AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

கடன் இல்லாத வாழ்க்கை வேண்டுமா?.. இந்த 60/30/10 ஃபார்முலாவை ட்ரை பண்ணுங்க!

Formula For Debt Free Life With Monthly Salary | மாத சம்பளம் வாங்கும் பலரும் சந்திக்கும் ஒரு முக்கியமான சிக்கல் தான் கடன். இந்த நிலையில், மாத சம்பளத்தை முறையாக பயன்படுத்தி கடன் இல்லாமல் வாழ்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

கடன் இல்லாத வாழ்க்கை வேண்டுமா?.. இந்த 60/30/10 ஃபார்முலாவை ட்ரை பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 16 Jun 2026 11:55 AM IST

தற்போதைய காலக்கட்டத்தில் பெரும்பாலான மக்களுக்கு இருக்கும் முக்கிய பிரச்னையாக கடன் தொல்லை உள்ளது. இதன் காரணமாக பெரும்பாலானவர்களுக்கு சம்பாதிக்கும் பணம் கையில் நிற்பதே கிடையாது. விலைவாசி உயர்வு உள்ளிட்டவற்றால் தேவைகளை பூர்த்தி செய்துக்கொள்ளா கடன் வாங்க வேண்டிய சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்படுகின்றனர். இந்த நிலையில் தான், வெறும் ரூ.15,000 மாத வருமானத்தில் கூட கடன் இல்லாமல் வாழ முடியும் என நிதி ஆலோசகர்கள் கூறுகின்றனர். அது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதம் ரூ.15,000 சம்பளத்திலும் கடன் இல்லாமல் வாழலாம் – எப்படி?

மாதம் ரூ.50,000 சம்பாதிக்கும் நபர்களே மிக கடுமையான பொருளாதார சிக்கல்களில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த நிலையில், வெறும் ரூ.15,000 வைத்து என்ன செய்ய முடியும் என நீங்கள் யோசிக்கலாம். அதற்காக தான், 60/30/10 என்ற ஃபார்முலா ஒன்று உள்ளது. அதனை வாழ்க்கையில் பயன்படுத்தும் பட்சத்தில் குறைவான சம்பளத்திலும் நிதி சிக்கல்கள் இல்லாமல் இருக்க முடியும்.

இதையும் படிங்க : பிஎஃப் கணக்கில் நாமினி இணைக்க வேண்டுமா?.. ஸ்மார்ட்போன் மூலம் சுலபமாக மேற்கொள்ளலாம்!

நிதி மேலாண்மையில் 60/30/10 ஃபார்முலா என்றால் என்ன?

ஒருவருடைய மாத சம்பளம் ரூ.15,000 என வைத்துக்கொள்வோம். இந்த பார்முலாவின் கீழ் அதனை மூன்று பிரிவுகளாக பிரித்து செலவு செய்ய வேண்டும். அதாவது அத்தியாவசிய செலவுகள், விருப்ப செலவுகள் மற்றும் சேமிப்பு என மூன்று விதமாக பிரிக்க வேண்டும். இந்த ஃபார்முலாவில் முதலில் உள்ள 60 என்பது அத்தியாவசிய செலவுகளை குறிக்கிறது. ரூ.15,000 சம்பளத்தில் 60 சதவீதம் என்றால் ரூ.9,000 ஆகும். அந்த பணத்தை தவிர்க்க முடியாத அத்தியாவசிய செலவுகளுக்கான பயன்படுத்த வேண்டும்.

இதையும் படிங்க : ரயிலில் பொதுப் பயணச் சீட்டுடன் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்க முடியுமா? விதி என்ன சொல்கிறது?

ஃபார்முலாவில் இருக்கும் 30 சதவீதம் விருப்ப செலவுகளை குறிக்கிறது. அதாவது ரூ.4,500, 30 சதவீதமாக வரும். அதனை மாதாந்திர ஷாப்பிங் உள்ளிட்ட விருப்ப செலவுகளுக்காக பயன்படுத்திக்கொள்ளலாம். மீதமுள்ள 10 சதவீதம் தான் சேமிப்புக்கானது. ரூ.15,000-ல் 90 சதவீதம் அதாவது ரூ.13,500 செலவாகிவிட்டால் மீதம் ரூ.1,500 இருக்கும். அந்த பணத்தை மாதம் தோறும் சேமித்து வைக்க வேண்டும். அவ்வாறு பணத்தை சேமிக்கும் பட்சத்தில் எதிர்பாராத நேரங்களில் ஏற்படும் செலவுகளை சமாளிக்க முடியும். கடன் வாங்குவதை தவிர்க்கவும் முடியும் என கூறப்படுகிறது குறிப்பிடத்தக்கது.

Follow Us