பில் கட்டணத்தை செலுத்த மினிமம் டியூ மற்றும் டோட்டல் டியூ என இரண்டு அம்சங்கள் உள்ளன. இந்த நிலையில், இந்த இரண்டு அம்சங்களில் எந்த அம்சத்தை பயன்படுத்தி கிரெடிட் கார்டு பில் கட்டணத்தை செலுத்துவது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மினிமம் டியூ Vs டோட்டல் டியூ.. கிரெடிட் பில் கட்டணத்தை செலுத்த தெரிந்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 05 May 2026 17:25 PM IST

தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் மத்தியில் கிரெடிட் கார்டு (Credit Card) பயன்பாடு மிகவும் பரவலாக உள்ளது. கூடுதல் நிதி தேவைக்காக பலரும் இந்த கிரெடிட் கார்டு அம்சத்தை பயன்படுத்துகின்றனர். கிரெடிட் கார்டை முறையாக பயன்படுத்தினால் அதில் இருந்து பல்வேறு சிறப்பு பலன்களை பெற முடியும். இதுவே தவறாக பயன்படுத்தினால் கூடுதல் கட்டணங்கள் செலுத்த வேண்டிய சூழல் உருவாகும். எனவே கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்தும் முறைகளான மினிமம் டியூ (Minimum Due) மற்றும் டோட்டல் டியூ (Total Due) இரண்டிற்குமான வித்தியாசம் என்ன, அதன் முக்கியத்துவங்கள் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கிரெடிட் கார்டு கட்டணத்தை செலுத்தும் 2 முக்கிய முறைகள்

நீங்கள் கிரெடிட் கார்டு பயன்படுத்தும் போது, கிரெடிட் கார்டு பில்லில் இரண்டு முக்கிய விஷயங்கள் கொடுக்கப்பட்டு இருக்கும். அதாவது டோட்டல் டியூ மற்றும் மினமம் டியூ என்ற அம்சங்கள் தான். இவற்றின் முக்கியத்துவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

டோட்டல் டியூ என்றால் என்ன?

நீங்கள் கிரெடிட் கார்டை பயன்படுத்தி ஒரு குறிப்பிட்ட மாதத்தில் பயன்படுத்தி முழுத் தொகை தான் இது. இந்த தொகை முழுவதையும் செலுத்திவிட்டால் அந்த தொகைக்கு வட்டி எதுவும் விதிக்கப்படாது.

மினிமம் டியூ என்றால் என்ன?

மினிமம் டியூ என்பது நீங்கள் ஒரு குறிப்பிட்ட மாதத்தில் கிரெடிட் கார்டை பயன்படுத்தி செலவு செய்த மொத்த தொகையில் வெறும் 5 சதவீதம் மட்டுமே ஆகும். இந்த தொகைக்கான கட்டணத்தை அந்த மாதத்திற்கு தாமத கட்டணங்கள் எதுவும் விதிக்கப்படாது.

இதையும் படிங்க : ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபர்கள் எப்படி முதலீடு செய்யலாம்?.. இந்த விதியை பின்பற்றுங்கள்!

மினிமம் தொகை மட்டும் செலுத்தினால் போதுமா?

கிரெடிட் கார்டு பயன்படுத்தும் பலரும்  மாத செலவுகளை கையாளும் வகையில், மினிமம் டியூ மட்டுமே செலுத்தினால் போதும் என்று நினைப்பர். ஆனால், அவ்வாறு மினிமம் டியூ மட்டுமே செலுத்துவது பெரிய சிக்கலை ஏற்படுத்தும் ஆபத்து உள்ளது. காரணம், குறைந்தபட்ச தொகையான மினிமம் டியூ தொகையை மட்டுமே திருப்பி செலுத்தினால், மீதமுள்ள தொகைக்கு உடனடியாக வட்டி சேர தொடங்கிவிடும்.

இதையும் படிங்க : SIP Vs வங்கி கடன்.. சாட்ஜிபிடியிடம் உதவி கேட்ட நபர்.. அசத்தலான அறிவுரை!

பொதுவாக கிரெடிட் கார்டு கடன்களுக்கு 30 முதல் 45 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மினிமம் டியூ மட்டுமே செலுத்தும் பட்சத்தில் மீதமுள்ள தொகைக்கு 30 முதல் 45 சதவீதம் வரை வட்டி செலுத்த வேண்டிய கட்டாயம் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us