AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

நகை கடன் Vs தனிநபர் கடன்.. இரண்டில் குறைந்த வட்டி எதற்கு?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!

Low Interest Loan In Banks | பெரும்பாலான பொதுமக்கள் வங்கிகளில் தனிநபர் கடன், நகை கடன் ஆகியவற்றை அதிகம் வாங்குகின்றனர். இந்த நிலையில், இந்த இரண்டு கடனில் எந்த கடனுக்கு குறைந்த வட்டி வழங்கப்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

நகை கடன் Vs தனிநபர் கடன்.. இரண்டில் குறைந்த வட்டி எதற்கு?.. தெரிந்துக்கொள்ளுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 02 May 2026 11:46 AM IST

பொதுமக்கள் தங்களது பண தேவை ஏற்படும்போதெல்லாம் வங்கிகளில் கடன் வாங்குவதற்கு முயற்சி செய்வர். இவ்வாறு பொதுமக்களின் நிதி தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில், வங்கிகள் பல வகையான கடன் திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. உதாரணமாக தனிநபர் கடை (Personal Loan), வீட்டு கடன் (Hone Loan), நகை கடன் (Gold Loan) என சில வகையான கடன் திட்டங்கள் உள்ளன. இந்த கடன் திட்டங்களில் தங்களது பண தேவையை பூர்த்தி செய்துக்கொள்ள பெரும்பாலான பொதுமக்கள் தேர்வு செய்வது தனிநபர் கடன் அல்லது நகை கடன் தான். இந்த நிலையில், இவை இரண்டி எது குறைந்த வட்டியை வழங்கும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

தங்க நகை கடன்

பொதுமக்கள் தாங்கள் வைத்திருக்கும் தங்க நாணயங்கள் மற்றும் நகைகளை அடகு வைத்து தங்க நகை கடன் பெறலாம். தங்கத்தை அடகு வைக்கும்போது, அன்றை தினத்தில் தங்கத்தின் விலை என்னவாக உள்ளதோ அதில் இருந்து 70 சதவீதம் தொகை பணமாக வழங்கப்படும். உதாரணமாக ஒரு சவரன் தங்கம் ரூ.1 லட்சம் என்றால் ரூ.70,000 வரை கடன் கிடைக்கும். கடனை வாங்கியவர்கள், கடனை திருப்பி செலுத்தவில்லை என்றாலும் அதனை விற்று வங்கிகள் பணமாக மாற்றிக்கொள்ளும். இதன் காரணமாக வங்கிகள் போட்டி போட்டுக்கொண்டு நகை கடன் வழங்குகின்றன.

இதையும் படிங்க : வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை மீண்டும் உயர்வு.. ரூ.3,237-க்கு விற்பனை!

தனிநபர் கடன்

தங்க நகை கடனை போல எந்த வித அடமானமும் இல்லாமல் வழங்கப்படும் கடன் தான் தனிநபர் கடன். இந்த கடன் ஒருவரின் மாத ஊதியம், கிரெடிட் ஸ்கோர் ஆகியவற்றை மையமாக கொண்டு வழங்கப்படுகிறது. தங்க நகை கடனை போல அடமானம் இல்லாமல் கடன் வழங்கப்படுவதன் காரணமாக இந்த கடனுக்கு வட்டி அதிகமாக விதிக்கப்படும்.

இதையும் படிங்க : பழைய பிஎஃப் கணக்குகளை பெற புதிய இணையதளம் அறிமுகம் – எப்படி பயன்படுத்துவது

எந்த கடனுக்கு வட்டி அதிகம்?

தங்க கடன் அடமானம்  வைத்து வழங்கப்படுவதால் அதற்கு வட்டி அதிகம். சராசரியாக 8 சதவீதம் முதல் 15 சதவீதம் வரை வழங்கப்படுகிறது. தனிநபர் கடன் அடமானம் இல்லாமல் வழங்கப்படுவதன் காரணமாக அதற்கு அதிக வட்டி விதிக்கப்படும். சராசரியாக 10 சதவீதம் முதல் 24 சதவீதம் வரை வட்டி வழங்கப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us