மே 14, 2026: கடந்த இரண்டு, மூன்று நாட்களாக தங்கத்தின் விலை தொடர்ந்து ஏற்றத்தில் இருந்து வருகிறது. நேற்று மட்டும் தங்கம் ஒரு சவரனுக்கு 8,000 ரூபாய் வரை அதிகரித்தது. அதேபோல், மாலையில் 3,000 ரூபாய் வரை குறைந்து விற்பனை செய்யப்பட்டது. இந்த சூழலில், இன்றைய தினம் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் தங்கத்திற்கு 50 ரூபாய் உயர்ந்து விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், வெள்ளியின் விலை சரிவை சந்தித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
ஏன் இந்த விலை உயர்வு:
மத்திய நிதி அமைச்சகம் தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்கவரி குறித்து அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், தங்கம் மற்றும் வெள்ளிப் பொருட்கள் மீதான சுங்கவரி 6 சதவீதத்திலிருந்து 15 சதவீதமாக உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தங்கத்தின் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
மேலும் படிக்க: ஈரான் போர் எதிரொலி: தங்கம், வெள்ளி இறக்குமதி வரி 15% ஆக உயர்வு…
நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பை பாதுகாப்பதன் அவசியத்தை பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார். தற்போதைய சூழலில் தங்கச் செலவுகள் மிக அதிகரித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், நாட்டின் பொருளாதார நலனை கருத்தில் கொண்டு மக்கள் குறைந்தது ஓராண்டு காலத்திற்கு தங்கம் வாங்குவதை தவிர்க்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மீண்டும் உயர்ந்த தங்கம் விலை:
இந்த நிலையில், மே 14ஆம் தேதியான இன்று தங்கத்தின் விலை மீண்டும் உயர்ந்துள்ளது. ஒரு கிராம் தங்கம் 50 ரூபாய் அதிகரித்து விற்பனை செய்யப்படுகிறது. அந்த வகையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் 15,050 ரூபாய்க்கும், ஒரு சவரன் ஆபரணத் தங்கம் 1,20,400 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும் படிக்க: பெட்ரோல், டீசல் விலை உயரும் வாய்ப்பு – ரிசர்வ் வங்கி ஆளுநர் பரபரப்பு தகவல்
அதேபோல், 24 காரட் தங்கம் ஒரு கிராம் 16,418 ரூபாய்க்கும், ஒரு சவரன் 24 காரட் தங்கம் 1,31,344 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
தங்கத்தின் விலை உயர்ந்திருந்தாலும், வெள்ளியின் விலை கணிசமாக குறைந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 5 ரூபாய் குறைந்து 315 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், ஒரு கிலோ வெள்ளி 3 லட்சத்து 15 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.