AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அஞ்சல சேமிப்பு திட்டங்கள் போதும்.. சுலபமாக ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம்.. எப்படி?

Create 1 Crore Rupees With Government Schemes | அரசு அஞ்சலங்கள் மூலம் பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில், அஞ்சலக சேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்து ரூ.1 கோடி நிதியை உருவாக்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

அஞ்சல சேமிப்பு திட்டங்கள் போதும்.. சுலபமாக ரூ.1 கோடி நிதியை உருவாக்கலாம்.. எப்படி?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 15 May 2026 14:21 PM IST

அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் நிலையான பொருளாதார வேண்டும் என்ற ஆசை இருக்கும். அதற்காக பலர் இரவு, பகல் பாராது அயராது உழைப்பர். என்னதான் உழைத்து வருமானத்தை ஈட்டிக்கொண்டே இருந்தாலும், பலராலும் தாங்கள் நினைத்த இலக்கை அடைய முடியாமல் போய்விடும். அதற்கு காரணம், சம்பாதிக்கும் பணத்தை பெருக்காமல் விடுவதுதான். இதற்காக தான் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அவற்றில் முதலீடு செய்வதன் மூலம் ரூ.1 கோடி என்ற இலக்கை சாமானிய மக்கள் கூட மிக சுலபமாக எட்டிவிட முடியும். இந்த நிலையில், எந்த திட்டத்தில் எப்படி முதலீடு செய்வது ரூ.1 கோடி இலக்கை அடைய உதவும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

இரண்டு திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும்

அரசின் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களில் முதலீடு செய்து ரூ.1 கோடி நிதியை உருவாக்க வேண்டும் என்றால் ஒருவர் 2 திட்டங்களில் முதலீடு செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. ஒன்று அஞ்சலக டைம் டெபாசிட் திட்டம், மற்றொன்று அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் திட்டம்.

அஞ்சலக டைம் டெபாசிட் திட்டம்

பிக்சட் டெபாசிட் திட்டம் மற்றும் டைம் டெபாசிட் திட்டம் ஆகிய இரண்டுமே ஒரே திட்டம் தான். இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 7.5 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் ஒருவர் ரூ.1 கோடி பணத்தை உருவாக்க வேண்டும் என்றால் 5 ஆண்டுகள் திட்டத்தில் ரூ.10 லட்சத்தை முதலீடு செய்ய வேண்டும். இந்த ஐந்து ஆண்டுகளில் முதலீடு செய்த பணம் ரூ.14,49,948 ஆக  இருக்கும்.

இதையும் படிங்க : நாடு முழுவதும் அமுல், மதர் டெய்ரி பால் விலை அதிரடி உயர்வு.. பொதுமக்கள் ஷாக்!

பிறகு இந்த திட்டத்தில் தொடர்ந்து 15 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். அதவாது மொத்தமாக சுமார் 20 ஆண்டுகள் இந்த திட்டத்தில் முதலீடு செய்ய வேண்டும். 20 ஆண்டுகள் கழித்து உங்களுடைய 10 லட்சம் முதலீடு மொத்தமாக ரூ.44,19,877 ஆக மாறியிருக்கும்.

அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் திட்டம்

மேலே குறிப்பிடப்பட்டதை போலவே இந்த அஞ்சலக ரெக்கரிங் டெபாசிட் திட்டத்திலும் 20 ஆண்டுகள் முதலீடு செய்ய வேண்டும். இந்த திட்டத்திற்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், இதில் மாதத்திற்கு ரூ.10,000 முதலீடு செய்ய வேண்டும். 20 ஆண்டுகளுக்கு இதேபோல முதலீடு செய்யும் பட்சத்தில் மொத்தமாக ரூ.67,31,607 கிடைக்கும்.

இதையும் படிங்க : 7.5% வட்டி.. வெறும் ரூ.1,000 முதல் முதலீடு செய்யலாம்.. சிறந்த பலன்களை பெற முடியும்!

இவ்வாறு இரண்டு திட்டங்களிலும் இந்த முறைப்படி முதலீடு செய்யும் பட்சத்தில் அதிக லாபத்தை பெற முடியும்.

Follow Us