ரயிலில் பொதுப் பயணச் சீட்டுடன் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்க முடியுமா? விதி என்ன சொல்கிறது?
பலர் ரயிலில் பொதுப் பயணச் சீட்டை மட்டும் வைத்துக்கொண்டு ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணிக்கின்றனர். அவ்வாறு செய்யும்போது பயணச் சீட்டு பரிசோதகரிடம் பிடிபட்டால், அவர்கள் கடுமையான அபராதத்தைச் செலுத்த வேண்டியிருக்கும். இது குறித்த விவரங்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம்.
பயணிகளின் வசதியான பயணத்தை உறுதி செய்வதற்காக ரயில்வே துறை பல்வேறு விதிமுறைகளை அமல்படுத்துகிறது. பயணச் சீட்டு வகையின் அடிப்படையில் எந்தப் பெட்டியில் பயணிக்க வேண்டும், பயணப் பட்டியல் தயாரிக்கப்பட்ட பிறகும் காத்திருப்போர் பட்டியலில் இருந்தால் என்ன செய்ய வேண்டும், மற்றும் பொதுப் பயணச் சீட்டு வைத்திருப்பவர்கள் எந்தப் பெட்டிகளைப் பயன்படுத்தலாம் என்பது குறித்து குறிப்பிட்ட விதிகள் உள்ளன.
விழிப்புணர்வு இல்லாததால், சில பயணிகள் தங்கள் பயணச் சீட்டுக்கு ஒதுக்கப்பட்ட பெட்டியைத் தவிர மற்ற பெட்டிகளில் பயணிக்கின்றனர். டிக்கெட் பரிசோதகர்களிடம் பிடிபட்டால் அபராதம் விதிக்கப்படுகிறது. சிலர் பொது அல்லது காத்திருப்போர் பட்டியல் பயணச் சீட்டுகளுடன் ஸ்லீப்பர் பெட்டிகளில் பயணிக்கின்றனர். இது அனுமதிக்கப்பட்டதா என்பதையும், அவ்வாறு செய்வதன் விளைவுகள் குறித்து விரிவாக தெரிந்துகொள்வோம்.
இதையும் படிக்க : 30 முதல் 50 வரை.. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒருவர் எப்படி சேமிக்க வேண்டும்!




ரயில்வே விதிமுறைகள்
அவசரமாகப் பயணிக்க வேண்டிய சூழலில் பயணச் சீட்டு உறுதி செய்யப்படாதபோது, பலர் பொதுப் பயணச் சீட்டுடன் பயணிக்கத் தீர்மானிக்கின்றனர். இவர்களில் சிலர் ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணிக்கின்றனர். அவ்வாறு செய்வது ரயில்வே விதிமுறைகளை மீறும் செயலாகும். பயணிகள் தாங்கள் வாங்கிய பயணச் சீட்டுக்குரிய வகுப்பில் (class) மட்டுமே பயணிக்க வேண்டும். பொதுப் பயணச் சீட்டுகள் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்க மட்டுமே செல்லுபடியாகும். ஸ்லீப்பர் அல்லது ஏசி பெட்டிகளில் பயணிக்க முன்பதிவு அவசியம். இந்த வகுப்புகளில் இருக்கைகள் காலியாக இருந்தால், டிக்கெட் பிரசோதகரிடம் கூடுதல் கட்டணம் செலுத்தி பயணச் சீட்டை பெறலாம். இதே விதிகள் காத்திருப்போர் பட்டியலில் உள்ள பயணிகளுக்கும் பொருந்தும்.
அதற்கான அபராதம் என்ன?
காத்திருப்போர் பட்டியல் பயணச் சீட்டு வைத்திருப்பவர்கள் பொதுப் பெட்டிகளில் பயணிக்கலாம், ஆனால் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளில் பயணிக்க அனுமதி இல்லை. பல பயணிகள் இந்த விதிகள் தெரியாத காரணத்தினாலேயே அவற்றை மீறுகின்றனர். பொதுப் பயணச் சீட்டுடன் ஸ்லீப்பர் பெட்டியில் பயணித்தால் ரூ.250 அபராதம் விதிக்கப்படும், அதே சமயம் ஏசி பெட்டியில் பயணித்தால் ரூ.440 வரை அபராதம் விதிக்கப்படலாம்.
இதையும் படிக்க : ஆதார் கார்டு மூலம் வங்கி கணக்கில் இருந்து பணத்தை திருட முடியுமா?.. UIDAI கூறுவது இதுதான்!
கூடுதலாக, பயணிகள் பொதுப் பெட்டிக்குச் செல்லுமாறு அறிவுறுத்தப்படுவார்கள். ரயிலில் பயணிக்கும்போது இந்த விதிமுறைகளைத் தெரிந்துகொள்வது அவசியம். இல்லையெனில், கடுமையான அபராதம் மற்றும் பயண தொடர்பான சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம். ரயில்வே விதிமுறைகளை முன்கூட்டியே தெரிந்துகொள்வது, சிரமமற்ற பயணத்தை உறுதி செய்கிறது. இதனை தெரிந்துகொள்வது ரயில் பயணங்களின் போது ஏற்படும் சிரமங்களை தவிர்க்க உதவும்.