AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

10 ஆம் தேதிக்குள்ளாகவே சம்பளம் காலியாகிவிடுகிறதா?.. இந்த சில டிப்ஸ் பின்பற்றுங்கள்!

Monthly Salary Utilization Tips | சம்பளம் வாங்கும் பெரும்பாலான நபர்கள் சந்திக்கும் முக்கிய பிரச்னையாக உள்ளதுதான் பணம் மிக விரைவாக செலவாவது. இந்த நிலையில், எவ்வாறு பணத்தை முறையாக செலவு செய்வது, தேவையற்ற செலவுகளை குறைப்பது என்பது குறித்து பார்க்கலாம்.

10 ஆம் தேதிக்குள்ளாகவே சம்பளம் காலியாகிவிடுகிறதா?.. இந்த சில டிப்ஸ் பின்பற்றுங்கள்!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 06 Jun 2026 20:03 PM IST

உலகில் வாழும் இளைஞர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவருக்கும் பணம் என்பது அத்தியாவசிய தேவையாக உள்ளது. உணவு, உடை, இருப்பிடம் என அடிப்படை தேவைகளை பெற வேண்டும் என்றாலும் கூட பணம் மிக முக்கிய அம்சமாக உள்ளது. இதன் காரணமாக தான் பலரும் வேலைக்கு சென்று பணத்தை சம்பாதிக்கின்றனர். ஆனால், அவ்வாறு பணத்தை சம்பாதிக்கும் பெரும்பாலான மக்கள் சந்திக்கும் சிக்கல் ஒன்று உள்ளது. அதுதான் சம்பளம் கைக்கு வந்த 10 நாட்களில் மொத்த பணமும் செலவாகிவிடுவது. இது பலரையும் நிதி சிக்கல்களில் சிக்க வைத்துவிடுகிறது. இந்த நிலையில், தேவையற்ற செலவுகளை குறைத்து சம்பள பணத்தை முறையாக கையாள்வது எப்படி என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்.

மாதாந்திர சப்ஸ்கிருப்ஷன்

ஓடிடி தளங்களில் படம் பார்க்கும் பழக்கம் பலருக்கும் உள்ளது. அதன் காரணமாக பலரும் தங்களுக்கு பிடித்தமான ஓடிடி தளங்களுக்கான சப்ஸ்கிருப்ஷன்களை வாங்கி வைத்துக்கொள்கின்றனர். ஆனால், பல நேரங்களில் பெரும்பாலான நபர்கள் அந்த ஓடிடி தளங்களில் படமே பார்க்க மாட்டார்கள். இத்தகைய சூழலில் பலரும் ஓடிடி சப்ஸ்கிருப்ஷனுக்கு ஆட்டோ பே அம்சத்தை தேர்வு செய்துவிடுகின்றனர். அவ்வாறு செய்யும்போது மாதம் மாதம் கண்ணுக்கே தெரியாமல் குறிப்பிட்ட தொகை பிடித்தம் செய்யப்படும். இதனை தடுக்க ஆட்டோ பேமெண்ட் முறையை கேன்சல் செய்துவிட்டு, தேவைப்படும்போது மட்டும் சப்ஸ்கிரைப் செய்துக்கொள்ளலாம்.

இதையும் படிங்க : யுபிஐயில் பேமெண்ட் ஃபெயில் என வந்தும் பணம் எடுக்கப்பட்டதா? எப்படி திரும்ப பெறுவது?

மாதாந்திர பட்ஜெட்

ஒவ்வொரு மாதமும் கைக்கு சம்பளம் வருவதற்கு முன்னதாக அந்த மாத சம்பளத்தில் என்ன செய்ய போகிறோம் என்பது குறித்த திட்டமிடலுக்கு பட்ஜெட் போட வேண்டும். அந்த மாதத்தில் என்ன என்ன தேவைகள் உள்ளது, எவ்வளவு பணம் தேவைப்படும், எவ்வளவு பணம் கையிருப்பில் உள்ளது ஆகியவற்றை தெளிவாக எழுத வேண்டும். இதன் மூலம் எவை தேவையான செலவுகள், எவை தேவையற்றவை என்பதை அறிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப முறையாக பணத்தை செலவு செய்யலாம்.

இதையும் படிங்க : இந்த ஆண்டு பிஎஃப் வட்டி தாமதமாக வரவு வைக்கப்படுமா?.. வெளியான முக்கிய தகவல்!

சேமிப்புக்காக சிறிது பங்களிப்பு

சம்பாதிக்கும் ஒவ்வொருவரும் கட்டாயம் செய்ய வேண்டிய ஒன்றாக சேமிப்பு உள்ளது. இதற்கு ஒரு 50/30/20 என்ற தனி விதியே உள்ளது. அதாவது மாத சம்பளத்தில் 50 சதவீதத்தை வீட்டு வாடகை, உணவு ஆகியவற்றுக்கும், 30 சதவீதத்தை பொழுதுபோக்கு இதர செலவுகளுக்கும் மீதமுள்ள 20 சதவீதத்தை கட்டாயம் சேமிப்புக்காக பயன்படுத்த வேண்டும் என்பதுதான்.

Follow Us