AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

30 முதல் 50 வரை.. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒருவர் எப்படி சேமிக்க வேண்டும்!

Saving Rules For 30 To 50 | மனிதர்களுக்கு எப்போதும் நிதி தேவை இருந்துக்கொண்டே இருக்கும். அதுவும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான தேவை இருக்கும். எனவே அந்த அந்த காலக்கட்டத்திற்கு ஏற்ப தேவையான அளவு பணத்தை சேமிக்க வேண்டும்.

30 முதல் 50 வரை.. ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒருவர் எப்படி சேமிக்க வேண்டும்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 12 Jun 2026 19:28 PM IST

ஆண்டுகள் செல்ல செல்ல விலைவாசி உயர்வு, பணவீக்கம் உள்ளிட்ட சிக்கல்கள் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதன் காரணமாக ஒருவர் சேமிப்பு (Saving) அல்லது முதலீடு (Investment) செய்ய வேண்டும் என்பது கட்டாயமாக உள்ளது. அதாவது ஒவ்வொரு காலக்கட்டத்திற்கும் ஏற்ப முதலீடு செய்ய வேண்டியதாக உள்ளது. இந்த நிலையில், ஒருவர் தனது எதிர்காலத்திற்காக தனது 30, 40 மற்றும் 50 வயதுகளில் எப்படி முதலீடு செய்ய வேண்டும் என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

ஒருவர் தனது 30, 40 மற்றும் 50 வயதுகளில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

ஒவ்வொரு காலக்கட்டத்திலும் ஒவ்வொரு விதமான தேவைகள் இருக்கும். அதற்கு ஏற்ப முதலீடு செய்வது சிறந்ததாக இருக்கும்.

30 வயதில் முதலீடு செய்வது எப்படி?

30 வயது உள்ள ஒரு நபருக்கு திருமணம் செய்ய வேண்டும், வீடு வாங்க வேண்டும், அவசர கால நிதியை உருவாக்க வேண்டும். இவையெல்லாம் முக்கியமான கொள்கைகளாக இருக்கும். எனவே அதனை மையப்படுத்தி சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். அதற்கு ஆண்டு வருமானத்தில் 1.5 முதல் 2.5 மடங்கு வரை சேமிக்க வேண்டும். அதாவது ஒருவர் ஆண்டுக்கு ரூ.15 லட்சம் வருமானம் பெறுகிறார் என்றால் அவர் ரூ.22.5 லட்சம் முதல் ரூ.37.5 லட்சம் வரை சேமிக்க வேண்டும்.

இதையும் படிங்க : ரூ.3,500 முதலீட்டில் ரூ.2.5 லட்சம் பெறலாம்.. இந்த சூப்பரான திட்டத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

40 வயதில் முதலீடு செய்வது எப்படி?

40 வயதுடைய ஒருவருக்கு குடும்ப பொறுப்புகள் அதிகமாக இருக்கும். உதாரணமாக பிள்ளைகளின் கல்வி செலவு, வீட்டுக்கான கடன், மாத தவணைகள் என பல இருக்கும். இத்தகைய செலவுகளை சமாளிக்க ஆண்டு வருமானத்தில் இருந்து 3 முதல் 5 மடங்கு வரை எடுத்து வைக்க வேண்டும்.

இதையும் படிங்க : ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே நாளில்.. ஜூன் 13 ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க!

50 வயதில் எப்படி முதலீடு செய்ய வேண்டும்?

50 வயதில் ஒருவர் பிள்ளைகளின் உயர் கல்வி, திருமணம், பெற்றோரின் மருத்துவ செலவு, தங்களுக்கான மருத்துவ செலவு, ஓய்வு காலம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு சேமிப்பு அல்லது முதலீடு செய்ய வேண்டும். அதற்கு அவர்கள், தங்களது ஆண்டு வருமானத்தில் 6 முதல் 10 மடங்கு சேமித்து வைத்திருக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us