AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

உங்கள் பான் கார்டு மோசடிக்கு உள்ளாகலாம்.. இதனை கட்டாயம் செய்யுங்கள்!

Your PAN Card Can Be Misused | இந்தியாவில் குடிமக்கள் சில ஆவணங்களை வைத்திருக்க வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அத்தகைய ஆவணங்களில் ஒன்றுதான் பான் கார்டு. இத்தகைய முக்கியமான பான் கார்டை பயன்படுத்தி மோசடிகள் நடைபெறும் ஆபத்து உள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.

உங்கள் பான் கார்டு மோசடிக்கு உள்ளாகலாம்.. இதனை கட்டாயம் செய்யுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 20 Jun 2026 20:06 PM IST

இந்திய குடிமக்கள் ஆதார் கார்டு (Aadhaar Card), வாக்காளர் அடையாள அட்டை (Voter ID) உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை வைத்திருக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. அத்தகைய ஆவணங்களில் ஒன்றுதான் பான் கார்டு (PAN Card). வருமான வரித்துறை ஒருவரின் பண பரிவர்த்தனை உள்ளிட்ட நிதி நடவடிக்கைகளை கண்காணிக்கும் முக்கிய அம்சமாக பான் கார்டு உள்ளது. இத்தகைய மிக முக்கிய ஆவணமாக உள்ள பான் கார்டை பயன்படுத்தி மோசடிகள் நடைபெறும் வாய்ப்பு உள்ளது. அதாவது, ஒருவரின் பான் கார்டை பயன்படுத்தி அவருக்கே தெரியாமல் கடன் வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளது. எனவே அது குறித்து கவனமாக இருக்க வேண்டியது மிகவும் அவசியமாக உள்ளது.

பான் கார்டு எதற்கெல்லாம் பயன்படுத்தப்படுகிறது?

புதிய வங்கி கணக்கு தொடங்குவது, அதிக அளவிலான பண பரிவர்த்தனை மேற்கொள்ளும்போது என சில முக்கிய இடங்களில் பான் கார்டு சமர்ப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், உங்கள் பான் கார்டை பயன்படுத்தி நீங்கள் பண பரிவர்த்தனைகளை மேற்கொள்ளவில்லை என்றாலும், உங்களது பான் கார்டை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பண பரிவர்த்தனைகளுக்கு நீங்களே பொறுப்பேற்க வேண்டும்.

இதையும் படிங்க : பிஎம் கிசான் 23வது தவணை.. நாளை விவசாயிகளின் வங்கி கணக்கில் வரவுள்ள ரூ.2,000!

போலி பண பரிவர்த்தனைகளை கண்டறிவது எப்படி?

உங்களது பான் கார்டை பயன்படுத்தி போலி அல்லது மோசடி பண பரிவர்த்தனைகள் நடந்துள்ளதா என்பதை கண்டறிய கிரெடிட் ரிப்போர்டை சரிப்பார்க்க வேண்டியது மிகவும் அவசியமாகும். கிரெடிட் ரிப்போர்டில் பான் கார்டை பயன்படுத்தி வங்கி கணக்கு திறக்கப்பட்டுள்ளதா என்பதை சோதனை செய்ய சிபில் ரிப்போர்டை சரிப்பார்க்கலாம். அந்த ரிப்போர்டில் உங்கள் பெயரில் நடைபெற்ற அனைத்து பண பரிவர்த்தனைகளும் இடம்பெற்றிருக்கும்.

இதையும் படிங்க : வெறும் ரூ.75-க்கு பிவிசி ஆதார் கார்டு.. வீட்டில் இருந்தே சுலபமாக பெற்றுக்கொள்ளலாம்!

அந்த கிரெடிட் ரிப்போர்டை பார்க்கும்போது நீங்கள் செய்த பரிவர்த்தனை எது, நீங்கள் செய்யாத பரிவர்த்தனை எது என்பது குறித்து தெரிந்துக்கொள்ளலாம். அப்போது நீங்கள் அல்லாமல் வேறு யாரேனும் பண பரிவர்த்தனை மேற்கொண்டு இருந்தால், உங்கள் பான் கார்டு தவறாக பயன்படுத்தப்பட்டுள்ளது என்று அர்த்தம். அத்தகைய நடவடிக்கைகளை கண்டறிந்தால் உடனடியான வருமான வரித்துறையில் புகார் அளிக்கலாம்.

Follow Us