ஈரான் போரால் சரிவை சந்திக்கும் தங்கம் விலை.. காரணம் என்ன?
Gold Price Is Falling Continuously | மேற்கு ஆசியா போர் காரணமாக தங்கம் விலை நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. குறிப்பாக ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் விலை மிக கடுமையான சரிவை சந்தித்து வருகிறது.
மேற்கு ஆசியா போர் (West Asia War) காரணமாக தங்கம் மற்றும் வெள்ளி விலை (Gold and Silver Price) நாளுக்கு நாள் மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. ஆனால், ஜூன் மாதம் தொடங்கியது முதலே தங்கம் மிக கடும் சரிவை சந்தித்து வருகிறது. அதிலும் குறிப்பாக கடந்த இரண்டு நாட்களாக மிக கடுமையான விலை சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக ஒரு கிராம் தங்கம் ரூ.13,500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. போரின் தொடக்கத்தில் ரூ.15,000-க்கு விற்பனை செய்யப்பட்டு வந்த தங்கம், தற்போது ரூ.13,500 ஆக குறைந்துள்ளது. இந்த நிலையில், தங்கம் விலை தொடர் சரிவை சந்திக்க காரணம் என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
ஈரான் போர் காரணமாக தொடர் சரிவை சந்தித்து வரும் தங்கம்
பிப்ரவரி 28, 2026 ஈரான் போர் தொடங்கியது முதலே தங்கம் விலை மிக கடுமையான ஏற்ற, இறக்கங்களை சந்தித்து வருகிறது. இந்த நிலையில் தான் மே மாதத்தில் தங்கம் விலை சற்று உயர்வை சந்தித்தது. காரணம், ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே அப்போது அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையே மீண்டும் அமைதி உருவாகும் பட்சத்தில் கச்சா எண்ணெய் விலை குறைய தொடங்கும் என்பதால் முதலீட்டாளர்கள் அப்போது தங்கத்தில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டினர். இதன் காரணமாக தங்கம் விலை அப்போது சற்று உயர்வை சந்தித்தது.
இதையும் படிங்க : இரண்டு நாட்களில் ரூ. 5,600 குறைந்த தங்கம் விலை.. ஒரு சவரன் எவ்வளவு தெரியுமா?




மீண்டும் கடும் சரிவை சந்திக்கும் தங்கம்
ஆனால், அப்போது இரு நாடுகளுக்கும் இடையே அமைதி ஏற்படவில்லை. இதற்கிடையே ஈரான் மீதான தாக்குதலை நிறுத்தி வைத்திருந்த அமெரிக்கா, மீண்டும் ஈரானை தாக்கும் வேலைகளை செய்து வருகிறது. குறிப்பாக ஈரானின் பல்வேறு பகுதிகளை குறி வைத்து ஈரான் வான்வழி தாக்குதலை நடத்தி வருகிறது. இதன் காரணமாக மீண்டும் சர்வதேச அளவில் பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்வை சந்திக்கும் சூழல் உருவாகியுள்ளதால் மீண்டும் முதலீட்டாளர்களின் கவனம் கச்சா எண்ணெயின் மீது திரும்பியுள்ளது. இதன் காரணமாக மீண்டும் தங்கம் விலை சரிவை சந்தித்து வருகிறது.