AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஊழியர்கள் கவனத்திற்கு.. ஜூன் 26 முதல் 28 வரை.. பிஎஃப் ஆன்லைன் சேவைகள் ரத்து!

EPFO Online Services Will Be Suspended | ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் இபிஎஃப்ஓ 3.0 அம்சத்தை அறிமுகம் செய்ய உள்ளது. இந்த நிலையில், இணையதளத்தை மேம்படுத்துவதன் காரணமாக மூன்று நாட்களுக்கு இபிஎஃப்ஓ ஆன்லைன் சேவைகளை பெற முடியாது என அறிவித்துள்ளது.

ஊழியர்கள் கவனத்திற்கு.. ஜூன் 26 முதல் 28 வரை.. பிஎஃப் ஆன்லைன் சேவைகள் ரத்து!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 26 Jun 2026 15:01 PM IST

இந்தியாவில் உள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் (EPFO – Employee Provident Fund Organization) பயனர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளம் சில நாட்கள் செயல்படாது என்று கூறப்பட்டுள்ளது. இபிஎஃப்ஓ சேவைகளை பெற விரும்பும் பயனர்கள் அதற்காக சில நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்த நிலையில், ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் மொத்தம் எத்தனை நாட்கள் செயல்படாது, அது குறித்து இபிஎஃப்ஓ வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்ச இணையதளம் 3 நாட்கள் செயல்படாது

முன்பெல்லாம் இபிஎஃப்ஓ சார்ந்த தேவைகளை பெற ஊழியர்கள் அலுவலகத்திற்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது. ஆனால், தற்போது அதெற்கெல்லாம் தேவை இல்லை. காரணம், இணையதளத்தின் மூலம் வீட்டில் இருந்துக்கொண்டே மிக சுலபமாக இபிஎஃப்ஓ சேவைகளை பெற முடியும். இந்த நிலையில் தான், இபிஎஃப்ஓ ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது, நான்கு நாட்களுக்கு இபிஎஃப்ஓ இணையதளம் செயல்படாது என்று அறிவித்துள்ளது.

இதையும் படிங்க : கேஸ் சிலிண்டர் முதல் ஆதார் கார்டு வரை.. ஜூலை மாதத்தில் அமலுக்கு வரும் முக்கிய மாற்றங்கள்!

ஜூன் 26 முதல் இபிஎஃப்ஓ இணையதளம் செயல்படாது

ஊழியர்கள் மிக விரைவாக பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ள இபிஎஃப்ஓ 3.0 என்ற அம்சம் விரைவில் அறிமுகமாக உள்ளது. இந்த அம்சத்தின் மூலம் பிஎஃப் பணத்தை ஏடிஎம் மற்றும் யுபிஐ மூலம் மிக விரைவில் எடுத்துக்கொள்ளலாம். இந்த அம்சத்தை அறிமுகம் செய்வதற்காக இபிஎஃப்ஓ இணையதளத்தை மேம்படுத்தும் பணியை மேற்கொண்டு வருவதன் காரணமாக நான்கு நாட்களுக்கு இபிஎஃப்ஓ இணையதளத்தை பயன்படுத்த முடியாது என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : Bank Holiday : ஜூலை மாதத்தில் 7 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. லிஸ்ட் இதோ!

ஜூன் 26 முதல் 28 பிஎஃப் ஆன்லைன் சேவைகள் தற்காலிக ரத்து

ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தின் இணையதளத்தில் மென்பொருள் மற்றும் தரவுத்தள மேம்படுத்தும் பணிகள் நடைபெறுவதன் காரணமாக ஜூன் 26, 2026 முதல் ஜூன் 28, 2026 வரை பிஎஃப் ஆன்லைன் சேவைகள் தற்காலிகமாக நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us