யுபிஐ-ல் ரூ.100-க்கு பதில், ரூ.1,000 அனுப்பிவிட்டீர்களா?.. கவலை வேண்டாம், தீர்வு காண வழிகள் உண்டு!
Do This If You Sent Money Mistakenly Through UPI | தற்போதைய காலக்கட்டத்தில் பொதுமக்கள் யுபிஐ செயலிகளை பயன்படுத்தி தான் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்கின்றனர். இந்த நிலையில், யுபிஐ-ல் தவறாக பணம் அனுப்பினால் அதனை சரிசெய்ய சில வழிகள் உள்ளன.
முன்பெல்லாம் பணத்தை செலவு செய்ய வேண்டும் என்றால் வங்கி கணக்கில் இருந்தோ அல்லது ஏடிஎம் மையங்களில் இருந்தோ பணத்தை கையில் எடுத்து வைத்துக்கொண்டு செலவு செய்யும் நிலை தான் இருந்தது. ஆனால், தற்போது அதெற்கெல்லாம் அவசியமே இல்லை. காகிதம் இல்லாமல் அதாவது கையில் பணமே இல்லாமல் யுபிஐ (UPI – Unified Payment Interface) செயலிகள் மூலம் பண பரிமாற்றம் செய்யலாம். இவ்வாறு மனிதர்களின் அன்றாட வாழ்வில் ஒரு முக்கிய அங்கமாகவே யுபிஐ செயலிகள் உள்ளன. இந்த நிலையில், யுபிஐ-ல் தவறாக பணம் அனுப்பிவிட்டால் என்ன செய்வதென்று விரிவாக பார்க்கலாம்.
யுபிஐ-ல் பணத்தை தவறாக அனுப்பிவிட்டீர்களா? – கவலை வேண்டாம்
தற்போதைய காலக்கட்டத்தில் ரூ.10 முதல் ஆயிரக்கணக்கிலான பிள்களை கூட பெரும்பாலானவர்கள் யுபிஐ மூலமே மேற்கொள்கின்றனர். நொடி பொழுதில் பண பரிமாற்றம் செய்ய முடியும் என்பதன் காரணமாக பலரும் இந்த யுபிஐ பண பரிவர்த்தனை முறையை தேர்வு செய்கின்றனர். இந்த நிலையில், அவசரத்தில் தொகையை மாற்றி அனுப்பும் சிக்கல்களை பலரும் எதிர்க்கொள்கின்றனர். அதற்கு ஒரு தீர்வு உள்ளது உங்களுக்கு தெரியுமா?
இதையும் படிங்க : வேலைக்கு செல்பவர்கள் மட்டுமல்ல.. இந்த 9 பேரும் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும்.. யார் யார்?
தவறான பரிவர்த்தனை – பணத்தை திரும்ப பெறுவது எப்படி?
நீங்கள் அனுப்ப வேண்டிய தொகைக்கு பதிலாக அதிக தொகையை அனுப்பி விட்டீர்கள். உதாரணமாக ரூ.100 பணம் அனுப்ப வேண்டிய இடத்தில் ரூ.1,000 பணம் அனுப்பி விட்டீர்கள் என்றால் கவலைப்பட வேண்டாம். இந்த நேரத்தில் பதற்றமடையாமல் விரைவாக செயல்பட வேண்டும். அதாவது, நீங்கள் பணத்தை அனுப்பியவர் உங்களுக்கு தெரிந்தவர் என்றால், அவரையே அழைத்து பணத்தை நீங்கள் திருப்பி கேட்கலாம். ஒருவேளை நீங்கள் பணம் அனுப்பியவர் உங்களுக்கு தெரியாதவர் என்றால், அவரை தொடர்புக்கொள்ள முயற்சி செய்யுங்கள்.
இதையும் படிங்க : Gold Price : திடீர் டிவிஸ்ட் அடித்த தங்கம்.. 24 மணி நேரத்தில் 3 முறை உயர்ந்த!
ஒருவேளை நீங்கள் பணம் அனுப்பிய நபர் உங்களுக்கு பணத்தை திருப்பி அனுப்பவில்லை என்றால் நீங்கள் அது தொடர்பாக புகார் செய்யலாம். அதாவது, உங்கள் யுபிஐ செயலி மூலமாகவே நீங்கள் புகார் அளிக்கலாம். அவ்வாறு புகார் அளிக்கும்போது நீங்கள் பணம் அனுப்பிய நபரின் யுபிஐ ஐடி, பெயர் உள்ளிட்ட தகவல்களை சமர்ப்பிக்க வேண்டும். அப்படியும் இல்லை என்றால் உங்களின் வங்கியை தொடர்புக்கொள்ளலாம். அவர்களிடம் உங்களது பண பரிவர்த்தனை விவரங்களை வழங்குவதன் மூலம் தீர்வு கிடைக்க வாய்ப்பு உள்ளது.



