இனி பிஎஃப் கணக்கில் இருந்து முழு தொகையையும் எடுக்கலாம்.. ஆனால் சில Conditions!
Users Can Withdraw Full Money PF Account | பிஎஃப் கணக்கில் இருந்து ஊழியர்கள் தங்களது முழு பணத்தையும் எடுத்துக்கொள்ள ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் சில தளர்வுகளை அறிவித்துள்ளது. இந்த நிலையில், எந்த எந்த காரணங்களுக்காக பிஎஃப் பணத்தை எடுக்கலாம் என்பது குறித்து பார்க்கலாம்.
ஊழியர் வருங்கால வைப்புநிதி அமைச்சகத்தில் (EPFO – Employee Provident Fund Organization) ஊழியர்களின் பெயர்களில் கணக்கு தொடங்கப்பட்டு அதில் மாதம் மாதம் குறிப்பிட்ட தொகை வரவு வைக்கப்படுகிறது. இந்த பணத்தை ஊழியர்களுக்கு எடுக்க அனுமதி உள்ளது. ஆனால், பிஎஃப் கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் எடுக்க முடியாது. இந்த நிலையில் தான், பிஎஃப் கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் எடுத்துக்கொள்ள ஒருசில தளர்வுகளை ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகம் அறிமுகம் செய்துள்ளது. அவை என்ன என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.
பிஎஃப் கணக்கில் இருந்து 100% பணத்தை எடுத்துக்கொள்ள தளர்வு
ஊழியர் வருங்கால வைப்பு நிதி அமைச்சகத்தில் இருந்து ஊழியர்கள் தங்களது பணத்தை எடுக்க வேண்டும் என்றால் குறைந்தது 6 முதல் 10 நாட்கள் வரை காத்திருக்க வேண்டிய சூழல் உள்ளது. இந்த நிலையில் தான், ஊழியர்கள் அவசர தேவைக்கு பணத்தை எடுத்துக்கொள்ள வழிவகை செய்யும் வகையில், யுபிஐ மூலம் பிஎஃப் பணத்தை எடுக்கும் அம்சம் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கான இறுதிக்கட்ட சோதனைகள் நிறைவு பெற்றதாக அமைச்சர் மன்சுக் மாண்டவியா சமீபத்தில் கூறியிருந்தார். இந்த நிலையில் தான், பிஎஃப் கணக்கில் இருந்து 100 சதவீதம் பணம் எடுப்பதற்கான சில தளர்வுகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : பிளிப்கார்டின் End Of Season Sale.. பியூட்டி பிராடக்ட்ஸ் முதல் மின்சாத பொருட்கள் வரை அசத்தல் தள்ளுபடி!
புதிய விதிகள் கூறுவது என்ன?
பெரும்பாலான நபர்களுக்கு பிஎஃப் தான் முதன்மை சேமிப்பாக உள்ளது. இதன் காரணமாக அவர்களுக்கு பண தேவை ஏற்படும்போது பிஎஃப் சேமிப்பு உதவி வருகிறது. இந்த நிலையில் தான், பிஎஃப் கணக்கில் இருந்து மொத்த பணத்தையும் எடுக்க சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளது.
- நீங்கள் பணி செய்யும் நிறுவனம் 15 நாட்களுக்கு மேல் மூடப்பட்டு உங்களுக்கு மாத சம்பளம் வராமல் இருந்தால் நீங்கள் 100 சதவீதம் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
- இரண்டு மாதங்களுக்கு மேலாக சம்பளம் இல்லாமல் இருக்கும் சூழலில் நீங்கள் பிஎஃப் பணத்தை எடுத்துக்கொள்ளலாம்.
- 6 மாதங்களுக்கும் மேலாக உங்கள் நிறுவனம் மூடப்பட்டு நீங்கள் மற்றொரு வேலையை கண்டுபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் முழு தொகையையும் எடுக்க அனுமதி வழங்கப்படும்.
- உங்களுக்கோ அல்லது உங்களது குடும்ப உறுப்பினருக்கோ மிக கடுமையான உடல்நல சிக்கல் இருந்தால் உங்கள் பிஎஃப் பணத்தை நீங்கள் 100 சதவீதம் எடுத்துக்கொள்ளலாம்.
இதையும் படிங்க : எஸ்ஐபி மியூச்சுவல் ஃபண்ட் முதலீட்டின் உண்மை நிலவரம் இதுதான்.. முதலீட்டுக்கு முன்பு தெரிந்துக்கொள்ளுங்கள்!
மேற்குறிப்பிடப்பட்டுள்ள இந்த காரணங்களுக்காக நீங்கள் பிஎஃப் கணக்கில் இருந்து 100 சதவீதம் பணத்தை எடுத்துக்கொள்ள அனுமதி வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.