AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

சம்பளம் வந்ததும் பணம் காலியாகிவிடுகிறதா?.. இனி உங்கள் நிதி மேலாண்மையை சாட்ஜிபிடி பார்த்துக்கொள்ளும்!

ChatGPT Finance Management | சம்பாதித்த பணத்தை எவ்வாறு முறையாக செலவு செய்வது என தெரியாமல் பலரும் பல்வேறு சிக்கல்களை எதிர்க்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் தான் மனிதர்கள் தங்களது நிதி மேலாண்மையை முறையாக மேற்கொள்ள சாட்ஜிபிடியில் ஒரு அசத்தல் அம்சம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சம்பளம் வந்ததும் பணம் காலியாகிவிடுகிறதா?.. இனி உங்கள் நிதி மேலாண்மையை சாட்ஜிபிடி பார்த்துக்கொள்ளும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 22 May 2026 14:13 PM IST

பெரும்பாலான மக்கள் தங்களது நிதி தேவைகளுக்காக வேலைக்கு சென்று பணம் சம்பாதிக்கின்றனர். ஆனால், சம்பாதிக்கும் பலருக்கும் தங்களது பணத்தை எவ்வாறு முறையாக நிர்வகிக்க வேண்டும் என்பது தெரியாமலே உள்ளது. நம்மில் பலரும் சம்பளம் வந்த உடன் பணத்தை செலவு செய்துவிட்டு, பிறகு பணம் எங்கே சென்றது என தெரியவில்லை. எப்படி செலவானது, கையில் சுத்தமாக பனம் இல்லை என புலம்புவதை கேட்டிருப்போம். இனி இதெற்கெல்லாம் அவசியம் இல்லை.

சாட்ஜிபிடியில் (ChatGPT) வந்துள்ள இந்த புதிய அம்சத்தை பயன்படுத்தி பணத்தை எவ்வாறு முறையாக செலவு செய்ய வேண்டும் என்பது குறித்த புரிதலை பெற்றுக்கொள்ள முடியும். இந்த நிலையில், ஒவ்வொரு நபரும் தங்களது செலவுகளை சரியாக திட்டமிட அறிமுகம் செய்யப்பட்டுள்ள அந்த புதிய அம்சம் என்ன, அது எவ்வாறு செயல்படும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இனி பணத்தை சரியாக செலவு செய்யலாம் – சாட்ஜிபிடியில் புதிய அம்சம்

செயற்கை நுண்ணறிவு (AI – Artificial Intelligence) அம்சத்தின் இந்த சாட்ஜிபிடியை பலரும் தங்களது கேள்விகளுக்கு பதில் தேடும் இடமாக பார்க்கின்றனர். உடல்நலம், உறவுகள், அறிவியல், வாழ்க்கை என பலவற்றை குறித்து சாட்ஜிபிடியிடம் கேள்வி கேட்கின்றனர். அந்த வகையில் பலரும் தங்களது செலவுகளை எவ்வாறு மேம்படுத்துவது, திட்டமிட்டு செலவு செய்வது என்பது குறித்து சாட்ஜிபிடியிடம் கேட்டு வந்தனர். அதற்கு சாட்ஜிபிடியும் எப்படி செலவு செய்ய வேண்டும் என்பது குறித்த அறிவுரைகளை வழங்கி வந்தது. ஆனால், இவ்வாறு சாட்ஜிபிடி வழங்கும் அறிவுரைகள் பலருக்கும் பொருந்தாமலே இருந்து வந்தது. இந்த நிலையில் தான், தனிநபரின் கணக்கை நேரடியாக ஆராய்ந்து அதற்கு ஏற்ப அறிவிரைகளை வழங்கும் வகையில் புதிய அம்சம் ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க : எரிபொருள் விலை உயர்வு – ரூ.10 லட்சத்திற்குள் சிறந்த எலக்ட்ரிக் கார்கள் – உங்கள் சாய்ஸ் எது?

இந்த அம்சத்தை எப்படி பயன்படுத்துவது?

சாட்ஜிபிடியின் சைடுபாரில் இருக்கும் பைனான்ஸ் (Finance) என்ற ஆப்ஷனை கிளிக் செய்து, கெட் ஸ்டார்ட்டட் (Get Started) என்ற ஆப்ஷனை தேர்வு செய்ய வேண்டும். பிறகு உங்களது வங்கி கணக்கு மற்றும் கிரெடிட் கார்டு விவரங்கள் இணைக்கப்பட்ட பிறகு நீங்கள் எதற்காக பணம் செலவு செய்துள்ளீர்கள் என்பதை பிரித்து காட்டும். பிறகு உங்களது நிதி நிலை எவ்வாறு உள்ளது என்பதை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப உங்களுக்கு ஆலோசனை வழங்கும்.

Follow Us