AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

வீட்டிலேயே நாவில் எச்சில் ஊறும் சுவையான தேங்காய்ப் பால் சட்னி

பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, பச்சை மிளகாய் மற்றும் சீரகத்தூள் ஆகியவற்றைத் தேங்காய்ப் பாலுடன் சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைத்துக்கொள்ள வேண்டும். பின்னர், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துச் சட்னியைத் தளரக் கரைத்து, வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு, கறிவேப்பிலை, வரமிளகாய் மற்றும் பெருங்காயம் தாளித்துச் சட்னியில் கொட்ட வேண்டும்.

Sivasankari Bose
Sivasankari Bose | Published: 14 Aug 2026 22:36 PM IST
ருசியான தேங்காய்ப் பால் சட்னி அரைப்பதற்கு முதலில் ஒரு கப் கெட்டியான தேங்காய்ப் பால் மற்றும் கால் கப் பொட்டுக்கடலையை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் சுவைக்கேற்ப உப்பு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி தழை, நான்கு பற்கள் பூண்டு ஆகியவை மிக முக்கியமானவை ஆகும்.
க காரத்திற்காக இரண்டு பச்சை மிளகாய்களையும், நறுமணத்திற்காகவும் செரிமானத்திற்காகவும் அரை டீஸ்பூன் சீரகத் தூளையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

ருசியான தேங்காய்ப் பால் சட்னி அரைப்பதற்கு முதலில் ஒரு கப் கெட்டியான தேங்காய்ப் பால் மற்றும் கால் கப் பொட்டுக்கடலையை எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும். இதனுடன் சுவைக்கேற்ப உப்பு, ஒரு சிறிய துண்டு இஞ்சி, சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி தழை, நான்கு பற்கள் பூண்டு ஆகியவை மிக முக்கியமானவை ஆகும். க காரத்திற்காக இரண்டு பச்சை மிளகாய்களையும், நறுமணத்திற்காகவும் செரிமானத்திற்காகவும் அரை டீஸ்பூன் சீரகத் தூளையும் தயாராக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.

1 / 5
தேங்காய்ப் பாலைத் தவிர சட்னிக்குத் தேவையான பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட வேண்டும்.
இதனுடன் அரை டீஸ்பூன் சீரகத் தூளையும் சேர்த்து, முதலில் அனைத்துப் பொருட்களையும் நன்றாக ஒன்றுசேருமாறு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு தயாராக வைத்துள்ள ஒரு கப் தேங்காய்ப் பாலை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பையும் காரத்தையும் சரிபார்த்துச் சேர்க்க வேண்டும்.

தேங்காய்ப் பாலைத் தவிர சட்னிக்குத் தேவையான பொட்டுக்கடலை, இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி மற்றும் பச்சை மிளகாய் ஆகியவற்றை மிக்ஸி ஜாரில் போட வேண்டும். இதனுடன் அரை டீஸ்பூன் சீரகத் தூளையும் சேர்த்து, முதலில் அனைத்துப் பொருட்களையும் நன்றாக ஒன்றுசேருமாறு மிக்ஸியில் அரைத்துக் கொள்ள வேண்டும். அதன்பிறகு தயாராக வைத்துள்ள ஒரு கப் தேங்காய்ப் பாலை மிக்ஸி ஜாரில் சேர்த்து தேவையான அளவு உப்பையும் காரத்தையும் சரிபார்த்துச் சேர்க்க வேண்டும்.

2 / 5
இந்தத் தேங்காய்ப் பால் சட்னியானது மிகவும் கெட்டியாக இல்லாமல் சற்றுத் தண்ணீர் பதத்தில் லேசாக இருக்கும்படி அமைவதே மிகச் சிறந்த சுவையைத் தரும்.
எனவே தேவையான அளவு சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து லேசாக அரைத்து, அரைத்த சட்னியை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும்.
தேங்காய்ப் பாலின் இயல்பான கெட்டித்தன்மையைச் சரிசெய்து சரியான பதத்திற்கு கொண்டு வர இந்தத் தண்ணீர் சேர்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

இந்தத் தேங்காய்ப் பால் சட்னியானது மிகவும் கெட்டியாக இல்லாமல் சற்றுத் தண்ணீர் பதத்தில் லேசாக இருக்கும்படி அமைவதே மிகச் சிறந்த சுவையைத் தரும். எனவே தேவையான அளவு சிறிதளவு தண்ணீரைச் சேர்த்து லேசாக அரைத்து, அரைத்த சட்னியை ஒரு அகலமான பாத்திரத்திற்கு மாற்றிக் கொள்ள வேண்டும். தேங்காய்ப் பாலின் இயல்பான கெட்டித்தன்மையைச் சரிசெய்து சரியான பதத்திற்கு கொண்டு வர இந்தத் தண்ணீர் சேர்ப்பு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

3 / 5
அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாகச் சூடேறும் வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும்.
எண்ணெய் சூடானதும் ஒரு டீஸ்பூன் கடுகு போட்டு பொரிந்த பின், சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் மூன்று வர மிளகாய்களைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
இறுதியில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூளைச் சேர்த்து எண்ணெயில் லேசாக வதக்கி உடனடியாக அடுப்பை அணைத்து விட வேண்டும்.

அடுப்பில் ஒரு சிறிய கடாயை வைத்து அதில் தேவையான அளவு எண்ணெய் ஊற்றி நன்றாகச் சூடேறும் வரை சிறிது நேரம் காத்திருக்க வேண்டும். எண்ணெய் சூடானதும் ஒரு டீஸ்பூன் கடுகு போட்டு பொரிந்த பின், சிறிதளவு கறிவேப்பிலை மற்றும் மூன்று வர மிளகாய்களைச் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். இறுதியில் ஒரு சிட்டிகை பெருங்காயத்தூளைச் சேர்த்து எண்ணெயில் லேசாக வதக்கி உடனடியாக அடுப்பை அணைத்து விட வேண்டும்.

4 / 5
தாளித்த பின் மணக்க மணக்கத் தயாராக இருக்கும் இந்தத் தேங்காய்ப் பால் சட்னியைச் சூடான உணவுகளுடன் பரிமாறலாம்.
குறிப்பாக ஆவியில் வெந்த சூடான இட்லி, மெலிதான மொறுமொறு தோசை அல்லது சுவையான ஆப்பத்துடன் இந்தச் சட்னியைச் சேர்த்துச் சாப்பிடலாம்.
இந்த அருமையான உணவுகளுடன் தேங்காய்ப் பால் சட்னியைச் சேர்த்துச் சாப்பிடும்போது அதன் காம்பினேஷன் மிகவும் அட்டகாசமாகவும் ருசியாகவும் இருக்கும்.
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு எளிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவுச் சட்னி இதுவாகும்.

தாளித்த பின் மணக்க மணக்கத் தயாராக இருக்கும் இந்தத் தேங்காய்ப் பால் சட்னியைச் சூடான உணவுகளுடன் பரிமாறலாம். குறிப்பாக ஆவியில் வெந்த சூடான இட்லி, மெலிதான மொறுமொறு தோசை அல்லது சுவையான ஆப்பத்துடன் இந்தச் சட்னியைச் சேர்த்துச் சாப்பிடலாம். இந்த அருமையான உணவுகளுடன் தேங்காய்ப் பால் சட்னியைச் சேர்த்துச் சாப்பிடும்போது அதன் காம்பினேஷன் மிகவும் அட்டகாசமாகவும் ருசியாகவும் இருக்கும். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் மிகவும் விரும்பி உண்ணக்கூடிய ஒரு எளிய மற்றும் ஆரோக்கியமான காலை உணவுச் சட்னி இதுவாகும்.

5 / 5
Follow Us