AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் ஆதார் கார்டு 10 ஆண்டுகள் பழமையானதா? உடனே அப்டேட் பண்ணுங்க – மத்திய அரசு எச்சரிக்கை

Aadhaar Update : ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் வங்கி சேவைகள், அரசு நலத்திட்டங்கல், மொபைல் சிம் சரிபார்ப்பு, KYC சேவைகள் போன்ற பல சேவைகள் பாதிக்கப்படலாம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் எச்சரித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

உங்கள் ஆதார் கார்டு 10 ஆண்டுகள் பழமையானதா? உடனே அப்டேட் பண்ணுங்க  – மத்திய அரசு எச்சரிக்கை
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Published: 18 May 2026 17:00 PM IST

இன்றைய காலத்தில் ஆதார் அட்டை என்பது வெறும் அடையாள அட்டையாக மட்டும் இல்லாமல், அரசின் அனைத்து முக்கிய சேவைகளுக்கும் முக்கியமான ஆவணமாக மாறியுள்ளது. வங்கி கணக்கு தொடங்குவது முதல் சிம் கார்டு வாங்குவது, அரசு நலத்திட்டங்களை பெறுவது வரை அனைத்திற்கும் ஆதார் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் கடந்த 10 ஆண்டுகளாக ஆதார் விவரங்களை புதுப்பிக்காதவர்கள் உடனடியாக அப்டேட் செய்ய வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவித்துள்ளது. இல்லையென்றால் முக்கிய சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்றும் எச்சரித்துள்ளது. அதுகுறித்து விரிவாக பார்க்கலாம்.

ஏன் ஆதார் அப்டேட் அவசியம்?

ஆதார் கார்டில் உள்ள தகவல்கள் அப்டேட் செய்யப்படாமல் இருந்தால் வங்கி சேவைகள், அரசு நலத்திட்டங்கல், மொபைல் சிம் சரிபார்ப்பு, KYC சேவைகள் போன்ற பல சேவைகள் பாதிக்கப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் சில நேரங்களில் வெரிஃபிகேஷன் கூட செய்யமுடியாத நிலை ஏற்படும் என எச்சரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : வருமான வரி தாக்கல் செய்ய போறீங்களா?.. ஐடிஆர்-1, ஐடிஆர்-4 படிவங்கள் குறித்து கட்டாயம் தெரிந்துக்கொள்ளுங்கள்!

புதிய ஆதார் செயலி

 

நம்மிடம் உள்ள ஆதார் கார்டின் கீழே இடது பக்கத்தில் அது எப்போது வழங்கப்பட்டது என்ற தேதி குறிப்பிடப்பட்டிருக்கும். நம்மிடம் உள்ள ஆதார் கார்டு 2016 அல்லது அதற்கு முன்பு எடுக்கப்பட்டிருந்தால் அதனை உடனே அப்டேட் செய்வது அவசியம் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆதாரில் தகவல்களை ஆன்லைன் மூலம் இலவசமாக அப்டேட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன் படி வருகிற ஜூன் 14, 2026 வரை ஆன்லைனில் ஆதார் விவரங்களை இலவசமாக அப்டேட் செய்து கொள்ளலாம். ஆனால் ஆதார் மையங்களுக்கு சென்று அப்டேட் செய்ய சுமார் ரூ.50 கட்டணமாக செலுத்த வேண்டியிருக்கும் என கூறப்படுகிறது. மேலும் ஜூன் 14, 2026க்கு பிறகு ஆன்லைனில் அப்டேட் செய்பவர்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க : மாதம் ரூ.9,250 வருமானம் பெறலாம்.. கணவன் – மனைவி இணைந்து முதலீடு செய்ய அசத்தல் திட்டம்!

ஆதார் அப்டேட் செய்யும் முன் கீழ்க்கண்ட ஆவணங்களை தயாராக வைத்திருக்க வேண்டும். அடையாள சான்றாக பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட் இவற்றை ஒன்றை கையில் வைத்திருக்க வேண்டும். முகவரி சான்றாக மின்சார கட்டண ரசிது, வங்கி பாஸ்புக், ரேஷன் கார்டு போன்ற ஆவணங்களை பயன்படுத்தலாம். ஆவணங்களை JPEG, PNG, PDF ஃபைல்களாக அப்லோடு செய்யலாம்.

Follow Us