மொத்த Vs தனித்தனி FD முதலீடு.. இரண்டில் எதில் முதலீடு செய்வது அதிக லாபத்தை தரும்?
Whole FD Investment Vs Split FD Investment | இந்தியர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக உள்ள திட்டம் தான் நிலையான வைப்பு நிதி. இந்த நிலையில், இந்த நிலையான வைப்பு நிதி திட்டத்தில் தனித்தனியாக அல்லது மொத்தமாக என எதில் முதலீடு செய்வது சிறந்தது.
இந்திய பொதுமக்கள் மத்தியில் மிகவும் பிரபரலமாக உள்ள முதலீட்டு திட்டம் தான் நிலையான வைப்பு நிதி (FD – Fixed Deposit). இந்த திட்டம் மிகவும் பாதுகாப்பாக இருப்பதன் காரணமாக பலரும் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய அதிக ஆர்வம் காட்டுகின்றனர். மிக குறைந்த அளவில் இருந்து கூட இந்த திட்டத்தில் முதலீடு செய்யலாம் என்பதால் பலரும் இதனை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், நிலையான வைப்பு நிதி திட்டத்தில் தனித்தனியாக முதலீடு செய்வது சிறந்ததா அல்லது மொத்தமாக முதலீடு செய்வது சிறந்ததா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
நிலையான வைப்பு நிதி திட்டம் – தனித்தனி முதலீடு Vs மொத்த முதலீடு
பலரும் தங்களது கையில் கொஞ்சம் மொத்தமாக பணம் கிடைத்தால் அதனை உடனே நிலையான வைப்பு நிதி திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும் என நினைக்கின்றனர். ஆனால், பலருக்கும் சிறந்த முறையில் முதலீடு செய்து அதிக லாபம் பெறுவது எப்படி என தெரியாமல் உள்ளது.
இதையும் படிங்க : உங்கள் ஆதார் கார்டு 10 ஆண்டுகள் பழமையானதா? உடனே அப்டேட் பண்ணுங்க – மத்திய அரசு எச்சரிக்கை




ரூ.5 லட்சத்தை ஒரு ஒரு லட்சமாக பிரித்து முதலீடு செய்யலாமா?
ரூ.5 லட்சம் பணத்தை மொத்தமாக முதலீடு செய்யலாம் அல்லது ஒரு ஒரு லட்சமாக பிரித்து முதலீடு செய்யலாம். இரண்டு முதலீடுகளும் ஒரே மாதிரியான வருமானத்தை தான் தரும், பெரிய வித்தியாசம் இருக்காது. ஆனால், ஏன் அவ்வாறு செய்ய வேண்டும் என்பது குறித்து தெரிந்துக்கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.
இதையும் படிங்க : ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் ரூ.64,227 வரை லாபம் – எஸ்பிஐயின் ஃபிக்சட் டெபாசிட் திட்டம்
10 ஆண்டுகளுக்கான திட்டத்தில் ரூ.5 லட்சத்தை ஒரு ஒரு லட்சமாக பிரித்து முதலீடு செய்தால் 10 ஆண்டுகளின் முடிவில், ரூ.1,00,160 கிடைக்கும். அதாவது ரூ.1 லட்சத்திற்கு ரூ.2,00,160 வருமானமாக பெறலாம். இதன்படி, 5 நிலையான வைப்பு நிதி முதலீட்டுகளை கூட்டினால் கிட்டத்தட்ட மொத்தமாக டெபாசிட் செய்த அளவுக்கு வருமானம் திரும்ப கிடைக்கும். மொத்தமாக முதலீடு செய்வதும், பிரித்து பிரித்து முதலீடு செய்வதும் ஒரே மாதிரியான லாபத்தை கொடுத்தாலும் பிரித்து பிரித்து முதலீடு செய்வதையே நிபுணர்கள் பரிந்துறைக்கின்றனர்.