கடும் சரிவில் தங்கம் விலை.. தற்போது முதலீடு செய்யலாமா?.. நிலவரம் என்ன?
Is This The Right Time To Invest In Gold | ஈரான் போரால் ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்த தங்கம், ஜூன் மாதம் தொடங்கியது முதலே கடும் சரிவை சந்தித்து வருகிறது. இந்த நிலையில், தற்போது தங்கத்தில் முதலீடு செய்வது சரியா என்பது குறித்து பார்க்கலாம்.
2026, ஜூன் மாதம் நகைப்பிரியர்களுக்கு மிகவும் மகிழ்ச்சியான மாதமாக அமைந்துள்ளது. காரணம், ஜனவரி மாதத்தில் ரூ.15,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம் (Gold), ஜூன் மாதத்தில் ரூ.13,000-க்கு விற்பனையாகி வருகிறது. இது பொதுமக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. தங்கம் விலை இத்தகைய சரிவை கண்டு இருப்பது மகிழ்ச்சியை மட்டுமன்றி, குழப்பத்தையும் ஏற்படுத்தியுள்ளது. அதாவது, தங்கம் விலை மேலும் குறையுமா, தற்போதைய சூழலில் தங்கத்தில் முதலீடு செய்வது பாதுகாப்பானதா என்பது குறித்த பல்வேறு கேள்விகள் எழுந்து வருகின்றன. அவற்றை குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஜூன் மாதத்தில் கடும் சரிவை சந்தித்த தங்கம் விலை
பிப்ரவரி மாதம் முதலே ஈரான் போர் (Iran War) காரணமாக தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வந்தது. ஆனால், ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை தொடர் சரிவை சந்தித்து வருகிறது. அதாவது, தற்போதைய நிலவரப்படி சென்னையில் இன்று (ஜூன் 30, 2026) 22 காரட் தங்கம் ஒரு கிராம் ரூ.13,030-க்கும், ஒரு சவரன் ரூ.1,04,240-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. அதாவது இன்று ஒரே நாளில் மட்டும் தங்கம் விலை ரூ.2,160 சரிவை சந்தித்துள்ளது.
இதையும் படிங்க : யுபிஐ-ல் ரூ.100-க்கு பதில், ரூ.1,000 அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம், தீர்வு காண வழிகள் உண்டு!




தற்போது தங்கத்தில் முதலீடு செய்யலாமா?
பொதுவாக புவிசார் பதற்றம், போர் காரணமாக தங்கம் விலை அதிகரிக்க தான் செய்யும். ஆனால், ஈரான் போரில் அது தலைகீழாக நடந்துள்ளது. அதற்கு ஒரு முக்கிய காரணம் உள்ளது. என்னவென்றால், இந்த முறை சந்தையின் கவனம் போர் பதற்றத்தை விட அதனால் ஏற்படும் பணவீக்கத்தின் மீதுதான் இருந்தது. குறிப்பாக போருக்கு மத்தியில் ஈரான், ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்த நிலையில், பணவீக்கம் அதிகரிக்கும் என்ற எண்ணம் முதலீட்டாளர்கள் மத்தியில் தோன்றியது.
இதையும் படிங்க : Gold : 2016 முதல் 2026 வரை.. 10 ஆண்டுகளில் தங்கம் எவ்வளவு லாபத்தை கொடுத்துள்ளது?
பணவீக்கம் அதிகரிக்கும்போதெல்லாம் அமெரிக்க மத்திய வங்கி வட்டி விகிதத்தை குறைக்காமல் வைத்திருக்கும். எனவே முதலீட்டாளர்கள் தங்களிடம் இருக்கும் தங்கத்தை விற்று அதிக வட்டி வழங்கப்படும் திட்டங்கள் பக்கம் திரும்புவார்கள். இவ்வாறு பல்வேறு காரணங்கள் காரணமாக தான் தங்கம் தொடர் விலை வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இனி வரும் காலங்களில் இதே நிலை தொடருமே என்பதை பொருத்திருந்து தான் பார்க்க முடியும்.
நீண்ட காலத்தை கருத்தில் கொண்டு தங்கத்தில் முதலீடு செய்தால் சிறந்த லாபத்தையே கொடுக்கும். ஆனால், குறுகிய காலத்தை கருத்தில் கொண்டு தங்கத்தில் முதலீடு செய்யும் பட்சத்தில் சூழலை பொருத்து முதலீடு செய்வது சிறப்பானதாக இருக்கும்.