வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை குறைந்தது.. எவ்வளவு தெரியுமா?
Commercial Gas Cylinder Price Decreased In Chennai | ஈரான் போர் காரணமாக கடும் விலை உயர்வை சந்தித்து வந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் தற்போது சரிவை சந்தித்துள்ளது. இந்த நிலையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை நிலவரம் குறித்து பார்க்கலாம்.
சென்னை, ஜூலை 01 : சென்னையில் 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை (Commercial Gas Cylinder Price) அதிரடியாக குறைந்துள்ளது. அதாவது, வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை ரூ.172.50 குறைந்துள்ளது. ஈரான் போர் (Iran War) காரணமாக வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் கடும் விலை உயர்வை சந்தித்து வந்த நிலையில், தற்போது விலை குறைந்துள்ளது.
கடும் விலை உயர்வை சந்தித்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்
ஈரான் போர் காரணமாக உலக நாடுகள் கரும் சிரமங்களை சந்தித்தது. அதில் மிக முக்கியமான ஒன்றுதா கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு. ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியதன் காரணமாக எண்ணெய் கப்பல்கள் உலக நாடுகளுக்கு சென்று சேராமல் கடும் பற்றாக்குறை ஏற்பட்டது. இதன் காரணமாக இந்திய உள்ளிட்ட உலக நாடுகளில் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் சிலிண்டர்களின் விலை பல மடங்கு உயர்வை சந்தித்தது.
இதையும் படிங்க : ஜூலை முதல் ரூ.10, ரூ.20, ரூ.50 உள்ளிட்ட நோட்டுக்கள் செல்லாதா?.. இணையத்தில் பரவும் தகவல்.. உண்மை என்ன?
விலை குறைந்த வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர்
ஈரான் போரின் போது கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், குடும்பங்களுக்கு வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர்கள் செல்வதை உறுதி செய்யும் வகையில், வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டருக்கு கட்டுப்பாடுகளும் விலை உயர்வும் விதிக்கப்பட்டது. தற்போது நிலமை சீராகி வரும் நிலையில், கேஸ் சிலிண்டர் விலை படிப்படியாக குறைந்து வருகிறது. அந்த வகையில், தற்போது வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் விலை சரிந்துள்ளது.
இதையும் படிங்க : கடும் சரிவில் தங்கம் விலை.. தற்போது முதலீடு செய்யலாமா?.. நிலவரம் என்ன?
ரூ.172.50 குறைந்த வணிக கேஸ் சிலிண்டர் விலை
சென்னையில் இன்று 19 கிலோ எடை கொண்ட வணிக பயன்பாட்டுக்கான கேஸ் சிலிண்டர் ரூ.172.50 குறைந்து ரூ.3,106-க்கு விற்பனை செய்யப்படுகிறது. 14.2 கிலோ எடை கொண்ட வீட்டு உபயோக கேஸ் சிலிண்டர் விலையில் மாற்றமின்றி, ரூ.957.50-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஈரான் போர் காரணமாக கடந்த நான்கு மாதங்களாக உயர்ந்து வந்த வணிக கேஸ் சிலிண்டர் விலை தற்போது சரிவை சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது.