AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே நாளில்.. ஜூன் 13 ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க!

Resolve All Ration Card Issues On One Day | ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளையும் ஒரே நாளில் பெற, ஜூன் 13, 2026 அன்று ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் நடைபெற உள்ளது. உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களுக்கு சென்று சேவைகளை பெற்றுக்கொள்ளலாம்.

ரேஷன் கார்டு தொடர்பான அனைத்து சேவைகளும் ஒரே நாளில்.. ஜூன் 13 ஆம் தேதி மிஸ் பண்ணிடாதீங்க!
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 11 Jun 2026 12:49 PM IST

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் பொதுமக்களுக்கான மிக முக்கிய அம்சமாக உள்ளது ரேஷன் கார்டு (Ration Card). இந்த ரேஷன் கார்டு மூலம் ஏராளமான குடும்பங்கள் பயனடைந்து வருகின்றன. உதாரணமாக, ரேஷன் கார்டு மூலம் இந்தியாவில் உள்ள ஏழை, எளிய குடும்பங்களுக்கு இலவச அரிசி, மானிய விலையில் அரிசி, பருப்பு, சர்க்கரை உள்ளிட்ட உணவு பொருட்கள் வழங்கப்படுகின்றன. இத்தகைய முக்கிய ஆவணமாக ரேஷன் கார்டு உள்ள நிலையில், அது தொடர்பான முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. இதனை மட்டும் செய்து முடிக்கவில்லை என்றால், ரேஷன் கார்டுகள் மூலம் கிடைக்கும் பொருட்கள் கிடைக்காமல் போய்விடும். எனவே, ரேஷன் கார்டு பயனர்கள் இந்த அறிவிப்பு குறித்து கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாக உள்ளது.

ரேஷன்  கார்டில் கேஒய்சி மேற்கொள்ள வேண்டியது கட்டாயம்

ரேஷன் கார்டு தொடர்பான மோசடிகள் அதிகரித்துக்கொண்டே வருகிறது. உதாரணமாக, வருமை கோட்டின் கீழ் உள்ள பொதுமக்கள் பயன்பெறும் வகையில் தான் ரேஷன் கார்டு திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், பொருளாதாரத்தில் உயர்ந்த நிலையில் இருக்கும் பலரும் கூட ரேஷன் கார்டுகளை பயன்படுத்தி இலவச அரிசி உள்ளிட்ட பொருட்களை வாங்கி வருகின்றனர். இதனை தடுக்கும் நோக்கில் தான் அரசு இந்த கேஒய்சி திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

இதையும் படிங்க : காகித ரூபாய் நோட்டுகளுக்கு முற்றுப்புள்ளி?.. அறிமுகமாகும் பிளாஸ்டிக் நோட்டுகள்?.. மத்திய அரசு கொடுத்த விளக்கம்!

அதாவது, ஒரு ரேஷன் அட்டையில் உள்ள அனைத்து குடும்ப உறுப்பினர்களும் தங்களது கை ரேகையை பதிவு செய்து கேஒய்சி மேற்கொள்ள வேண்டும் என்பதுதான் அது. இதன் மூலம் அந்த குடும்பம் தகுதியானதா என்பதை தெரிந்துக்கொண்டு அதற்கு ஏற்ப அரசு நடவடிக்கையை மேற்கொள்ளும். ஒருவேளை கேஒய்சி மேற்கொள்ளவில்லை என்றால் அந்த குடும்பத்திற்கு அரிசி உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படாது.

ஜூன் 13 ஆம் தேதி நடைபெற உள்ள குறை தீர்ப்பு முகாம்

இவ்வாறு ரேஷன் கார்டுகள் தொடர்பான சேவைகளை பெற செயல்படுத்தப்பட்டு வந்த ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம்கள் சட்டமன்ற தேர்தல் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டன. இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் அவை வழக்கம் போல் நடத்தப்பட உள்ளன. அந்த வகையில் ஜூன் மாதத்திற்கான ரேஷன் கார்டு குறை தீர்ப்பு முகாம் ஜூன் 13, 2026 அன்று நடைபெற உள்ளது. அந்த தேதியில் பயனர்கள் ரேஷன் அட்டைகளில் பெயர் சேர்ப்பது, பெயர் நீக்கம் செய்வது, முகவரி மாற்றம், கைபேசி எண் மாற்றம், கேஒய்சி, புதிய ரேஷன் கார்டு விண்ணப்பம் ஆகிய சேவைகளை உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் மண்டல உதவி ஆணையாளர் அலுவலகங்களுக்கு சென்று சேவைகளை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us