முதலீடு Vs வீட்டு கடன்.. போனஸ் பணத்தை சிறப்பாக பயன்படுத்துவது எப்படி?
How To Use Bonus Money In A Better Way | அரசு மற்றும் தனியார் ஊழியர்கள் என இருவருக்குமே போனஸ் வழங்கப்படும். இந்த நிலையில், போனஸ் பணத்தை முறையாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து தற்போது விரிவாக பார்க்கலாம்.
அரசு மற்றும் தனியார் துறைகளில் வேலை செய்யும் நபர்களுக்கு கிடைக்கும் ஒரு கூடுதல் அம்சம் தான் போனஸ் மற்றும் சமபள உயர்வு. சம்பள உயர்வு ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படும் நிலையில், போனஸ் அந்த நிறுவனத்தின் கொள்கையின் அடிப்படையில் வழங்கப்படும். உதாரணமாக ஒரு நிறுவனம் 6 மாதங்களுக்கு ஒருமுறை போனஸ் வழங்குவதை கொள்கையாக வைத்திருந்தால் அதற்கு ஏற்ப வழங்கப்படும். இந்த நிலையில், அவ்வாறு போனஸ் பெறுபவர்கள் அதனை செலவு செய்யலாமா அல்லது முதலீடு செய்யலாமா என்ற குழப்பத்தில் இருப்பர். இந்த குழப்பத்தை சரிசெய்து பணத்தை முறையாக பயன்படுத்துவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
போனஸை என்ன செய்வது – கடனை அடைக்கலாமா? அல்லது முதலீடா?
போனஸ் வாங்கும் ஊழியர்கள் பலருக்கும் இருக்கும் முக்கியமான கேள்வி தான் இது. தங்களுக்கு கிடைக்கும் கூடுதல் பணத்தை முறையாக செலவு செய்ய வேண்டும் என பலரும் கருதுகின்றனர். நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறீர்கள் உங்களுக்கு ஆண்டுக்கு இரண்டு முறை போனஸ் வழங்கப்படுகிறது என்றால் உங்களது சூழலுக்கு ஏற்ப அதனை பயன்படுத்துவது சிறப்பானதாக இருக்கும்.
இதையும் படிங்க : கடனை அடைக்க இந்த இரண்டு விஷயங்களை கட்டாயம் பின்பற்றுங்கள்!




யார் முதலீடு செய்யலாம்?
நீங்கள் ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்கிறீர்கள். உங்களுக்கு வீட்டு கடன் உள்ளது. ஆனால், உங்களது வயது 30-க்கும் குறைவாக உள்ளது என்றால் நீங்கள் தாராளமாக முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்யலாம். காரணம் அதிக ஆண்டுகள் முதலீடு செய்யும்போது அதிக லாபத்தை பெற முடியும். எனவே உங்களுக்கு வயது இருக்கும் பட்சத்தில் உங்களது எதிர்கால தேவைகளுக்காக நீங்கள் உங்கள் போனஸ் பணத்தை முதலீடு செய்யலாம்.
இதையும் படிங்க : ரூ.50,000 சம்பளம் வாங்கும் நபர்கள் எப்படி முதலீடு செய்யலாம்?.. இந்த விதியை பின்பற்றுங்கள்!
யார் வீட்டு கடனை செலுத்தலாம்?
உங்களுக்கு வயது 50-ஐ தாண்டிவிட்டது. ஆனால், கடனை அடைக்க வேண்டிய காலம் உள்ளது. அதுவரை உங்களால் வருமானம் ஈட்ட முடியாது என்றால் நீங்கள் உங்களது போனஸ் பணத்தை வைத்து வீட்டு கடனை அடைக்கலாம். ஒவ்வொருவரும் தங்களது சூழலுக்கு ஏற்ப போனஸ் பணத்தை செலவு செய்வது சிறப்பானதாக இருக்கும்.