மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் எவ்வாறு முதலீடு செய்ய வேண்டும்?
Investment Idea For 50000 Rupees Salary | பெரும்பாலான மக்கள் தாங்கள் சம்பாதிக்கும் பணம் மிக குறைவாக உள்ளது என நினைத்து சேமிப்பு அல்லது முதலீடு செய்யாமல் உள்ளனர். இந்த நிலையில், மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் எவ்வளவு முதலீடு செய்யலாம் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சேமிப்பு (Saving) மற்றும் முதலீடு (Investment) என்பது மனிதர்களின் வாழ்வில் மிகவும் முக்கியமான ஒரு அம்சமாக மாறிவிட்டது. விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்டவற்றை எதிர்கொள்ள வேண்டும் என்றால் என்றால் சேமிப்பு மற்றும் முதலீடு தான் கைகொடுக்கும் சிறந்த அம்சங்களாக உள்ளன. எனவே சிறிய தொகையாக இருந்தாலும் அதனை சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். இந்த நிலையில், மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர் ஒருவர் எவ்வளவு சேமிக்க வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
மாதம் ரூ.50,000 சம்பளம் – எப்படி முதலீடு செய்யலாம்
மாத சம்பளம் வாங்கும் பலரும் தங்களது மாத செலவுகளுக்கே பணம் சரியாகிவிடுகிறது என்றும், இதனால் சேமிப்பு அல்லது முதலீடு செய்ய முடியவில்லை என்ற மனநிலையில் முதலீடு செய்ய சேமிப்பு செய்யாமல் உள்ளனர். ஆனால், பொருளாதார வல்லுநர்கள் கூறும் இந்த 50 : 30 : 20 விதியை பின்பற்றுவதன் மூலம் அனைவரும் தங்களது எதிர்காலத்துக்காக சேமிப்பு அல்லது முதலீடு செய்ய முடியும். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இதையும் படிங்க : அஞ்சலக ஆர்டி திட்டம் – ரூ. 300 செலுத்தி ரூ. 17 லட்சம் லாபம் பெறலாம் – எப்படி தெரியுமா?




அடிப்படை தேவைகளுக்காக 50 சதவீதம்
மாத வருமானம் ரூ.50,000-ல் 50 சதவீதம் என்றால் ரூ.25,000 வரும். இந்த பணத்தை அடிப்படை தேவைகளுக்கு பயன்படுத்திக்கொள்ளலாம். அதாவது, வீட்டு வாடகை, மளிகை பொருட்கள், மாத தவணை, கட்டணங்கள் ஆகியவற்றுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
பொழுதுபோக்குக்காக 30 சதவீதம்
மனமகிழ்ச்சியான வாழ்க்கைக்கு பொழுதுபோக்கு மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இதன் காரணமாக 30 சதவீத பணத்தை அதற்காக செலவு செய்யலாம். வெளியே செல்வது, சாப்பிடுவது, திரைப்படம் பார்ப்பது, ஷாப்பிங் செலவது ஆகியவை ஆகும். மீதமுள்ள ரூ.25,000 பணத்தில் 30 சதவீதம் என்றால் 15,000 ஆகும். அதனை இந்த தேவைகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : புதிய தொழில் தொடங்கப் போகிறீர்களா? ஆன்லைனில் தொழிலை பதிவு செய்வது எப்படி?
சேமிப்பு மற்றும் முதலீட்டுக்கு 20 சதவீதம்
முன்பு கூறியதை போலவே சேமிப்பு மற்றும் முதலீடு மனிதர்களின் வாழ்வில் மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில் 20 சதவீத பணத்தை அதாவது, ரூ.10,000-த்தை சேமிப்பு அல்லது முதலீட்டுக்காக ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
மேற்குறிப்பிட்டபடி திட்டமிட்டு மாத சம்பளத்தை செலவு செய்யும் பட்சத்தில் பாதுகாப்பான எதிர்காலத்தை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.