தினமும் ரூ.115 முதலீடு செய்தால் ரூ.2.50 லட்சம் கிடைக்கும்.. அஞ்சல RD-ல் இப்படி முதலீடு செய்யுங்கள்!
Invest 115 Rupees To Get 2.5 Lakh | அஞ்சலகங்கள் மூலம் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றான தொடர் வைப்பு நிதியில் ரூ.115 முதலீடு செய்து மொத்தமாக ரூ.2.50 லட்சம் பெற முடியும்.
பாதுகப்பான மற்றும் நிலையான வருமானம் பெற வேண்டும் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டியது கட்டாயமாக உள்ளது. காரணம், வருமானமாக பெறும் பணத்தை செலவு மட்டும் செய்தால் கையில் பணம் இருக்காது. இதன் காரணமாக எதிர்பாராத காலங்களில் ஏற்படும் நிதி சிக்கல்களை சமாளிக்க முடியாமல் கடன் வாங்கும் சூழலுக்கு தள்ளப்படும் வாய்ப்பு உள்ளது. எனவே தான், சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், தினமும் ரூ.115 முதலீடு செய்வதன் மூலம் ரூ.2.5 லட்சத்தை உருவாக்குவது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
தினமும் ரூ.115 முதலீடு செய்து ரூ.2.5 லட்சம் பெறலாம்
பொதுமக்கள் சேமிப்பு மற்றும் முதலீடு செய்வதற்கு அரசு அஞ்சலங்கள் மூலம் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அத்தகைய திட்டங்களில் ஒன்றுதான் அஞ்சலக தொடர் வைப்பு நிதி (RD – Recurring Deposit) திட்டம். இந்த திட்டத்தில் முதலீடு செய்வதன் மூலம் நல்ல லாபத்தை பெற முடியும். பலரும் மொத்தமாக முதலீடு செய்ய முடியாது என நினைத்துக்கொண்டு முதலீடு செய்யாமலே இருப்பர். அத்தகையவர்களுக்கான திட்டம் தான் இது. அதாவது, இந்த திட்டத்தில் குறைந்த தொகையை மாதம் மாதம் முதலீடு செய்ய முடியும்.
இதையும் படிங்க : பிவிசி ஆதார் கார்டுக்கு விண்ணப்பிக்க வேண்டுமா?.. வீட்டில் இருந்தே சுலபமாக செய்யலாம்!




மாதம் ரூ.3,500 முதலீடு செய்தால் எவ்வளவு லாபம் கிடைக்கும்?
இந்த அஞ்சலக தொடர் வைப்பு நிதி திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படுகிறது. இந்த திட்டத்தில் தினமும் ரூ.115 முதலீடு செய்யும் பட்சத்தில் ஒரு ஆண்டில் ரூ.3,500 முதலீடு செய்ய முடியும். இந்த திட்டம் 5 ஆண்டுகளுக்கான திட்டம் என்பதால் நீங்கள் தொடர்ந்து 60 மாதங்களுக்கு முதலீடு செய்ய வேண்டும். அவ்வாறு நீங்கள் மாதம் மாதம் ரூ.3,500 முதலீடு செய்தால் மொத்தமாக ரூ.2,10,000 முதலீடு செய்திருப்பீர்கள்.
இதையும் படிங்க : பெட்ரோல், டீசல் விலை எப்போது குறையும்?.. மத்திய அமைச்சர் பதில்!
இந்த திட்டத்திற்கு ஆண்டுக்கு 6.7 சதவீதம் வட்டி வழங்கப்படும் நிலையில், 5 ஆண்டுகளுக்கு வட்டியாக மட்டும் ரூ.39,000 கிடைக்கும். அதன்படி, நீங்கள் முதலீடு செய்த தொகை ரூ.2,10,000 மற்றும் அதற்கான வட்டி ரூ.39,000 சேர்த்து மொத்தமாக ரூ.2,49,000 கிடைக்கும்.