AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கேஸ் சிலிண்டர் மானியம் பெற ஜூன் 30-க்குள் இதனை செய்ய வேண்டும்.. இல்லை என்றால் சிக்கல்!

Subsidy For Gas Cylinders | இந்தியாவில் கேஸ் சிலிண்டருக்கு மானியம் பெற சாதாரண மற்றும் உஜ்வாலா திட்டத்தின் கேஸ் சிலிண்டர்களை பெறும் நபர்கள் ஜூன் 30, 2026-க்குள் கேஒய்சி மேற்கொள்ள வேண்டும். இல்லை என்றால் அவர்களால் தொடர்ந்து மானியம் பெற முடியாது.

கேஸ் சிலிண்டர் மானியம் பெற ஜூன் 30-க்குள் இதனை செய்ய வேண்டும்.. இல்லை என்றால் சிக்கல்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 19 Jun 2026 00:03 AM IST

ஈரான் போர் (Iran War) காரணமாக கேஸ் சிலிண்டர் (Gas Cylinder) தட்டுப்பாடு ஏற்பட்ட நிலையில், கேஸ் சிலிண்டர் விநியோகத்தில் சில முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. வாடிக்கையாளர்கள் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை கேஸ் சிலிண்டர்களை முன்பதிவு செய்ய வேண்டும் என்பது முதல் பல்வேறு முக்கிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. ஏற்கனவே பல கடுமையான விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் உள்ள நிலையில், ஜூன் 30, 2026-க்குள் இந்த வேலையை செய்து முடிக்கவில்லை என்றால் அவர்களுக்கு கேஸ் சிலிண்டர் மானியம் ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில், கேஸ் சிலிண்டர் மானியம் குறித்து வெளியாகியுள்ள முக்கிய தகவல் குறித்து விரிவாக பார்க்கலாம்.

எல்பிஜி சிலிண்டர்களுக்கு வழங்கப்படும் கேஸ் சிலிண்டர் மானியம்

இந்தியாவில் எல்பிஜி கேஸ் சிலிண்டர்களை வாங்குவதற்கு பொதுமக்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது. அதாவது, சாதாரண வாடிக்கையாளர்களுக்கு ரூ.25 மானியம் வழங்கப்படுகிறது. இதுவே, உஜ்வாலா திட்டத்தின் கீழ் பயன்பெறும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.30 மானியம் வழங்கப்படுகிறது. இவ்வாறு சில திட்டங்கள் மூலம் இந்திய குடிமக்கள் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியத்தை பெற்று வரும் நிலையில், ஜூன் 30, 2026-க்குள் கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் கேஸ் சிலிண்டர்களுக்கான மானியம் நிறுத்தப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க : ரயில் நிலையங்களில் இலவச காத்திருப்பு அறைகள் – எவ்வளவு நேரம் தங்கலாம்?

 கேஸ் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு

பிரதான் மந்திரி உஜ்வாலா யோஜனா திட்டத்தின் கீழ் எரிவாயு இணைப்பு பெற்ற பயனாளிகள் மற்றும் இதுவரை கேஒய்சி செய்து முடிக்காத பொது எல்பிஜி பயனர்கள் உடனடியாக கேஒய்சி (KYC – Know Your Customer) செய்து முடிக்க வேண்டும். ஏற்கனவே கேஒய்சி முடித்தவர்களுக்கு இது அவசியம் இல்லை. இந்தியன் ஆயில், பாரத் கேஸ் மற்றும் ஹெச்பி கேஸ் ஆகிய நிறுவனங்கள் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. எனவே கேஸ் சிலிண்டர்களுக்கு தொடர்ந்து மானியம் பெற விரும்பும் பொது மற்றும் உஜ்வாலா பயணிகள் இந்த கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us