AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பிஎஃப் உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் இலவச காப்பீடு! பலருக்கும் தெரியாத EPFO திட்டம்

பிஎஃப் உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் அளவுக்கு இலவச இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பணியில் இருக்கும்போது ஊழியர் உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு அல்லது அவர் நாமினியாக நியமிக்கப்பட்ட நபருக்கு இந்த காப்பீடு வழங்கப்படும். அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

பிஎஃப் உறுப்பினர்களுக்கு ரூ.7 லட்சம் இலவச காப்பீடு! பலருக்கும் தெரியாத EPFO திட்டம்
மாதிரி புகைப்படம்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 10 Jun 2026 16:03 PM IST

அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாற்றும் ஊழியர்களுக்கு மாதந்தோறும் அவர்கள் ஊதியத்தில் இருந்து ஒரு குறிப்பிட்ட தொகை பிடிக்கப்பட்டு அது பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும். மேலும் அதே அளவுக்கான தொகையை நிறுவனமும் பிஎஃப் கணக்கில் செலுத்தப்படும். இது அவர்களின் எதிர்காலத்தில் அவசர பணத்தேவைகளுக்கு உதவும். மேலும் பணியாளர் ஓய்வு பெறும்போது ஓய்வூதியமாக ஒரு குறிப்பிட்ட பணம் செலுத்தப்படும். இது மட்டுமல்லாமல் பிஎஃப் உறுப்பினர்களுக்கு எந்த வித கூடுதல் பிரீமியமும் செலுத்தாமல் ரூ.7 லட்சம் வரை ஆயுள் காப்பீடு வழங்கப்படுகிறது என்பது பலருக்கு தெரியாது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இடிஎல்ஐ (Employees Deposit Linked Insurance Scheme) என்ற திட்டத்தின் மூலம் பிஎஃப் உறுப்பினர்களுக்கு இலவச இன்சூரன்ஸ் வழங்கப்படுகிறது. இதன் மூலம் பணியில் இருக்கும்போது ஊழியர் உயிரிழந்தால் அவரது குடும்பத்தினருக்கு அல்லது அவர் நாமினியாக நியமிக்கப்பட்ட நபருக்கு இந்த காப்பீடு வழங்கப்படும். அதாவது பணியின்போது ஊழியர் இறந்தால், இந்த காப்பீடு அவரது குடும்பத்தை நிதி அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

இதையும் படிக்க : தொழில்நுட்ப வளர்ச்சிக்கு ஏற்ப PRS-ல் புதிய மாற்றத்தை மேற்கொள்ளும் இந்திய ரயில்வே.. 40 ஆண்டுகளில் இல்லாத புதிய மாற்றம்!

இந்த திட்டத்தின் சிறப்பு என்ன?

  • தனியாக காப்பீடு எடுக்க தேவையில்லை
  • பிரீமியம் செலுத்த வேண்டியதில்லை
  • மருத்துவ பரிசோதனை தேவையில்லை
  • பிஎஃப் உறுப்பினராக இருக்கும் வரை தானாகவே இந்த காப்பீடு கிடைக்கும்.

ஊழியர் பிஎஃப் உறுப்பினராக இருக்க வேண்டும். பணியில் இருக்கும் காலத்தில் மரணம் ஏற்பட்டிருக்க வேண்டும். நிறுவனத்தால் பிஎஃப் பங்களிப்பு தொடர்ந்து செலுத்தப்பட்டிருக்க வேண்டும்.

ரூ.7 லட்சம் காப்பீடு எப்படி கணக்கிடப்படுகிறது?

காப்பீட்டு தொகை இரண்டு பகுதிகளின் அடிப்படையில் கணக்கிடப்படுகிறது. கடந்த 12 மாதங்களின் சராசரி சம்பளத்தின் 35 மடங்கு. சம்பள வரம்பு ரூ.15,000 வரை மட்டுமே கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். அதாவது 15,000 × 35 = ரூ.5.25 லட்சம் என்று கணக்கிடப்பட்டும். இல்லையெனில் பிஎஃப் இருப்புத் தொகையின் 50 சதவிகிதம் வழங்கப்படும். அதாவது, கடந்த 12 மாதங்களில் சராசரியா பிஎஃப் இருப்பின் 50 சதவிகிதம் வழங்கப்படும். இதில் அதிகபட்ச வரம்பு ரூ.1, 75,000 ஆகும.

ஒரு ஊழியருக்கு குறைந்தபட்சமாக ரூ.2.5 லட்சம் வரை கிடைக்கும். ஒரு ஊழியரின் பிஎஃப் இருப்பு ரூ.50,000க்கும் குறைவாக இருந்தால், ரூ.50,000 குறைந்தபட்ச காப்பீடு வழங்கப்படும். பிஎஃப் உறுப்பினர் இறந்தால், நாமினியாக நியமிக்கப்பட்டவர், அல்லது சட்டபூர்வ வாரிசுகள் இந்த காப்பீட்டு தொகையை பெற முடியும்.

இதையும் படிக்க : பிளிப்கார்டின் End Of Season Sale.. பியூட்டி பிராடக்ட்ஸ் முதல் மின்சாத பொருட்கள் வரை அசத்தல் தள்ளுபடி!

அதற்கு இறப்பு சான்றிதழ், ஃபார்ம் 5 1F, வங்கி கணக்கு விவரங்கள், தோவைப்பட்டால் வாரிசு சான்றிதழை சமர்பிக்க வேண்டும். இந்த ஆவணங்களை ஊழியர் பணியாற்றிய நிறுவனத்தின் மூலமாகவோ அல்லது நேரடியாக இபிஎஃப்ஓ அலுவலகத்திலோ சமர்பிக்கலாம். இதற்கு ஊழியர் தங்கள் UAN நம்பர், பிஎஃப் கணக்கு விவரங்களை குடும்பத்தினரிடம் தெரியப்படுத்த வேண்டும்.

பலர் பிஎஃப் என்பது வெறும் ஓய்வூதியமாக மட்டுமே பார்க்கின்றனர். ஆனால் அதனுடன் ரூ.7 லட்சம் வரை இலவசமாக ஆயுள் காப்பீடும் வழங்கப்படுகிறது. எதிர்பாராத நேரங்களில் ஊழியர் இறந்தால் அவர்களுக்கு இந்த காப்பீடு நிதி பாதுகாப்பை வழங்கும்.

 

Follow Us