AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஓய்வு காலத்தில் பொருளாதார பாதுகாப்பு.. இப்படி பிளான் பண்ணுங்க!

How To Attain Financial Stability After Retirement | ஓய்வு காலத்திற்கு பிறகு பலருக்கும் பொருளாதார பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாக மாறிவிடுகிறது. இந்த நிலையில் தான், ஓய்வு பெறுவதற்கு முன்பு ஒருவர் தனது 50 வயது முதலே என்ன என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து பார்க்கலாம்.

ஓய்வு காலத்தில் பொருளாதார பாதுகாப்பு.. இப்படி பிளான் பண்ணுங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 07 Jun 2026 22:04 PM IST

நிலையான பொருளாதாரமும், வருமானமும் அனைத்து தரப்பினருக்கும் மிகவும் அவசியமானதாக உள்ளது. 20 வயது இளைஞர்கள் முதல் 80 வயது முதியவர்கள் வரை என அனைவருக்கும் எப்போது பண தேவை இருந்துக்கொண்டே இருக்கும். அதனை சமாளிக்க நிலையான பொருளாதாரத்தை உருவாக்க வேண்டியது கட்டயாம். மனிதர்களுக்கு ஒரு குறிப்பிட்ட வயதுக்கு மேல் வருமானம் குறைந்துவிடும். இந்த சூழலில அவர்கள் மிக கடுமையான நிதி நெருக்கடிகளை சந்திக்க நேரிடும். எனவே தான் முதுமை காலத்தை கருத்தில் கொண்டு பொருளாதார பாதுகாப்பை உருவாக்குவது மிகவும் அவசியமான ஒன்றாக உள்ளது. இந்த நிலையில், 50 வயதுக்கு மேற்பட்டவர்கள் தாங்கள் வாழ்நாள் முழுவதும் சேமித்த பணத்தை எப்படி முதலீடு செய்வது என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

சேமித்த பணத்தை பாதுகாப்பாக முதலீடு செய்வது எப்படி?

50 வயது என்பது ஓய்வு காலத்தை நெருங்கும் வயதாகும். பெரும்பாலும் 60 வயதுக்கு மேல் எந்த நிறுவனங்களில் வேலை செய்ய முடியாது. எனவே, ஓய்வு காலத்தை கருத்தில் கொண்டு அதற்கு ஏற்ப நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியமாக உள்ளது.

அவசரகால நிதியை உருவாக்குவது

முதுமை காலத்தில் திடீர் மருத்துவ செலவுகள் ஏற்படுவதற்கான அதிக வாய்ப்புகள் உள்ளன. எனவே, ஓய்வு காலத்திற்கு முன்பாக 6 முதல் 12 மாதத்திற்கான குடும்ப செலவுகளை சேமிப்பு கணக்கு அல்லது லிக்விட் ஃபண்டுகளில் வைத்துக்கொள்ள வேண்டியது அவசியம் ஆகும்.

இதையும் படிங்க : 10 ஆம் தேதிக்குள்ளாகவே சம்பளம் காலியாகிவிடுகிறதா?.. இந்த சில டிப்ஸ் பின்பற்றுங்கள்!

மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டங்கள்

பணி ஓய்வுக்கு பிறகு நிதி பாதுகாப்பு பெறும் வகையிலும், மாத மாதம் வருமானம் பெறும் வகையிலும் அரசு பல வகையான சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. குறிப்பாக மூத்த குடிமக்கள் சேமிப்பு சான்றிதழ் உள்ளிட்ட திட்டங்களில் முதலீடு செய்து பாதுகாப்பான ஓய்வு காலத்தை உருவாக்கலாம்.

இதையும் படிங்க : ஓய்வு காலம் குறித்த கவலையே வேண்டாம்.. மாதம் ரூ.20,500 வருமானம் பெறலாம்.. இந்த அசத்தல் திட்டம் குறித்து தெரிந்துக்கொள்ளுங்கள்!

கடன்கள் இல்லாமல் இருப்பது

60 வயதுக்கு மேல் வருமானம் இல்லாமல் போவது அல்லது வருமானம் குறையும் நிலையில், கடன்கள் இல்லாத சூழலை உருவாக்க வேண்டும். காரணம், கடன் இருந்தால் நிதி சிக்கல் ஏற்பட்டுவிடும். எனவே ஓய்வுக்கு முன்னதாகவே அனைத்து கடன்களையும் அடைத்துவிடுவது சிறந்ததாக இருக்கும்.

Follow Us