கார் விலை உயர்வு – பழைய விலையிலேயே கார் வாங்க வேண்டுமா? மாருதி சுசூகியின் புதிய திட்டம்
புதிய கார்கள் வாங்குபவர்களுக்கு குறிப்பாக விலை குறைந்த விலையுள்ள கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு பிரைஸ் புரொடக்சன் ஸ்கீம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஜூன் 14, 2026க்குள் கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, கார்களின் விலை உயர்ந்தாலும் அதன் தாக்கம் அவர்களுக்கு இருக்காது.
இந்தியாவின் மிகப்பெரிய கார் விற்பனை நிறுவனமான மாருதி சுசூகி ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. குறிப்பாக சிறிய கார்கள் வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு இந்த அறிவிப்பு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அதன்படி வருகிற ஜூன் 2026 முதல் கார் விலை உயரவுள்ள நிலையில், அதற்கு முன்பாக சிறிய கார் வாங்குபவர்களுக்கு ஒரு சலுகையை அறிவித்துள்ளது. பிரைஸ் புரொடக்சன் திட்டம் (Price Protection Scheme) என்ற புதிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
மாருதி சுசூகியின் புதிய திட்டம்
இந்த திட்டத்தின் மூலம், ஆல்டோ கே10, எஸ்-பிரஸ்ஸோ, செலிரியோ மற்றும் வேகன் ஆர் போன்ற சிறிய கார்களை வாங்க விரும்பும் வாடிக்கையாளர்கள் ஜூன் 14, 2026க்கு முன்பாக முன்பதிவு செய்தால், விலை உயர்ந்தாலும் பழைய விலையிலேயே கார் வாங்க முடியும் என அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : வங்கி கணக்கில் மினிமம் பேலன்ஸை பராமரிப்பதன் 5 முக்கிய நன்மைகள்




மூலப்பொருட்களின் விலை உயர்வு, உற்பத்தி செலவுகள் அதிகரிப்பு மற்றும் பணவீக்கம் போன்ற காரணங்களால் மாருதி சுசூகி நிறுவனம் தனது கார்களின் விலையை உயர்த்த முடிவு செய்துள்ளது. இது தொடர்பாக கடந்த மே, 2026 மாதம் இது தொடர்பாக ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதன் படி வருகிற ஜூன், 2026 மாதம் முதல் கார்களின் விலை ரூ.30 வரை உயர்த்தப்படலாம் என அறிவித்திருந்தது. கார் மாடல்களை பொறுத்து விலை உயர்வு மாறுபடும் என மாருதி சுசூகி தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் புதிய கார்கள் வாங்குபவர்களுக்கு குறிப்பாக விலை குறைந்த விலையுள்ள கார்களை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு பிரைஸ் புரொடக்சன் ஸ்கீம் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி ஜூன் 14, 2026க்குள் கார்களை முன்பதிவு செய்யும் வாடிக்கையாளர்களுக்கு, கார்களின் விலை உயர்ந்தாலும் அதன் தாக்கம் அவர்களுக்கு இருக்காது.
உதாரணமாக ஜூன் 10, 2026 அன்று நீங்கள் கார் ஒன்றை முன்பதிவு செய்கிறீர்கள் என வைத்துக்கொண்டால், உங்களுக்கு கார் 10 நாட்கள் கழித்து ஜூன் 20, 2026 அன்று டெலிவரி கிடைக்கிறது என தெரிவிக்கப்படுகிறது என வைத்துக்கொள்ளலாம். ஒருவேளை ஜூன் 15, 2026க்கு பிறகு விலை உயர்ந்தாலும், நீங்கள் முன்பதிவு செய்தபோது என்ன விலையோ அதன் படியே நீங்கள் கார்களை வாங்கலாம். இந்த சலுகை ஜூன் 14, 2026 வரை மட்டுமே கிடைக்கும்.
இதையும் படிக்க : இனி பிஎஃப் கணக்கில் இருந்து முழு தொகையையும் எடுக்கலாம்.. ஆனால் சில Conditions!
இதற்கிடையில் மாருதி சுசூகி சுஹானா சஃபர் என்ற புதிய திட்டத்தையும் அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி வாடிக்கையாளர்கள் 3 முதல் 6 மாதங்கள் வரை ஆர்டி கணக்கில் பணம் சேமிக்கலாம். பின்னர் தாங்கள் சேமித்த தொகையை கார் லோனுக்கான முன்பணமாக பயன்படுத்தலாம். பின்னர் அதே வங்கியில் கார் லோன் பெற்று மாருதி சுசூகி கார்களை வாங்கலாம்.