AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தங்கம் வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டுமா?.. புதிய வருமான விதிகள் கூறுவது என்ன?

PAN Card For Buying Gold | தங்கம் ஒரு சவரன் ரூ.1 லட்சத்தை தாண்டி விற்பனை செய்யப்படுகிறது. இந்த நிலையில், தங்கம் வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டுமா, அது குறித்து புதிய வருமான வரி விதிகள் கூறுவது என்ன என்பது குறித்து பார்க்கலாம்.

தங்கம் வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டுமா?.. புதிய வருமான விதிகள் கூறுவது என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 03 May 2026 11:14 AM IST

இந்தியர்களுக்கான மிக முக்கிய ஆவணமாக பான் கார்டு (PAN Card) உள்ளது. சட்டவிரோத பண பரிவர்த்தனைகள், கருப்பு பணம், மோசடி உள்ளிட்டவற்றை தடுக்க சில இடங்களில் பணம் செலுத்தும்போது பான் கார்டு கட்டாயமாக உள்ளது. அந்த வகையில், நகை வாங்கும்போது பான் எண்ணை சமர்ப்பிக்க வேண்டுமா, அது தொடர்பாக 2026 ஆம் ஆண்டுக்கான புதிய வருமான விதிகள் (2026 New Income Tax Rules) கூறுவது என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இந்திய குடிமக்களுக்கு மிக முக்கிய ஆவணமாக உள்ள பான் கார்டு

இந்தியாவில் ஒருவர் எத்தனை வங்கி கணக்குகளை வைத்திருக்கலாம், எத்தனை வங்கிகளில் கணக்கு வைத்திருக்கலாம் என்பது குறித்து எந்த வித கட்டுப்பாடுகளும் இல்லை. யார் வேண்டுமானாலும், எத்தனை வங்கி கணக்குகளை திறந்துக்கொள்ளலாம் என்ற நிலையில் தான் உள்ளது. பலரும், ஒன்றுக்கும் மேற்பட்ட வங்கி கணக்குகளை வைத்துள்ளனர். அவற்றின் மூலம் பல்வேறு பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர்.

இதையும் படிங்க : இபிஎஃப்ஓ ஓய்வூதியம் ரூ1,000லிருந்து ரூ.7,500 ஆக உயரும் வாய்ப்பு? யாருக்கு நன்மை?

ஒவ்வொரு வங்கி கணக்கையும் தனியாக சோதனை செய்ய முடியாது என்பதால் பான் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. அதாவது, பான் கார்டு வைத்திருக்கும் நபரின் அனைத்து வங்கி கணக்குகளும் அந்த ஒரே பான் கார்டின் கீழ் வந்துவிடும். இதன் மூலம் அவர்கள் என்ன வகையான பண பரிவர்த்தனை மேற்கொண்டாலும் அது அரசுக்கு தெரிய வந்துவிடும். இதன் காரணமாக தான், அதிக பண பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது பான் கார்டு கேட்கப்படுகிறது.

நகை வாங்க பான் கார்டு கட்டாயமா?

வருமான வரி சட்டம் 2026-ன் விதி 159-ன் கீழ் ரூ.2 லட்சத்திற்கும் அதிகமான மதிப்புள்ள தங்க நகைகளை வாங்கினால் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும். அதாவாது, நீங்கள் ரூ.2 லட்சத்திற்கு குறைவான பொருட்களை வாங்கும்போது பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டும் என்பது கட்டாயமில்லை. இதுவே ரூ.2 லட்சத்திற்கும் மேல் தங்கம் வாங்கினால், பான் கார்டு கட்டாயமாக உள்ளது.

இதையும் படிங்க : வணிக சிலிண்டர் விலை உயர்வு – சாலையோர உணவகங்களுக்கு கடும் பாதிப்பு?

தற்போதைய நிலவரப்படி ஒரு சவரன் 22 காரட் தங்கம் ரூ.1,12,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அப்போது 4 அரை சவரன் ரூ.61,000 ஆகும். இந்த நிலையில், ஒன்றரை சவரன் வரை நகை வாங்கும்போது நீங்கள் பான் கார்டு இல்லாமல் வாங்கிக்கொள்ளலாம். அதற்கு மேல் தங்கம் வாங்கினால் பான் கார்டு கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us